டென்மார்க் முக்கிய செய்திகள்

டென்மார்க்கில் மாவீரர் வார நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று 21-11-2012) டென்மார்க்கில் Grindsted நகரில் இயங்கும் தமிழர் கலாச்சார கலையகத்தின் பணிமனையில் வணக்கநிகழ்வு நடைபெற்றது. மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் முதன்மைச் சுடரை டென்மார்க் தமிழ் தேசிய நினைவேந்தல் அகவத்தின் இணைப்பாளரும் மாவீரர் மேயர் சோதியாவின் சகோதரருமான வசந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்வில கலந்துகொண்ட அனைவரும் ஈகச்சுடர்களை ஏற்றினார்கள். மாவீரர்வார வணக்கநிகழ்வு Grindsted தமிழர் கலாச்சார கலையகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த வணக்க நிகழ்வானது மாவீரர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் மாலை 6மணிக்கு ஆரம்பமாவதுடன் மாலை 7 மணி வரை எமக்காக தம்முயிரை அர்பனித்த எம்மாவீரச் செல்வங்களை நினைவில் நிறுத்தி மாவீரர்களுக்கான ஈகச்சுடர்களை அனைவரும் ஏற்றலாம் என ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.