30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்!

Home » homepage » 30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்!
30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-04

4530, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்!

எது எவ்வாறாயினும் ஏதோ ஒரு புள்ளியில் புலம் பெயர் தமிழர்களாயினும், புலத்தில் வாழும் தமிழர்களாயினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். எதிர் காலத்தில் இலங்கைத் தீவில் தமிழீழ விடுதலைக்கான யுத்தம் ஒன்று உருவாகுமானால் அங்கு தமிழீழம் விடுதலை பெற வாய்பு உண்டு. விடுதலைக்காகவே புலம் பெயர் தேசத்தில் இருந்து தமிழீழ விடுதலைக்காக உழைத்த மக்களும் செயற்பாட்டாளர்களும் நம்பிக்கை இழக்காமல் உண்மைவளியில் நின்று தமிழீழ விருதலையை விரைவாக வென்றெடுக்க உண்மைகளை உணர்ந்து செயற்பட வேண்டிய காலமிது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்து வந்த மூன்று தசாப்த கால ஈழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்றது என பலர் தெரிவித்தாலும், அது ஒரு இடைநிலையே தவிர முற்றுப் பெறவில்லை. இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத மௌனிப்பின் பின்னர் முள்ளி வாய்க்காலில் ஓர் இரு நாட்களில் பல்லாயிரம் உயிர்களை சிங்களத்தின் இனவழிப்பு நடவடிக்கை காவு கொண்டது என்பது, மறுக்க முடியாத வடுக்கள் நிறைந்த வரலாற்றுப் பதிவாக உலக நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதுவாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு துயர் நிரந்த நிகழ்வுகளுடன் கடந்து சென்ற நிலையில்…. இன்று நாம் நின்று கொண்டிருகிறோம்….

மூன்று தசாப்த காலங்களாக உலகின் பார்வை இலங்கைத் தீவின் தமிழீழம் என்கிற புனித பூமி மீதும், சிறிலங்கா மீதும் திரும்பியிருந்ததும் அனைவரும் தெரிந்த ஒன்று. இதற்கு காரணமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவரும் தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. தமிழில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் அவர்களின் செயற்பாடுகளை எந்த வல்லரசாலும், ஆய்வு செய்துகொள்ள முடியாத, புரிந்துகொள்ள முடியாத, அடுத்த நடவடிக்கை என்ன என்பதை காத்திருந்து தெரிந்துகொள்ளும் அளவுக்கு தனது மதி நுட்பத்தால், போராட்ட, இராஜதந்திர செயற்பாடுகளை வகுத்துக் கொண்டவர். அதன் ஒரு வடிவமாக தமிழீழ மாவீரர் நாள் உரையினை, தமிழீழ விடுதலைப் புலிகளின் வருடாந்த கொள்கைப் பிரகடன உரையாக சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டும் இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்றி தமிழ் மக்களுக்கான விடுதலை இல்லை என்பதை சர்வதேச நாடுகள் மறைமுகமாக ஏற்றுக்கொண்டிருந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத மௌனிப்பு என்பதையும், அந்த இயக்கத்தின் தலைவரும், தமிழீழ தேசியத் தலைவருமாகிய மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உள்ளிட்ட, மூத்த போராளிகள் பெருமளவானவர்கள் முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்று களமாடி வீரச்சாவடைந்து போனார்கள் என வந்த செய்தி எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது. அதற்கான காரணங்களும் உண்டு. அவற்றையும் விரைவில் இணைத்துக் கொள்ளவுள்ளோம்.

இருப்பினும் கடைசி நாட்களில் தமிழீழ தேசியத் தலைவர் மற்றும், புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் உள்ளிட்ட இன்னும் பல போராளிகள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என்ற தகவல், மீண்டும் தலைவர் வருவார், அவரின் கையால் தமிழீழத்தின் தலைநகரில் தமிழீழ தேசியக் கோடியை ஏற்றிவைப்பார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் தமிழ்மக்கள் தமிழீழ விடுதலை நோக்கி முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.

ஆனால் அந்த மக்களைப் பயன்படுத்தி வீரச்சாவடைந் மாவீரர்களின் சாவில் மகிழ்பவர்களாய், அனைத்துலக தொடர்பகத்தின் கிளைக் கட்டமைப்புக்கள் இன்று சிலரால் திட்டமிட்டு மாற்றபட்டுள்ளனர். அல்லது மாறியுள்ளனர்.

வெளிநாடுகளிலுள்ள அவரது வழிவந்ததாக தெரிவிக்கும் செயற்பாட்டாளர்களால் தமிழீழ தேசியத் தலைவரும், அவரால் கட்டிவளர்க்கப்பட்ட விடுதலைப் புலிகள் என்ற சொல்லுக்கு உரிய சிறப்புக்கள் அனைத்தும் அதன் வழி வந்தவர்களினால் சீரழிக்கப்பட்டு ,அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேர்மை, நீதி, தார்மீகம் வீரியம் கொண்ட ஒரு இராணுவமாக எதிராளிகளாலும் மதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், என்ற உண்மை யதார்த்தத்தின் பின்னால் அணிவகுத்து நின்ற தமிழர்களையும் சினம் கொள்ள வைக்கின்ற, அல்லது போராட்ட உணர்வுகளில் இருந்து ஒதுங்க வைக்கின்ற வகையில் இந்தக் குழுக்கள் முன்னெடுக்கும் தான் தோன்றித் தனமான செயற்பாடுகள் அமைந்துவிட்ட ஒரு அருவருக்கத்தக்க, அனைவரையும் வேதனையடைய வைக்கும் நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.

நிதி சேகரிப்பில் இருந்த அக்கறை அரசியல் முன்னெடுப்புக்களில் 10 வீதம் கூட முன்னெடுக்கப்படவில்லை?

ஈழ விடுதலைப் போராட்டத்தின் மூன்று கட்டங்களிலும் மதி நுட்பத்துடன் செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இயக்கம், நான்காம் கட்ட ஈழப்போரில் செய்மதித் தொலைபேசிகள் ஊடாக, கிளைக் கட்டமைப்புக்கழுக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்கியவாறு களமாடிவந்த காலச் சூழல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய ஆயுத மௌனிப்பிட்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்று விசமத்தனமாக சிலரை இன்று பேசுவதற்கும் காரணமாக அமைந்து விட்டது.

களச் சூழல்கள் மோசமான நிலையினை அடைந்த பொழுதுகளில் கூட தன்னம்பிக்கை இழக்காமல் திட்டங்களை வகுத்த தலைவரும், தளபதிகளுக்கும், புலம்பெயர் வாழ் மக்களுக்கு தெரிவிக்குமாறு வழங்கிய கள நிலவரங்கள் தொடர்பான தகவல்கள் எதனையும் வழங்காது தவிர்த்து வந்ததும், ஆய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் அனைத்துலக தொடர்பகத்தினுள் திட்டமிட்டு அழிக்கும் நோக்கில் ஊடுருவியிருந்த எட்டப்பர்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியதும், அதன் பயனாக விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் அனைவரையும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைய வைத்து மிகப்பெரிய தாக்குதலுக்கு காத்திருப்பதாகவும் மக்கள் நம்பிக்கை இழக்காமல் தமிழீழ மீட்புக்கான இறுதிக் கட்ட போருக்கான நிதி சேகரிப்பில் மாடும் குறியாக இருந்தனர் இந்த செயற்பாட்டாளர்கள்.

புலத்தில் இருந்த அனைத்துலக தொடர்பகத்தைச் சேர்ந்தவர்கள் களத்தில் இருந்தவர்களுக்கு கொடுத்த மிக அதிகமான நம்பிக்கையும், புலத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுக்கு கள நிலவரத்தை உள்ள படி தெரிவிக்காமல், புலத்துப் போராட்டங்கள் எதனையும் சாதிக்கப் போவதில்லை, களத்தில் மிகப்பெரிய அடி விழப்போகிறது, தமிழீழ விடுதலைக்கான இறுதிப் போர் ஆரம்பிப்பதற்கு விடுதலைப் புலிகள் தருணம் பார்த்து காத்திருக்கிறார்கள் என்று பிரமாண்டமான நம்பிக்கை வார்த்தைகளை வழங்கி, எப்பொழுது அடி விழப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் புலம்பெயர் மக்கள் இணையத் தளங்களை 24 மணி நேரமும் உன்னிப்பாக அவதானித்த படி வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர். குறிப்பிட்ட 1.2. மணி நேரங்களுக்கு மட்டும் போராட்ட இடங்களுக்கு சுழற்சி முறையில் சென்று வந்தனர், அதுவும் சிலருக்கு பொழுது போக்காக அமைந்தது.

புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து போராட்டங்களை ஒழுங்கு செய்து நடத்தியவர்கள் மிகப்பெரு மெடுப்பில் நிதி சேகரிப்பை நடாத்தினார்களே தவிர, அரசியல் ரீதியிலான நகர்வுகள் எதனையும் முன்னேடுக்காமலே முடங்கிக் கொண்டிருந்ததும், களத்தில் சிக்கித்தவித்த மக்களையும், புலத்தில் நம்பிக்கொண்டிருந்த மக்களையும் ஏமாற்றும் திட்டங்களையும் மட்டுமே இவர்கள் வரைந்து கொண்டிருந்தனர்.

செயற்பாடுகள் எதனையும் முன்னேடுக்காமலே, அமெரிக்காவுடன் கதத்துவிட்டோம், பிரித்தானியாவுடன் கதைத்துவிட்டோம், ஐநா சபையிலும் கதைத்துவிட்டோம், குறிப்பாக லண்டனில் உண்ணாவிரதம் இருந்தவர்கழுக்கு வெளிவிவகார அமைச்சரும், மற்றைய அமைச்சர்களும் இரகசிய வாக்குறுதிகள் தந்து விட்டனர் என்றெல்லாம் பொய் வார்த்தைகளை மட்டுமே களத்தில் இருந்தவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தனர்.

இறுதியாக ஒபாமாவுடனும் கதைத்து விட்டோம் அவரையும் சந்திக்க பிரித்தானியாவில் இருந்து தமிழர்கள் குழு ஒன்று செல்கிறது, அதன் ஊடாக சிறிலங்கா அரசுக்கு சர்வதேச நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஊடாக உத்தத்தை நிறுத்தும்படி அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறது, ஐநா சபையின் அதிகாரிகள் உத்த பகுதிகளுக்கு செல்லப் போகிறார்கள் அனைத்தும் சரியாகிவிட்டது இதோ யுத்தநிறுத்தம் உருவாகப்போகிறது சில நாட்களுக்கு தாக்கிப்பிடித்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்று தெரிவித்து நல்ல பதிலுக்காக காத்திருந்த அனைவரையும் நம்பவைத்துவிட்டனர். சகல வல்லமையும் பொருந்திய எமது இயக்கமும், இறுதி வரை சதி நடவடிக்கைகளை இனம்கண்டு கொள்ளவில்லை.

புலத்தில் இருந்த போராளிகள் பல உதாரணங்களையும் செயற்பாடுகளில் உண்மைத் தன்மை இல்லை என்பதையும் தெளிவு படுத்தியும் பயனற்றுப் போனது. கூடவே இருந்து குழிபறித்துக் கொண்டிருந்த கூட்டத்தை களமாடிய போராளிகள் தளபதிகளால் குறிப்பாக அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களாலும் இனம் காண முடியவில்லை, காரணம் அவர்கள் வழங்கிய பொய்யான உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தான், புலம்பெயர் கட்டமைப்புக்கள் மீது அதிக நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும், சகல வல்லமை படைத்தவர்கள் என்ற எண்ணத்தையும் போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்களுக்கும் ஏற்படுத்தியிருந்தது.

பிரித்தானியாவில் 2,.லட்சம் பேர், வீதி மறியல் வீதிகள் போக்குவரத்துக்கள் துண்டிப்பு, நிலக்கீழ் தொடருந்துகள் தடங்கல்,பிரான்சில் இலச்சம் பேர், வீதிகள் முடக்கம், ஜேர்மனியில் 50ஆயிரம் பேர் பல இடங்களில் புகையிரத வீதிகள் மறியல், நிலக்கீழ் போக்குவரத்துத் தடைப்பட்டது. கனடாவில் 2.2/1.லட்சம் பேர். ரொறன்ரோவில் ஹைவே மறிக்கப்பட்டது. அரசுகள், அரச ஊடகங்கள் விவாதங்கள் நடத்துகின்றன, பத்திரிகைகள் கிழி, கிழி, என கிழித்து எழுதுகின்றன, நிச்சயமாக நீங்கள், நாங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என்று இப்படியாக புலத்தில் இருந்து உண்மைக்குப் புறம்பான நம்பிக்கை வார்த்தைகளை வழங்கியவாறு 30 வருடகால தன்னிகரில்லா விடுதலைப் போரடத்திற்கு திரை மறைவில் குழி தோண்டப்பட்டதும், நம்பவைத்துக் கழுத்தறுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டத்தை இறுதி நேரத்தில் தான் தளபதி மணிவண்ணன் (கஸ்ரோ) அவர்கள் தெரிந்து கொள்கிறார்.

உடனடியாகவே தலைவருக்கும், தளபதிகளுக்கு தகவல்கள் வழங்கப்பட்டன. தலைவரும் தளபதிகளும் சற்றும் தடுமாறாமல் அடுத்த கட்ட நகர்வுகளை தாமதமின்றி முன்னேடுத்தவாறு களமுனைகள் அனைத்தும் மறு சீர் அமைக்கப்படுகிறது.

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் ஊடாக தலைவரின், தளபதிகளின் நம்பிக்கைக்கு உரிய போராளி ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. அந்தப் போராளி யார்? என்பதையும் நாளைய தொடரில் பார்க்கலாம்….

“பொறுமைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எல்லைக் கோடுகள் உள்ளன” என்கிற தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக இந்த தொடர் எழுதப்படுகிறது இங்கு எழுதப்படும் எந்த ஒரு தகவலும் பொய்யானவை அல்ல. தவறுகள் இருப்பின் தொடர்புகொண்டு தெரியப்படுத்துங்கள் அவற்றுக்கான பதில்கள் ஆதாரத்துடன் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மைகள் தொடரும்…

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

ஈழம்5.இணையம் தி.தமிழரசன். தொடர்புகளுக்கு skyp: eelam5.com

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை -00

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-03

Comments Closed

%d bloggers like this: