தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-02

Home » homepage » தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-02
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-02

தமிழீழ தேசியத் தலைவர் மட்டுமே வழங்கி மதிப்பளிக்கும் தமிழீழத்தின் “மாமனிதர் விருது” மதிப்பிழந்து போனது!

ஒருங்கிணைப்புக் குழுவிற்கு உள்ளும்,அவர்களின் விடுதலைப் புலிகள் என்ற மொட்டைக் கடதாசிக்குள்ளும் பதுங்கிக் கிடந்த துரோகத்தனம் அனைத்தும் ஒரு சொல்லில், பல அறிக்கைகளின் பின்னர் வெளிப்பட்டது.

மாமனிதர் விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வெளியிடும் அறிக்கையின் வடிவம்.

டாக்டர்.மூர்த்தி அவர்களை நாட்டுப்பற்றாளராக மதிப்பளித்தமையும்! மாமனிதராக மதிப்பளித்தமையும்!
தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், வெண்புறா அமைப்பின் தலைவருமான வைத்திய கலாநிதி நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27-02-2013 அன்று சாவடைந்தார். அவரின் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழீழ தேசியத் தலைவரின் வெளிப்படையான செயற்பாடுகள் இல்லாததன் காரணமாகவும் தமிழீழ தேசியத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிக்கப்பட வேண்டிய வைத்திய கலாநிதி நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களை, காலச் சூழல் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவினர் நாட்டுப்பற்றாளராக மதிப்பளித்திருந்தனர், அந்த அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளரான திரு.ஆ.அன்பரசன் அவர்களின் கையொப்பத்துடன் வெளிவந்திருந்தது.
அந்த அறிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் தான் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பையே கேள்விக் குறியாக்கிய அந்த அறிக்கை, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருடன் தமிழீழ தேசியத் தலைவருக்கே இழைக்கப்பட்ட மிகப்பெரும் துரோகம் அந்த அறிக்கையாக வெளியிடப்பட்டிருந்தது.
தமிழீழ தேசியத் தலைவரினால் மட்டுமே வழங்கி மதிப்பளிக்கப்படும் தமிழீழத்தின் அதி உயர் விருதாக கருதப்படும் “மாமனிதர் விருதை” வழங்குவதற்கு இந்த ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு அனுமதி வழங்கியது யார்? நிதி சேகரிப்பையும், நிகழ்வுகளையும் மட்டுமே நடத்துவதை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்ட இவர்கள் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பையும் கேள்விக் குறியாக்கி அவருக்கும் முடிவுகட்டத் துணிந்து விட்ட பிறகும் நாம் பொறுமையாக இருப்பது எவ்வளுவு முட்டாள்த் தனமானது என்பதை உணர்ந்து சம்மந்தப்பட்டவர்களிடம் இது விடையம் தொடர்பில் வாதாடிய பொழுது, குழுவின் பொறுப்பாளர் தனம். கமல், சிவந்தன், பரமேஸ்வரன் உள்ளிட்டோர் குழு  பின்வருமாறு தெரிவித்தனர்.
“எல்லவாற்றையும் தலைவர் வந்தாப்பிறகு வந்து கதையுங்கோ! அதுவரை நாங்கள் தான்! நாங்கள் மட்டும் தான் விடுதலைப் புலிகள்! வேறு எவரையும் எம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை! விரும்பினால் தொடர்ந்து செயற்படுங்கள் இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடுங்கள், என இவர்கள் தெரிவித்தும் நாம் அதிர்ந்து போனோம். இந்தக் குழுவால் தூக்கி எறியப்பட்டோம்.

மாமனிதர் விருது வழங்கி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிடும் போலியான மொட்டைக் கடதாசியின் வடிவம்.


-ஒரு மாபெரும் இயக்கத்தின் பெயரால் வெளிப்படையாக இத்தனை ஏமாற்று வேலைகள் நடப்பதை தெரிந்துகொண்ட பொழுதில்…
உண்மையில் தலைவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லை சூரியக் கடவுள் ஆகிவிட்டாரா என்கிற சந்தேகம் இப்பொழுது மேலோங்கி நிற்கிறது. ஏன் எனில் தலைவரும் அவர் சார்ந்தவர்களும் இருந்தால் இப்படியான தான்தோன்றித் தனமான துரோகத் தனங்கள் நடைபெறாது என்பது எமது நம்பிக்கையாக இருந்தது! ஆனால் இப்பொழுது எங்களிடம் எந்த நம்பிக்கையும் இல்லை,தலைவர் வருவாரா இல்லை வரமாட்டாரா என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லாமலே பதில் கிடைத்து விட்டது. தன்னம்பிக்கை உண்டு விடுதலைப் புலிகள் விரைவில் தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எமது இன்றைய வேண்டுதலாக உள்ளது.
உண்மை இதுவாக இருக்க இந்த ஒருங்கிணைப்புக் குழுவிற்கு விடுதலைப் புலிகள் என தலைப்பிட வேண்டியதன் அவசியம் ஏன் என்பதற்கு அப்பால், விடுதலைப் புலிகள் என்பது அனைத்துலக தொடர்பகம், அல்லது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மட்டும் தான் என்பதை நிறுவ முற்படுகிறார்கள் என்பது மட்டுமே இங்கு வெளிப்படையான உண்மையாக உள்ளது…!
தமிழீழ தேசியத் தலைவரிடம் இருந்தோ, அல்லது அவருடன் சம்மந்தப்பட்டவர்கள் எவரிடம் இருந்தும், எவருக்கும் இன்று வரை எதுவித தொடர்புகளும் கிடைக்காத நிலைக்கு அப்பால் ,சராசரி மக்கள் பல கேள்விகளோடும், குழப்பங்களோடும் உள்ள நிலையில் அவர்களை தெளிவுபடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்புக்களை செய்வதை தவிர்த்துவிடுதலைப் புலிகள் என்ற பெயருடன் இந்தக் குழுக்கள் செய்ய முயற்சிப்பது என்ன?

சுய நலன்களுக்காக போராளிகளை துரோகிகள் ஆக்கியமை!
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தை (போராளிகளை) புறக்கணித்து இவர்கள் பயணிக்க முற்படுவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், மாவீரர்களினதும், போராளிகளினதும், மக்களினதும் தியாகங்களை குழி தோண்டிப் புதைப்பதற்கு சமமானது.
2009, காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போரின் முடிவு நெருங்கிக் கொண்டிருந்த கடைசி மணித் துளிகளில் பிரித்தானியாவின் தேசிய உணவு உட்கொண்டபடி உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கும், விடுதலைப் போராட்டம் இடை நிறுத்தப்பட்டதன் பின்னர் சொகுசு சுற்றுலா வண்டியில் மஸாச் பண்ணியபடி நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கும், தேசத்தின் பெயரால் புலம்பெயர் தேசத்தில் மக்கள் பணத்தில் குடும்பங்களுடன் வயிற்றுப் பிழைப்பு நடத்தியவர்களிடமும் எவராலும் அழிக்க முடியாத மிக அதிக அளவாக தேசப்பற்று இருக்கும் எனில், தமிழீழ விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து வருடக்கணக்கில் களமாடி, தமிழீழ தேசியத் தலைவரின் கட்டளைப்படி இராணுவத்திடம் சரணடைந்தும், அடையாமலும், வேறு வழிகளிலும் பெரும் சிரமங்களின் மத்தியில் தாயகத்தை விட்டு வெளியேறி, இன்றும் தமது உடல்களில் விழுப்புண்களோடு, குண்டேந்தியபடி வாழும் போராளிகளிடம் மட்டும் எப்படி தேசப்பற்று இல்லாமல் போகும்.

அவர்களின் இரத்தத்தில் ஊறிப்போய் உள்ள தேசப்பற்றை மட்டும் அடுத்தவரால் எப்படி அழித்துவிட முடியும். தமிழின விரோதிகளால் இந்தப் போராளிகளையே விலைகொடுத்து வாங்க முடியும் என்பது உண்மையானால், இந்திய இலங்கை இராணுவ புலனாய்வாளர்களை இரகசியமாக சந்திக்கும் பணத்திற்கும், சலுகைகளுக்கும் மாரடிக்கும் இந்த செயற்பாட்டாளர்களை மட்டும் ஏன் விலைகொடுத்து வாங்க முடியாது?
விடுதலைப் புலிகள் என்ற பெயரில் மொட்டை அறிக்கை! இது எட்டப்பன் கருணா செய்த துரோகத்தனத்துக்கு சற்றும் குறைந்த செயல் அல்ல.
செயற்பாட்டாளர்கள் என்ற போர்வையில் தேசியம் பேசியபடி அனைத்துலக தொடர்பகத்துக்குள் புகுந்து “காட்டிக்கொடுப்பு வேலையை” செய்தவர்கள் இன்று அனைத்துலக தொடர்பகத்தையும் இல்லாமல் செய்துவிட்டு ஆள் ஆளுக்கு தனியாக விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் விடுதலைப் போராட்டத்தை இல்லாது ஒழிக்க முற்பட்டிருப்பது, ஒரு வகையில் கருணாயிச செயல்பாடுதான் என்பதில் சந்தேகம் இல்லை. புலத்தில் இயங்குகின்ற பெரும்பாலான கட்டமைப்புக்கள் – உப அமைப்புக்கள் என பல பிரிவுகளுடன் அனைத்துல தொடர்பகமும் ஒருங்கிணைப்புக் குழுக்களும் இணைந்து மே19வரை செயற்பட்ட ஒன்று.
ஆனால் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் அனைத்துலக செயலகத்தின் தொடர்பு, அனைத்துலக தொடர்பகத்துடன் முற்று முழுதாக இல்லாமல் போனதன் பின்னர் தொடர்பகம் தான் தோன்றித் தனமாக இந்தக் குழுக்கள் செயற்பட ஆரம்பித்திருப்பது போராளிகள், இன உணர்வாளர்கள், மற்றும் அணைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் என்றும் இல்லாதவாறு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உண்மை தெரியாமல் இன்றும் சிலர் இவர்களுக்கு பின்னால் ஆப்பிழுத்து குரங்குகள் போல் திரிவது அவர்களின் சிந்திக்கத் தெரியாத தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இந்தக் குழப்பங்களைத் தெளிவுபடுத்தி தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் எழுச்சி கொள்ள வைக்கவேண்டிய முழுமையான கடமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திற்கு மட்டுமே உண்டு. அவர்களால் மட்டுமே இந்தக் குழப்பங்களை சரிப்படுத்தி தமிழ் மக்களை ஒருவழிப்படுத்த வேண்டிய கட்டாய கடமை உள்ளது.
அதன் அடிப்படையின் போராளிகள் விரைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறோம். உங்கள் பலம் உண்மைத் தன்மை தெரியாமல் இன்றும் பலர் போலிகளிடம் மாண்டு கிடக்கின்றனர்.இனிவரும் காலங்கள் உண்மையானவர்களுடன் கரம் கோர்த்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்க உறுதி எடுப்போம் என முடிந்துபோன முள்ளி வாய்க்கால் தமிழர் இனவழிப்பு நினைவு நாளில் இருந்து உறுதி எடுப்பொம்.
விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் உலாவரும் குள்ள நரிக் கும்பலை மக்கள் முன் அம்பலப்படுத்தி, மக்களால் விரட்டப்படும் நிலையை உருவாக்க வேண்டும். அத்தோடு உண்மையான தேசிய செயற்பாட்டாளர்களை இனம்கண்டு தலைமைச் செயலகத்துடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலையை விரைந்து உருவாக்க வேண்டும். ஏன் எனில் விடுதலைப் புலிகள் எனும் ஒற்றைச் சொல்லின் பின்னால் மட்டுமே தமிழ் மக்கள் அணி திரண்டார்களே தவிர, தனித் தனி கட்டமைப்புக்களின் பின்னால் அல்ல என்பதை புலம்பெயர் செயற்பாட்டாளர்களும், மக்களும் புரிந்து செயற்பட வேண்டும்.
பணபலத்தைக் கண்டு ஒதுங்கிவிடக் கூடாது, இந்தக் குழுக்களின் செயற்பாட்டாளர்கள் ஒவ்வேருவரிடமும் தமிழீழ தேசிய சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றது. அவற்றைக் கொடுத்த மக்களே அவற்றைப் பறித்தெடுக்கும் நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். இதனை விடுதலைக்காக உழைக்கின்ற உண்மையான செயற்பாட்டாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் புலத்தில் “அப்போதும் இப்போதும் எப்போதும்” தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னால் அணிதிரளும் அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றி  ஊர்வலம் நடத்தவும், புதிய புதிய வெளியீடுகள் விற்பனை செய்து, தமது வயிற்றுப் பிழைப்பு நடத்தவும் எவரையும் அனுமதிக்க முடியாது.
இது புலம்பெயர் மக்களுக்கும், தமிழர் தாயகத்தில் விதையான மாவீரர்களுக்கும், தேசிய செயற்பாட்டாளர்களுக்கும், புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் செய்கின்ற மிகப்பெரும் நம்பிக்கைத் துரோகமாகவே தமிழீழ வரலாற்றில் பதிவாகப் போகின்றது.
தமிழீழ விடுதலைக்காக களமாடிய போராளிகளை அவமதித்து, அவமானப்படுத்தி, புறக்கணித்துவிட்டு, மாவீரர்களுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்து, தமிழீழ விடுதலையை வென்றெடுக்கலாம் என எவரேனும் நினைத்தால் அது வெறும் பகல்க் கனவாகவே போகும்.
தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய கட்டளையை ஏற்று, சயனைட் குப்பிகளைக் கழற்றி தமது தளபதிகளின் கைகளில் கொடுத்துவிட்டு, வெறுங்கைகளுடன் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சிங்களப் படைகளிடம் சரணாகதி அடைந்த எங்கள் தேசப் புதல்வர்களான போராளிகளிடம் இறுதிவரை இருந்த தலைவருக்கும், அவருடைய வார்த்தைகளுக்கும் கட்டுப்படும் விசுவாசம்! ஒரு சிறு துளியாவது புலம்பெயர் செயற்பாட்டாளர்களிடமும் இருக்கட்டும்!

உண்மைகள் தொடரும்!…..

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

ஈழம்5.இணையம் தி.தமிழரசன். தொடர்புகளுக்கு skyp: eelam5.com

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை -00

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01

Comments Closed

%d bloggers like this: