ஒலி-ஒளி சிறப்புச்செய்தி தமிழீழம் முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தேசிய மாவீரர் நாள் அறிக்கை.

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய அதிகாரபூர்வ மாவீரர் நாள் செய்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ மாவீரர் நாள் – 2012

தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/07/12 தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

27/11/ 2012.

அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று மாவீரர் நாள்.

எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.

எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களைக் கொன்றொழிக்கப் படையெடுத்த எதிரிப்படைகளை எதிர்த்துக் களமாடி, தங்கள் உயிரையும் உடலையும் எமக்காய் ஈந்த உத்தமர்களின் நினைவுநாள்.

உலக வரலாறு கண்டிராத பல தியாகங்களையும் சாதனைகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டிருக்கிறதென்றால் அந்த அற்புதங்களை நிகழ்த்தியவர்கள் எமது மாவீரர்களே.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற பெருமை இந்த வீரப் புதல்வர்களையே சாரும். அவர்களது அர்ப்பணிப்பாலேயே எமது போராட்டம் உலக அரங்கில் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளது.

அந்நிய வல்லாதிக்கச் சக்திகளின் துணையோடு எமது மண்மீது பெரும் படையெடுப்பைச் செய்த எதிரியின் முன்னால் மனவலிமையோடு போர்புரிந்த இந்த மாவீரச் செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி, நெய்விளக்கேற்றி வழிபடும் இத்திருநாள், தமிழர்களின் எழுச்சி நாளாகும்.

பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை. எமது மொழியின், இனத்தின், பண்பாட்டு விழுமியங்களின் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவே இவர்கள் போராடப் புறப்பட்டார்கள். எம் மண்மீதும் மக்கள்மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்கள இனவெறி அடக்குமுறைக்கெதிராகவே ஆயுதமேந்திக் களமாடினார்கள்.

இந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும் அவர்களது குடும்பத்தினரும் என்றும் பெருமைக்குரியவர்களே. எமது தேசம் தலைவணங்கி மதிப்பளிக்க வேண்டியவர்களாகவே எமது தேசப்புதல்வர்களின் குடும்பத்தினர் உள்ளார்கள்.

நீதியின் அடிப்படையில் தொடங்கப்பட்டு வளர்ச்சிபெற்ற எமது போராட்டம் ஆயுதவழியில் பரிணமித்தது காலத்தின் கட்டாயத்தாலாகும். வேறு தெரிவுகளற்ற நிலையிலேயே இறுதி வழிமுறையாக ஆயுதவழியை எமது மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். உலகில் நடைபெற்ற, நடந்துகொண்டிருக்கும் அனைத்து ஆயுதவழி விடுதலைப் போராட்டங்களுக்குமுள்ள நியாயத்தன்மை எமது போராட்டத்துக்குமுண்டு.

தர்மத்தின் துணையோடும் எமது மக்களின் பேராதரவோடும் மாவீரர்களின் அதியுட்ச அர்ப்பணிப்போடும் வீறுநடைபோட்டு வளர்ச்சியடைந்து வந்த எமது விடுதலைப் போராட்டம் உலக அரங்கில் முதன்மைக் கவனத்தை ஈர்த்தது. எமது தாயகப்பரப்பின் கணிசமான நிலங்களை மீட்டு மிகப்பலம் பொருந்திய நிலையில் பன்னாட்டுச் சமூகத்தின் அழைப்பையேற்று பேச்சுவார்த்தைக்குச் சென்றோம். நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுக்களில் எந்தவித முன்னேற்றமுமில்லையென்ற நிலையிலும்கூட அமைதிவழியில் தீர்வையெட்டும் எமது அவாவை வெளிப்படுத்தி பொறுமைகாத்து வந்தோம்.

நீண்ட இழுத்தடிப்புக்களின் மத்தியில், எமது இயக்கத்தையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு மத்தியில், தமிழருக்கு எதிரான போருக்கு சிறிலங்கா அரசு தன்னைத் தயார்ப்படுத்தி வந்த நிலையில் நாம் தொடர்ந்தும் சகிப்புத்தன்மையோடு அமைதியாகவிருந்தோம். ஆனால் எமது பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் பலனின்றி எமது மக்கள்மேல் கொடிய போர் தொடுக்கப்பட்டது.

வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் எமது மண்ணை வல்வளைத்து, மக்களைத் துரத்தியடித்து தொடுக்கப்பட்ட போரில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கிலென்று எமது மக்களின் உயிர்கள் கோரமாகப் பலிகொள்ளப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலும் நாம் தற்காப்புப் போர்முறையை மட்டும் கையாண்டுகொண்டு போர்நிறுத்தத்தைக் கோரிக்கொண்டிருந்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக உலகின் முற்றத்திலிறங்கி எமது மக்களைக் காக்க வேண்டி அர்ப்பணிப்பான போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் பல்வேறுபட்ட சக்திகளின் உறுதுணையுடன் முன்னெடுக்கப்பட்ட எமது மக்கள் மீதான கொடியபோர் முள்ளிவாய்க்கால் பேரழிவையே எமது மக்களுக்குத் தந்தது. உலகமே பார்த்திருக்க மிகப்பெரிய மானுட அழிவை எமது மக்கள் சந்தித்தனர்.

போர் முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படும் இந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ்மக்களின் நிலை மிகமிகப் பாரதூரமானளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும்வகையில் பல்வேறு காய்நகர்த்தல்களை சிங்கள தேசம் செய்துகொண்டிருக்கின்றது. தமிழர்களைப் பல்வேறு வழிகளில் அவர்களின் பூர்வீக வதிவிடங்களிலிருந்து வெளியேற்றி வரும் அதேவேளை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அவ்விடங்களில் நிறுவி வருகின்றது. பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட சிங்கள ஆக்கிரமிப்புக்கள் எமது நிலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழரின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. குறிப்பாக தென்தமிழீழத்தில் திட்டமிட்ட வகையில் தமிழ்மக்களின் இனவிகிதாசாரம் குறைக்கப்பட்டு வருகின்றது. இனிவரும் தேர்தல்களில் தமிழர்களுக்குரிய அரசியற் பிரதிநிதித்துவம் அற்றுப்போகும் நிலையே எமது தென்தமிழீழத்தில் காணப்படுகின்றது.

தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் உச்சகட்டமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடாத்தியுள்ளது சிங்கள அரசு. ‘வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழரின் தாயகம்’ என்ற தமிழ்மக்களின் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், தனித் தேசத்துக்கு உரித்துடைய எமது அரசியல் உரிமையை மாகாணசபைக்குக் கீழிறக்கி அரைகுறைவழியில் ஒரு தீர்வைத் திணிப்பதுமே சிங்கள தேசத்தின் கனவாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது.

போர் முடிந்ததாகக் கூறி மூன்றரை ஆண்டுகளான பின்பும்கூட இன்னமும் எமது மக்கள் சிறிலங்காப் படையினரால் சூழப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியான இராணுவச் சூழலிற்குள்ளேயே எமது மக்கள் தமது அன்றாட வாழ்வைக் கழிக்கின்றார்கள். மக்களுக்கான சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காப் படையினரின் அல்லது அவர்களோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களின் தலையீடுகளின்றி சிவில் நிர்வாகம் இயங்கமுடியாத நிலையே இன்றும் காணப்படுகின்றது.

எனினும் இந்த அடக்குமுறைக்குள்ளும் கொடுமைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும்போதும் எமது மக்களின் தாயகவிடுதலைக்கான தாகம் இன்னும் தணியவில்லை. உலக வரலாற்றின் மிகப்பெரும் மனித அவலத்தைச் சுமந்தபடி இருப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சமூகமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எமது மக்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமது விடுதலைத் தாகத்தை வெளிப்படுத்தியபடியேதான் இருக்கிறார்கள். தமது நிலப்பறிப்பை, தம்மீதான அடக்குமுறையை, சிறைக்கைதிகள் மீதான கொலைவெறித் தாக்குதல்களைக் கண்டித்து தமது போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

அன்பார்ந்த புலம்பெயர் உறவுகளே,

தீவிர அடக்குமுறைக்குள்ளாகியிருக்கும் தாயகத் தமிழர்களின் செயற்பாடுகளும் போராட்ட முன்னெடுப்புக்களும் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதை நாமனைவரும் அறிவோம். இந்நிலையில் உலக அரங்கில் காத்திரமாகப் போராட வேண்டிய பொறுப்பு உங்களையே சார்ந்துள்ளது. தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எமது விடுதலை வேட்கையை உலகெங்கும் பறைசாற்றி அதற்குரிய ஆதரவுகளைத் திரட்டும் வேலைத்திட்டமும் புலம்பெயர்ந்த எமது மக்களிடமே உள்ளது. குறிப்பாக இளைய சமுதாயம் இச்செயற்பாட்டில் முன்னின்று உழைக்க வேண்டும்.

அனைத்து இன மக்களிடமும் எமது போராட்டத்தைக் கொண்டு சென்று அவர்களின் ஆதரவைத் திரட்டுவதோடு அரசமட்டங்களிலும் நிறுவனங்களிடத்திலும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது. பல்வேறு தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் அமைப்புக்கள் எமது இறுதி இலக்கில் ஒன்றுபட்ட கருத்தோடு பணியாற்றுவதோடு, எமது மக்கள் ஒன்றுதிரண்ட சக்தியாகப் பணியாற்ற வேண்டியது அவசியமாகின்றது. பல்வேறுபட்டளவில் திட்டமிடப்படும் போராட்டங்கள், கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டு எமக்குரிய உரிமைக்குரலை வலுவடையச் செய்ய வேண்டும்.

தாயக மக்களின் பாதுகாப்பு மட்டுமன்றி அவர்களின் வாழ்வியல் மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. பல்வேறு வழிகளிலும் தாயகமக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான செயற்பாடுகள் நடைபெற்றே வருகின்றன. அவற்றைத் தொடர்ந்தும் மேம்படுத்திச் செய்துகொண்டிருக்க வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும்.

அன்பார்ந்த தமிழக உறவுகளே,

எமது போராட்டம் முளைவிட்ட காலத்திலிருந்தே எமது தாங்கு சக்தியாகத் திகழ்ந்து வந்தது தமிழகம். அன்று மட்டுமன்றி என்றுமே எமக்குரிய பக்கபலமாகத் திகழவேண்டிய பொறுப்பு தமிழகத்துக்கே உண்டு. உள்நாட்டு அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஈழப் போராட்டத்தின்பால் நீங்கள் காட்டிக்கொண்டிருக்கும் கரிசனை அளப்பரியது.

எமது தாயக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில் எமது தாயக மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவல்ல அண்மையில் இருப்பவர்கள் நீங்கள்தான். எமது மக்கள் அபயக்குரல் எழுப்புவதும் முதலில் உங்களிடம்தான். எமது மக்களின் பாதுகாப்பு பெருமளவில் உங்களையே சார்ந்துள்ளது. கடந்த காலங்களைப் போலவே தொடர்ந்தும் எமது மக்களுக்கான கேடயமாக விளங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமது மக்களுக்குண்டு.

இன்றைய நிலையில் தமிழகத்தைத் தாண்டி எமது ஈழப்போராட்டத்தின் நியாயத்தையும் அரசியல் வேட்கையையும் இந்தியப் பிராந்தியமெங்கும் பரப்ப வேண்டிய தேவை மிக அவசியமாகவும் அவசரமாகவும் உள்ள பணியாகும். மிகச் சிலர் இப்பணியில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும் ஒட்டுமொத்த ஈழ ஆதரவு அமைப்புக்களும் தலைவர்களும் இக்குறிக்கோளோடு தீவிரமாகச் செயற்பட வேண்டுமென்பதே எமது அவாவாகும்.

அன்பான தமிழ்பேசும் மக்களே,

பன்னாட்டுச் சமூகத்தின் மத்தியில் எமக்கான விடுதலைப் போராட்டத்தை முழுவீச்சுடன் முன்னெடுக்க வேண்டிய காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் நிற்கின்றோம். அரசுகள் தமக்குரிய பிராந்திய – பொருளாதார நலன்களின் அடிப்படையிலேயே சிந்தித்துச் செயற்படுகின்றன. எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பையும் எமது மக்கள் அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பங்களையும் தமது அரசியல் நலன்களுக்கே உலகநாடுகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. சிறிலங்கா அரசு மீது அழுத்தம் கொடுத்து தமது வழிக்குக் கொண்டுவரும் ஒரு பகடைக்காயாகவே எமது மக்களின் அவலம் அரசுகளால் பயன்படுத்தப்படுகின்றது.

இன்றைய நிலையில் மனிதவுரிமை மீறல் பற்றியும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு, அபிவிருத்தி பற்றியுமே பன்னாட்டுச் சமூகம் பேசிக்கொண்டிருக்கிறது. மாறாக எமது இனவிடுதலைக்கான போராட்டம் பற்றியோ எமது இனத்துக்கான நியாயமான அரசியல் தீர்வு பற்றியோ கரிசனையோடு அணுகும் சக்திகள் எவையுமே தென்படவில்லை. பன்னாட்டுச் சமூகத்தின் இந்தப் பாராமுகப்போக்கு எமது மக்களுக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கின்றது.

சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலும் காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கும் இனவழிப்புத் தொடர்பிலுங்கூட அனைத்துலகச் சமூகம் மெளனம் காப்பதையே ஓர் உத்தியாகக் கையாள்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பாராமுகமும், பன்னாட்டு சமூகத்தின் ஒருபக்கச் சார்பான அணுகுமுறைகளும் எமது மக்களின் விடுதலைப்போராட்டத்தினை அழிக்க முயன்ற சிங்கள அரசுக்கு ஊக்கியாக அமைந்தது. எமது விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதக் கண்கொண்டு பார்த்ததன் விளைவே தமிழ் மக்களின் படுகொலைக்குக் காரணமாக அமைந்தது என்பதனை பன்னாட்டுச் சமூகம் இப்போது வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளது.

போர் நடைபெற்றபோது ஐக்கிய நாடுகளிடம் தமிழ் மக்கள் விடுத்த வேண்டுகோள்கள், எமது அமைப்புக்களின் வேண்டுகோள்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்ததாலேயே ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக ஆய்வு அறிக்கை கூறுகின்றது. இந்தத் தவறினை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலரும் அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த ஏற்றுக்கொள்ளலும், புரிந்துணர்ந்து கொண்டதும் எமது மக்களுக்கு நியாயத்தினையும் உரிமையினையும் பெற்றுக்கொடுக்க வழிகோல வேண்டுமே தவிர அவை தொடர்ந்தும் கண்டிப்புக்களையும், கால அவகாசத்தினையும் வழங்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக வைத்திருப்பதன் மூலம் உலக அரங்கில் தமிழ்மக்களின் போராட்டம் தொடர்பில் சமநிலையற்ற தன்மையையே பன்னாட்டுச் சமூகம் பேணிவருகின்றது. எம்மீதான தடையை அகற்றி நாம் வெளிப்படையாக இயங்கி எமது அரசியற் பணிகளைச் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் தமிழ்மக்கள் தொடர்பில் நியாயத்தன்மையோடு உலகம் அணுகுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்பான உலகத்தமிழ் உறவுகளே,

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கைகளும், பன்னாட்டு ஊடகங்களின் போர்க்குற்ற ஆதாரங்களும் நியாயமான முறையில் சிந்திக்கும் எவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கும். அவர்களின் மனச்சாட்சிகளை உறுத்தும். ஆனால் இந்த ஆவணங்கள் உலக வல்லரசுகளின் முன்னிலையில் பெறுமதியற்றவையாகவே இன்னமும் உள்ளன.

உண்மைகள் எப்போதும் உக்கிப்போகாது, மனிதாபிமான சிந்தனைகள் மரணித்துப்போகாது, மானிட விழுமியங்களை மதிக்கும் சமூகங்களின் மூலம் எம்மக்களுக்கு இழைக்கபப்ட்ட அநீதிகளை முழுமையாக உலகம் ஒருநாள் ஏற்றுக்கொள்ளும். முன்றரை ஆண்டுகளாக அமைதி காத்துவந்த ஐக்கிய நாடுகள் சபை இப்போது தமது தவறை உணர்ந்ததுபோல், இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுத்த நாடுகளும், அமைதி காத்த நாடுகளும் எம்மக்களின் நியாயமான போராட்டத்தினை உணர்வார்கள். அதுவரை உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.

சிங்கள அரசானது ஒருபோதும் ஈழத்தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது. இதுவரை காலமும் தமிழர்களுக்கான எந்தவொரு நியாயமான தீர்வுத்திட்டத்தையும் வழங்க சிறிலங்கா அரசு முன்வரவில்லை. மாறாக, சிறிலங்காவை தனிச்சிங்கள நாடாக மாற்றும் ஒரு திட்டத்தையே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இலங்கைத்தீவில் தமிழரும் சிங்களவரும் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை முன்னெப்போதையும்விட மேலும் வலுவடைந்துள்ள இன்றைய நிலையில், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

அன்பான தமிழீழ மக்களே,

எமது விடுதலைப் போராட்டப் பயணத்தில் சாவுகளையும், அழிவுகளையும், இடைவிடாத துன்பங்களையும் கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. இரத்தமும் சதையும் கலந்து எமது விடுதலைப் போராட்டத்தைச் செதுக்கிய மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும்.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை சாவுகளும் துன்பங்களும் அடக்குமுறைகளும் சோர்வடையச் செய்துவிடாது. இந்த வரலாற்று நியதிக்கமைய, தமிழினத்தின் விடுதலை வேட்கையை தமது வீரத்தாலும் அர்ப்பணிப்பாலும் பறைசாற்றிச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூரும் இந்நாளில், தமிழீழ விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகத் தொடர்ந்தும் போராட உறுதி கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட 9 பக்கங்கள் அடங்கிய மாவீர அறிக்கையினை முழுமையாக வாசிக்க….. இங்கே அழுத்தவும்