21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப்படுகொலை நினைவு – தமிழர் நடுவம் டென்மார்க்

Home » homepage » 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப்படுகொலை நினைவு – தமிழர் நடுவம் டென்மார்க்
21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப்படுகொலை நினைவு – தமிழர் நடுவம் டென்மார்க்

DK_Naduvam_may18 2013முள்ளிவாய்கால் மனிதப்படுகொலையின் 4ம் ஆண்டு நிறைவு நினைவு நாளில் தமிழர் நடுவம் டென்மார்க் வெளியிட்டுள்ள அறிக்கை.

முள்ளிவாய்க்கால் படுகொலையானது தமிழினத்தின் மீது சிங்கள அரசு புரிந்த இனப்படுகொலையில் மாபெரும் மனிதப்படுகொலைமட்டுமல்ல 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாகவும் உள்ளது.

முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் தமிழ் இனத்தின் மீது சிறிலங்கா அரசு சகலவிதமான இனப்படுகொலையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

தமிழ் மக்களின் நிலங்கள் சிறிலங்காபடைகளின் முகாம்களுக்கும் சிங்கள மக்களின் திட்டமிட்ட குடியேற்றத்திற்கும் என பறிக்கப்படுகின்றன. தமிழர்களின் கலாச்சார விழுமியங்கள் திட்டமிட்டமுறையில் அழிக்கப்படுகின்றன.

புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாக கூடி கதறிய போதும் பன்னாட்டு அரசுகளால் தமிழீழ மக்கள் மீது சிங்கள அரசு புரிந்த மனிப்படுகொலையை நிறுத்தமுடியவும் இல்லை. நிறுத்த முயசிக்கவும் இல்லை. தமது சொந்த நலன்களை முதன்மைப்படுத்தி புலம்பெயர் தமிழ் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துக்கொண்டே சிங்களத்தின் இனப்படுகொலைக்கு பார்வையாளர்களாகவே பன்னாட்டு சமூகம் இருந்தது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவில் தமிழினம் நிறகும் பொழுது கூட வன்னி மண்ணில் இருந்து மட்டும் காணமல்போன 146.000 இற்கு மேற்ப்பட்ட எமது மக்களுக்கு என்ன நடந்தது என பன்னாட்டு சமூகம் சிங்கள் அரசை வற்புறுத்தி கேட்கவில்லை.

போர்க்குற்றம் என தமிழினப்படுகொலையை வரைப்படுத்தி தமது நலன்களுக்கு ஏற்ப சிறிலங்கா அரசை பணியவைக்கவே பன்னாட்டு சமூகம் இப்பொழுது முயற்சிக்கின்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 4ம் ஆண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வுகள் வணக்க நிகழ்வு, கவனயீர்ப்பு நிகழ்வு, பரப்புரைகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், ஒன்றுகூடல்கள் என பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அதன் உச்ச நிகழ்வாக .தமிழீழ சுதந்திர சாசனம் உலகத் தமிழர்களால் இம்முறை முரசறையப்படவிருக்கின்றது.

தமிழீழத் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை 2009ம் ஆண்டு மே-18ம் நாளுடன் வென்றுவிட்டதாகவும், தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாகவும் சிங்களம் வெற்றிக்களிப்பில் இருக்கும் இவ்வேளையில் தமிழீழம் நோக்கிய எங்களது விடுதலைப்பாதையினை பன்னாட்டு சமூகத்தின்; முன் தெளிவாக முன்வைப்பதுடன் முள்ளிவாய்க்கால் படுகொலை மட்டுமல்ல தமிழினத்தின் மீது சிங்கள அரசு புரிந்த இனப்படுகொலைக்கான நியாயத்தை பன்னாட்டு சமூகத்திடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என உறுதிபூண்டுகொள்வோமாக.

தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்.
தமிழர் நடுவம் டென்மார்க்

Comments Closed

%d bloggers like this: