திமிர் காட்டிய சிறீலங்கா அணி ஆதரவாளர்கள், புரட்டி எடுத்த தமிழர்கள்.

Home » homepage » திமிர் காட்டிய சிறீலங்கா அணி ஆதரவாளர்கள், புரட்டி எடுத்த தமிழர்கள்.

lo1சென்ற 17ம் திகதி லண்டனில் தமிழர்கள் தாக்கப்பட்டவுடன் குமுறிய புலம்பெயர் தமிழர்கள், சிறீலங்கா அணிக்கு எதிராக பெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.

அதன்படி இங்கிலாந்தின் ஒரு பகுதியான வேல்ஸ் பகுதியில் உள்ள க்கார்டிஃப் எனும் பகுதியில் 20-06-2013 அன்று காலை 9மணி முதல் அணி திரளத் தொடங்கிவிட்டார்கள்.

பெருந்தொகை தமிழர்களைக் கண்ட சிங்கள ஆதரவாளர்கள் மிரண்டு போனார்கள் ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மைதானத்திற்கு உள்ளே சென்று விட்டார்கள் ஆனால் போட்டி முடிந்து திரும்பி வரும்போது அனைத்து சிங்கள ஆதரவாளர்களும் ஒன்றாகத்தான் வருவார்கள் அப்போது தமிழர்கள் என்ன செய்வார்கள் என நினைத்து தங்களது திமிர்த்தனத்தை காட்ட முனைந்த வேளையில் பெரும் கோபம் கொண்டு அதுவரை அமைதியாக போராடிய தமிழ் இளைஞர்கள் சிறீலங்கா அணியின் ஆதரவாளர்களுக்கு மிகச் சரியான பாடங்களை புகட்டி அனுப்பியுள்ளார்கள்.

அதன் பின்பு மைதானத்தை விட்டு வெளியே வந்தவர்கள் மேலே அணிந்து வந்த சிங்கள அணியின் சின்னங்கள் அடங்கிய அனைத்து பொருட்களையும் கழற்றி பைகளில் அடைத்துவிட்டு வேறு யாரே போல் வெளியேறினார்கள்.

சிலர் காவல்த்துறையினர் இரு பக்கமும் வர நடுவே தலை குனிந்தபடி வாகனத்தில் எறி விரைந்து சென்றார்கள். காவல்த்துறை பாதுகாப்பு கொடுத்தபோதும் சிலருக்கு பாடங்கள் புகட்டப்பட்டது.

இந்த பாடங்களை கற்று கொடுத்ததற்காக சில தமிழர்களை பிரித்தானிய காவல்த்துறை கைது செய்து பின்னிரவில் விடுதலை செய்துள்ளார்கள்.

Comments Closed

%d bloggers like this: