உலக நாடுகளின் நிதி உதவி பற்றி சிறிலங்காவின் அறிக்கை மோசடியானது – அம்பலப்படுத்துகிறது டென்மார்க்!

Home » homepage » உலக நாடுகளின் நிதி உதவி பற்றி சிறிலங்காவின் அறிக்கை மோசடியானது – அம்பலப்படுத்துகிறது டென்மார்க்!

அண்மையில் சிறிலங்காவின் நிதிஅமைச்சு 2008ம் அண்டின் முதல் 5 மாதங்களிற்கு சிறிலங்காவிற்கு கிடைக்கவுள்ள நிதி உதவி தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்து. அந்த அறிக்கையின் பிரகாரம் அதிக உதவி வழங்கும் நாடாக ஈரானும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் இடம்பெற்றிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் சிறிலங்காவிற்கு உதவிசெய்யும் முதலாவது நாடாக டென்மார்க் இருப்பதாக சிறிலங்காவின் அறிக்கை கூறுவதை தமிழ்வொயிஸ் இணைத்தளம் செய்தியாக்கியிருந்தது. இதை அடுத்து டென்மார்க் தேசிய வானொலியும் “சிறிலங்கா தொடர்பாக மேற்குலகம் கண்மூடித்தனமாகவுள்ளது” என்ற தலைப்பில் ஒரு ஆய்வையும் செய்திருந்தது. இந்த ஆய்வின் இறுதியல் சிறிலங்காவின் அறிக்கை தவறானது என டென்மார்க் வெளிநாட்டமைச்சு கூறியிருப்பதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக தமிழ்வொயிஸ் இணையத்தளத்திற்கு கருத்து கூறிய டென்மார்க் வெளிநாட்டமைச்சின் அதிகாரி யோனாஸ் (JONAS PARELLO-PLESNER) சிறிலங்கா அரசு பிழையான ஒரு அறிக்கையை தாயாரித்துள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போன்று டென்மார்க் 155,2 மில்லியன் டொலர்களை வழங்கவில்லை, தாம் வழங்குவது சுமார் 80 மில்லியன் குறோண்கள் ( அண்ணளவாக 17 மில்லியன் டோலர்கள் )மட்டும் எனவும் அது 2008 ஆம் ஆண்டு முழுவதுக்குமானது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் தாம் எந்த காலத்திலும் சிறிலங்காவிற்கு உதவிவழங்கும் நாடுகளை வரிசை படுத்தும் பொழுது முதல் 10 நாடுகளில் கூட வரவல்லை எனவும் கூறி 2006ம் அண்டிற்கான உலகவங்கியால் தயாரிக்கப்பட்ட பட்டியலையும் அனுப்பியிருந்தார்.

சிறிலங்கா நிதி அமைச்சு அறிக்கையின் படி டென்மார்க் 2 திட்டங்களுக்கு 155,2 மில்லியன் டோலர்களை 2008ம் அண்டின் முதல் 5 மாதத்தில் அளிப்பதாக கூறியிருந்தது. ஆனால் இந்த இரண்டு திட்டங்களில் ஒன்று 2002 ம் ஆண்டு ஆரப்பிக்கப்பட்டுள்ளது, மற்றது 2006; ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டங்களுக்கான செலவிற்கு டென்மார்க் எந்த உதவியும் செய்யவில்லை. டென்மார்க் இந்த திட்டங்களுக்காக செலவிடப்படும் பணத்திற்கான வட்டியை மாத்திரம் வழங்குகின்றது. முழுமையாக 326,22 மில்லியன் குறோண்கள், அதில் 2008 ஆம் ஆண்டு சுமார் 80 மில்லியன் குறோண்கள் வழங்கப்படுகின்றது.

டென்மார்க் சிறிலங்காவிற்;கு உதவிப்பணமாக வழுங்குவது மிகவும் குறைவான தொகை என கூறிய யோனாஸ் பத்திரிகையாளரின் மேம்பாட்டிற்காக குறிப்பாக யாழ்ப்பாண பகுதிக்கு 9.7 மில்லயன் குறோண்களை மட்டும் வழங்குவதாக தெரிவித்தார்.
யுத்தம் தொடர்பாக தொடர்ந்து சிங்க மக்களை ஏமாற்றிவரும் சிறிலங்கா அரசு மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசின் மீது சர்வதேச நாடுகள் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளதை மறைத்து தமக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு உள்ளதாக சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக இப்படி மோசடியான அறிக்கைகளை சிறிலங்கா அரசு வெளியிட்டு வருவது புலப்படுகின்றது.
தொடர்புடைய அறிக்கைகள்:
உலக வங்கியின் அறிக்கை
சிறிலங்கா நிதி அமைச்சின் அறிக்கை


%d bloggers like this: