உலகில் ஊழல் குறைந்த நாடுகளாக டென்மார்க், பின்லாந்து, நியுசிலாந்து!

Home » homepage » உலகில் ஊழல் குறைந்த நாடுகளாக டென்மார்க், பின்லாந்து, நியுசிலாந்து!

உலகில் ஊழல் குறைந்த நாடுகளிலிருந்து ஊழல் கூடிய நாடுகள் வரையான தரவரிசை பட்டியல் ஒன்றை டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் உலகில் ஊழல் மிகக்குறைந்த நாடுகளாக டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் 90 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்திற்கு வந்துள்ளன.

176நாடுகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் ஊழல் கூடிய நாடுகளாக சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி இடத்திற்கு வந்துள்ளன. ஊழல்குறைந்த நாடுகள் தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் நான்காம், ஐந்தாம் ஆறாம் இடங்களில் சுவீடன், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், ஏழாவது இடத்தில் ஒஸ்ரேலியா, நோர்வே ஆகிய நாடுகளும், 9ஆவது இடத்தில் கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளன.

ஜேர்மனி 13ஆவது இடத்திலும் பிரித்தானியா 17ஆவது இடத்திலும் அமெரிக்கா 19ஆவது இடத்திலும் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி பிரான்ஸ், ஒஸ்ரியா, ஆகியன ஊழல் நிறைந்த நாடுகளாக இனங்காணப்பட்டுள்ளன. இத்தாலி 72ஆவது இடத்திலும் ஒஸ்ரியா 25ஆவது இடத்திலும், பிரான்ஸ் 22ஆவது இடத்திலும் உள்ளன.

இலங்கை 79வது இடத்திலும், சீனா 80ஆவது இடத்திலும் இந்தியா 94ஆவது இடத்திலும் உள்ளன. இலங்கை 40 புள்ளிகளையும் இந்தியா 36 புள்ளிகளையுமே பெற்றுள்ளன. பாகிஸ்தான் 139ஆவது இடத்திலும் ரஷ்யா 133ஆவது இடத்திலும் உள்ளன.

ஊழல் குறைந்த நாடுகளில் முதலாம் இடத்தை பிடித்த நாடுகள் 90 புள்ளிகளை பெற்ற அதேவேளை ஊழல் நிறைந்த சோமாலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 8 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளன. இந்த ஆய்வில் உலகில் எந்த ஒரு நாடும் 100புள்ளிகளை பெறவில்லை.

டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் அமைப்பு வெளியிட்டிருக்கும் தரவரிசை பட்டியலை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்…

Comments Closed

%d bloggers like this: