டென்மார்க்

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!

டென்மார்க்கில்  மாவீரர்நாள் கொல்பெக் (Holbæk), கேர்ணிங் (Herning) ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இம்மாவீரர் நாள் நிகழ்வுக்கு ஒவ்வொரு இடங்களிலும்  மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டு, தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை வித்தாக்கிய மாவீரர்களை வணங்கிச் சென்றனர்.

மாவீரர் நாள் நிகழ்வானது பொதுச்சுடரேற்றம், தேசியக்கொடியேற்றம், ஈகச்சுடரேற்றம், மலர்வணக்கம், அகவணக்கம், துயிலும் இல்லப்பாடல் போன்றவற்றுடன் ஆரம்பமாகியது. மாவீரர்களின் உறவினர்கள் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவியும் சுடரேற்றியும் வணங்கினர். சில மாவீரர்கள் வேண்டப்படாதவர்களாக புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் ஒரு நிர்வாக கட்டமைப்பான அனைத்துலகத் தொடர்பகத்தில் இருந்து வெளியேறிய குழுவினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் பற்றிய அறிக்கை வாசிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபுர்வ ஊடகமான புலிகளின் குரலில் ஒலிபரப்பப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தேசிய மாவீரர் நாள் அறிக்கை இங்கே புறக்கணிக்கப்பட்டிருந்தது

இவைதவிர மாவீரர் கானங்கள், சிறப்புரை, எழுச்சி நடனங்கள், நாடகங்கள் போன்ற நிகழ்வுகளுடன் சிற்றுண்டிச் சாலையும்இம்மாவீரர்நாள் நிகழ்வுக்கு மேலும் எழுச்சியை ஊட்டின. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டு தேசியக்கொடி இறக்கத்துடன் இம்மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.