இந்தியா

மரக்காணம் அருகே கிராம மக்களுடன் பா.ம.க. மோதல் – வெடித்தது கலவரம்

News_46123468876பா.ம.க. சார்பில் மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பா.ம.க.வினர் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். இவ்வாறு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி வழியாக அப்பகுதி மக்களுக்கும், பா.ம.க.வினருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது.

இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கியதால் கலவரம் வெடித்தது. அப்போது வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டனா. அந்த பகுதி வழியாக வந்த வாகனங்கள் தாக்கப்பட்டன. கலவரக்காரர்கள கற்களை வீசியதில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து ஒரு தனியார் பஸ், 4 அரசு பஸ்கள் மற்றும் ஒரு காருக்கு தீவைக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று, கலவரக்காரர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அப்போது விழுப்புரம் எஸ்.பி.யின் வாகனமும் தாக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்களை விரட்டியடித்தனர். இச்சம்பவத்தால் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

சாதி வெறியின் வெளிப்பாடே இந்த தாக்குதல் என தாக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.