டென்மார்க்கில் கரும்புலிகள் நாள் நினைவு வணக்க நிகழ்வு.

Home » homepage » டென்மார்க்கில் கரும்புலிகள் நாள் நினைவு வணக்க நிகழ்வு.
டென்மார்க்கில் கரும்புலிகள் நாள் நினைவு வணக்க நிகழ்வு.

july05tvdkடென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் கரும்புலிகள் நாளாகிய வரும் சூலை மாதம் 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழீழ தேசத்தின் அக்கினிக்குஞ்சுகளுக்கான இந்த நினைவு வணக்க நிகழ்வு தமிழர் நடுவம் டென்மார்க்கின் அனுசரனையுடன் தமிழ்தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கால் ஒழுங்குசெய்ப்பட்டுள்ளது.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வணக்கம் செலுத்த அனைவரும் அழைக்கப்டுகின்றனர்.

இடம்: BILLUND FRILUFT, Lærkevej 21, 7190 Billund (indgang gennem bommen for enden af Lærkevej.)
காலம்: 05-07-2013 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி

நினைவு வணக்க நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் போராளிகளுடான மக்கள் சந்திப்புக்கள் டென்மார்க்கின் பல நகரங்களிலும் சூலை மாதம் நடைபெறவிருக்கின்றது. உங்கள் நகரங்களிலும் மக்கள் சந்திப்பை ஒழுங்குசெய்ய விரும்பின் தமிழர் நடுவம் டென்மார்க் உடன் தொடர்புகொள்ளவும்.

தொடர்புகளுக்கு:
தொலைபேசி: 71450103
மின்னஞ்சல்: info@tamilcentre.dk

july05tvdk

Comments Closed

%d bloggers like this: