தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் (T.C.C), பொறுப்பாளர்களுக்கும் கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள்.

Home » homepage » தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் (T.C.C), பொறுப்பாளர்களுக்கும் கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் (T.C.C), பொறுப்பாளர்களுக்கும் கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள்.

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-03

u1_thanamkuluதமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் T.C.C, பொறுப்பாளர்களுக்கும்  கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள் தானாகவே வெளிவர ஆரம்பித்துள்ளன!

இதன் அடிப்படையில் tcc யின் சுவிஸ் பொறுப்பாளர் கடந்த வருடம்  நடுப்பகுதியில் சிறீலங்கா சென்று கேபி.கருணா.கோத்தபாய உள்ளிட்ட பலரை இரகசியமாக சந்தித்துவிட்டு நாடு  திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்புக்களை எல்லாம் ஒழுங்கு செய்து கொடுத்தவர் வேறு யாரும் அல்ல சாயகான் என்கிற எட்டப்பன் தான் அந்த நபர்.

இவர் வேறு யாரும் அல்ல பல ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கத்தில் இருந்து ஒழுக்கச் சீர் கேடு காரணமாக துரத்தப்பட்டவர், 2009 முள்ளிவாய்க்கால் வரை முடங்கிக் கிடந்துவிட்டு அதன் பின்னர் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணையுடன் இன்று அந்தக் குழுவின் மாவீரர் பணிமனை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்,? முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் பல தடவைகள் சிறிலங்கா சென்றுவந்த சாஜகான் தம்பதிகள் ஒவ்வெரு தடவையும் பல வாரங்கள் தங்கி அரசாங்கத்தின் பாதுகாப்பில் யாழ் மாவட்டம் தவிர்ந்த தமிழீழத்தின் பல மாவட்டங்களுக்கும் சுதந்திரமாக சென்று வருபவர்கள். அப்படி பல தடவைகள் சென்று வந்ததன் பின்னர் தான் இந்தக் குழுவின் அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் பிரித்தானியக் கிளையின் இன்றைய தலைவர் தனம் அவர்களால் இந்தப் பொறுப்பு சாஜகானுக்கு வழங்கப்பட்டது.

இந்தக் குழுவில் இருந்து யாரும் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைய வில்லையே! அப்போ எதுக்கு இவர்களுக்கு மாவீரர் பணிமனை என்று நீங்கள் நினைப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இப்ப இந்த குழுக்கள் தானே, அதுதான் அவர்களின்மாவாரர்களின் மாவீரர் பணிமனையையும் இந்தக் குழு கைப்பற்றி விட்டது.

மாவீரர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் பல்வேறு முன்னெடுப்புக்களை செய்து தலைவரின் எண்ணங்களை நெஞ்சில் சுமந்து வாழ்த்த ஒரு உத்தமமான போராளி பொன் தியாகம் அப்பா, இப்பொழுது அனைவராலும் கைவிடப்பட்ட நினையில் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

அதுபோல் பிரித்தானியாவின் tcc பொறுப்பாளர் தனது சகோதரர் ஊடாக கேபி, கோத்தபாயாவுடன் தொடர்பில் இருப்பவர்,(இவரது சகோதரர் கத்தோலிக்க பாதராக படித்து வந்த நிலையில் பாலியல் குற்றங்களுக்காக கத்தோலிக்க சபையால் வெளியேற்றப்பட்டவர்.) அது போல்  நோர்வேயின் tcc பொறுப்பாளரும் நேரடியாக கேபியுடன் தொடர்பில் இருந்து தகவல்களைப்  பரிமாறிக் கொள்கிறார், சுவிஸ்,யேர்மனி tcc யின் பொறுப்பாளர்களான, ரகுபதி, சிறிரவி, மற்றும் செயற்பாட்டாளர்கள் இருவரும், டென்மார்க் tcc பொறுப்பாளரும், குட்டி ஊடக தொடர்பில் இருப்பவர், இப்படிப் பலரும் பல வழிகளிலும்  கேபியுடன் தொடர்பில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை  பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்களும் துரோகி முரளிதரனுடன் (கருணா) தொடர்பில் இருந்துகொண்டு  புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் உடனுக்குடன்  தகவல்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது
இவர் தனக்கு நெருங்கிய ஒருவரை ஒருங்கிணைப்புக்  குழுவிற்குள் ஆழமாக வேர் ஊன்ற வைத்துள்ளார். சிங்கள அரசுக்கு எதிராக  தமிழ்மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில், அதே வேகத்தில் அந்த  செயற்பாடுகளை செயலற்றுப் போகும் வகையிலும் செயற்பட்டு வருபவர். இன்று வரை தமிழீழ  தேசியச் சொத்துக்களில் வாழ்க்கை நடத்தி வருபவர்.

நடை பயணி சிவந்தன் தேசத்தின் குரல் பாலா அண்ணா வாங்கிக் கொடுத்த எரிபொருள் விற்பனை  நிலையத்தை அப்படியே கையகப்படுத்திக் கொண்டவர், அந்த வர்த்தக நிலையம் நட்டத்தில்  போய் விட்டதாக கணக்கு காட்டிவிட்டு புதிதாக ஒரு வர்த்தக நிலையத்தை வாங்கி நடத்தி  வருவதும் குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தேசத்தில் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைக்  கட்டமைப்புக்களில் ஒன்றான, அனைத்துலக செயலகத்தின் கீழ் செயற்பட்டு வந்த, அனைத்துலக  தொடர்பகத்தின் தம்மை இணைத்துக்கொண்ட கைக்கூலிகள், தேசிய செயற்பாட்டாளர்கள்  முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான செயற்பாடுகளை தடுத்தி  நிறுத்தவும், அவர்களை புலம்பெயர் தேசத்தில் தடைசெய்யவும் பல்வேறு வேலைத் திட்டங்களை  பல வழிகளிலும் முன்னெடுத்தது. அதன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக  தொடர்பகத்தின் செயற்பாடுகள் ஐரோப்பிய நாடுகளில் தடுத்து நிறுத்தப்பட்டதும் அனைவரும்  அறிந்த விடையம்.

இதில் மிகவும் இரகசியமாக நடந்து முடிந்த வெளித்தெரியாத உண்மைகள்  திட்டமிட்ட வகையில் மறைக்கப்பட்டுள்ளது என்கிற விடையம் தற்போது வெளிவர  ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட நிதிவளம் தேசிய  செயற்பாட்டாளர் என்ற போர்வையில் இருந்த சுயநலவாதிகளின் கைகளில்  ஒப்படைக்கப்பட்டதும், ஆயுதக் கொள்வனவு என்ற பெயரில் முகவர்களுக்கு வழங்குவதாக கூறி  பெருந்தொகை பணம் கையகப்படுத்தப்பட்டதும், ஆயுதங்களைத் தாயகத்துக்கு அனுப்புவதாகக்  கூறி பழுதடைந்து பாவிக்க முடியாமல் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை  அனுப்பியதும், அவற்றை இடைநடுவில் சர்வதேச கடற்பரப்பில் வைத்து சிங்கள  விமானப்படையினர் தாக்கி அழித்ததும். இந்த அனைத்துலக தொடர்பகத்தை வழிநடத்திய முக்கிய  செயற்பாட்டாளர்கள் செய்த நம்பிக்கைத் துரோகங்களில் ஒன்று.

இந்த காட்டிக்கொடுப்புக்கள் அனைத்திற்கும் கே.பி என்று  அழைக்கப்படும், கழுதை பத்மநாதன் அவர்களே குட்டியுடன் இணைந்து பின்னணியில்  செயற்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. அனைத்துலக தொடர்பகத்தின் பொம்மை  பொறுப்பாளராக இருக்கின்ற இரும்பறை (அரவிந்தன்) அவர்களுக் குட்டி குழுவால்  மிரட்டப்பட்டு அடக்கப்பட்டு இருப்பதையும் இரும்பறை தன் வாயால் தெரிவித்துள்ளார். கேபி. குட்டியின் திட்டமிடலுக்கு பரிதி அவர்கள் படுகொலை  செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அதற்கான காரணங்களும் இல்லாமல் இல்லை.

ஈழ விடுதலைப் போராட்டத்திக்காக மக்களால் வழங்கப்பட்ட நிதி வளங்கள்  மற்றும் பொருளாதார வளங்களும் குட்டி தலைமையிலான ஒரு குழிவின் கைகளில் முடங்கிக்  கிடப்பதும், போராளிகள் அனைவரும் ஒன்றினைந்துவிட்டால் சொத்துக்கள் அனைத்தும் தாயக  விடுதலைப் போராட்டத்திற்கென ஒதுக்கப்பட்டு விடும், தாயகத்தில் பாதிக்கப்பட்டுள்ள  மாவீரர் குடும்பங்களுக்கும்,போராளிகளுக்கும் வழங்கப்பட்டு விடும், அத்தோடு வேலை  வெட்டிக்கு செல்லாமல் குடும்பம் நடத்தும் தமது பிழைப்பிலும் மண் விழுந்துவிடும் எனற  பயத்திலும்.

புலம்பெயர் தேசத்தில் தம்மையே அர்ப்பணித்து செயற்பட்ட தேசிய  செயற்பாட்டாளர்களை காட்டிக்கொடுத்து, அவர்களை சட்டச் சிக்கலில் மாட்டிவைத்ததும், அவர்கள் முன்னெடுத்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்தியமை, பலர் கைது  செய்யப்பட்டமையும், அதன் காரணமாக பலர் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்  கிக்கொண்டதும், முக்கிய செயற்பாட்டாளர்கள் சிலர் திட்டமிட்ட வகையில்  புறக்கணிக்கப்பட்டதும், கடைசியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டு  விட்டதாகவும், தமிழீழ தேசியத் தலைவர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார் என்றும், பின்னர் தலைவர் இறந்து விட்டார் என்றும் குழப்பமான செய்திகளைப் பரப்பி, விடுதலைப்  புலிகள் இயக்கத்தின் தலைவராக தன்னை அறிவிக்கும்படி கே.பி. அடம் பிடித்ததும்.

போராளிகள் கொண்ட செயற்குழு அதனை மறுத்ததும், அதனைத் தொடர்ந்து போராளிகளுக்கும்  கே.பிக்கும் இடையில் முரண்பாடுகள் உச்சத்தை அடைந்த நிலையில் மலேசியா சிறீலங்கா  இணைந்த இரகசிய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறீலங்கா கொண்டு  செல்லப்பட்டார் அல்லது கேபி சிறிலங்கா அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்  அடிப்படையில் கோத்தபாயவுடன் இணைந்துகொண்டார்.

அப்பொழுது கூட தன்னை விடுதலைப் புலிகளின் தலைவராக ஏற்றுக் கொள்ளாது  விட்டால் என்ன செய்கிறேன் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று சவால் விட்டிருந்த  சில வாரங்களில் கைது என்ற போர்வையில் சிறிலங்கா அரசின் பாதுகாப்புச் செயலாளருடன்  இணைந்து கொட்டிருந்தார். அப்பொழுது கூட நெடியவனுக்கும் தெரியாமல் குட்டியில்  தலைமையிலான ஒரு இரகசியக் குழுவை கே.பி மலேசியாவில் சந்தித்திருந்ததும்  குறிப்பிடத்தக்கது. ““`

வியக்க வைக்கும் உண்மைத் தகவல்களுடன் துரோகிகளின் முகத்திரைகள் கிழித்து ஈழவிடுதலை பயணம் தொடரும்..

உண்மைகள் தொடரும்!…..

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

ஈழம்5.இணையம் தி.தமிழரசன். தொடர்புகளுக்கு skyp: eelam5.com

xxxxxxx

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை -00

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02

Comments Closed

%d bloggers like this: