ஐந்தாம் கட்ட ஈழப்போரை எதிர்கொள்ள சிறீலங்கா போர்ப் பயிற்சி.

Home » homepage » ஐந்தாம் கட்ட ஈழப்போரை எதிர்கொள்ள சிறீலங்கா போர்ப் பயிற்சி.

nirkakamவிரைவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐந்தாம் கட்ட ஈழப்போரை ஆரம்பிப்பார்கள் என்ற அச்ச உணர்வு சிறீலங்கா அரசிடம் அதிகம் காணப்படுவதால் தமது இராணுவ பலத்தை நவீன மயப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு கட்டமாக சிறீலங்கா இராணுவத்தின் 2698 படையினரும், பல நாடுகளைச் சேர்ந்த 40 படையினரும் பங்குகொள்ளும் நீர்க்காகம் நான்கு போர்ப்பயிற்சியும், ஒத்திகையும் மிகப்பெரும் எடுப்பில் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்தப் போர்ப் பயிற்சி ஒத்திகை தமிழர் தாயகப் பகுதியான மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் நீர்க்காகம் தாக்குதல், 4 போர்ப்பயிற்சி வரும் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. வரும் 11ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரையான 13 நாட்கள் நடக்கவுள்ள இந்தப் போர்ப்பயிற்சியில், 2698 சிறிலங்காப் படையினரும், 40 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, கதிரவெளி, திருகோணமடு, தொப்பிகல, நரக்கமுல்லை பகுதிகளில் இந்தப் போர்ப்பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் போர்ப்பயிற்சியில் சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் சிறப்புப் படைப்பிரிவுகளும், சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையின் சிறப்புப்படைப்பிரிவுகளும் பங்கேற்கவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிறேசில், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 படையினரும் இதில் பங்கேற்கவுள்ளனர். சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் கிரிசாந்த.டி.சில்வாவின் மேற்பார்வையின் கீழ் இந்தப் போர்ப் பயிற்சிக்கு பிரிகேடியர் பியால் விக்கிரமரத்ன தலைமை தாங்கவுள்ளார்.

பிரதானமான கடல், தரை,வான் தாக்குதல் போர்ப்பயிற்சிகள் திருகோணமடு, வெருகல், திருகோணமலைப் பகுதிகளில் இடம்பெறும். இந்த ஆண்டு போர்ப்பயிற்சி, படகுத்துறைகள் மீதான தாக்குதல், உயர்பெறுமான இலக்குகள் மீதான தாக்குதல், வேவு, இலக்குகள் கண்காணிப்பு, வான்வழி நடவடிக்கைகள், கடல்வழி நடவடிக்கைகள், கடல்வழித் தரையிறக்கம், வழி கண்டறியும் குழுக்கள், எதிரியின் கோட்டைகளில் பராசூட் மூலம் குதித்தல், பதுங்கித் தாக்குதல்கள், தேடுதல் நடவடிக்கைகள், தீவிரவாத முறியடிப்பு மற்றும் பிணைக்கைதிகள் மீட்பு, உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இடம்பெறவுள்ளது.

இலங்கை அரசின் கருத்துப்படி போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவம் 2010ம் ஆண்டு, முதல் முறையாக சிலாவத்துறையில் நீர்க்காகம் தாக்குதல்-1 போர்ப் பயிற்சியை நடத்தியது. அதையடுத்து, திருகோணமலை, தொப்பிக்கல பகுதிகளில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேசத்தின் ஆதரவுடன் ஐநா. சபையின் ஊடாக தமிழ் மக்கள் மக்களுக்கான தனிநாடு உருவாகும் என்ற நம்பிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்தது மட்டுமல்லாமல், தற்காலிகமாக தமது செயற்பாடுகளையும் மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிறீலங்கா அரசு இப்படியான தாக்குதல் பயிற்சிகளை நடத்திவருவது. விரைவில் அல்லது சில ஆண்டுகளின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐந்தாம் கட்ட ஈழப்போரை ஆரம்பிப்பார்கள் என்ற அச்ச உணர்வு சிறீலங்கா அரசிடம் அதிகம் காணப்படுவதால் தமது இராணுவ பலத்தை நவீன மயப்படுத்தி வருகிறது. .

அதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐந்தாம் கட்ட ஈழப்போரை தாக்குப் பிடிக்கும் நோக்கில், விடுதலைப் புலிகளின் தரை இறக்கங்களை தடுப்பதற்கும், பயிற்ச்சி முகாம்களை இனம்கண்டு அதன்மீது தாக்குதல் நடத்தவும், தமது படைகள் விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்டு எடுக்கவும், விடுதலைப் புலிகளின் வான் படையின் தாக்குதல்களை முறியடிக்கும் நோக்கிலும் இந்தப் போர்ப் பயிற்சிகளை சிறீலங்கா இராணுவம் முன் எடுக்கிறதா என்கிற சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

Comments Closed

%d bloggers like this: