ஓற்றுமைக்கான முயற்சிகளை வரவேற்று தமிழீழ எல்லாளன் படை அறிக்கை.

Home » homepage » ஓற்றுமைக்கான முயற்சிகளை வரவேற்று தமிழீழ எல்லாளன் படை அறிக்கை.

ellalan logoதமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகளை பலப்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டி தமிழீழ எல்லாளன் படையினர் இன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தமிழீழ எல்லாளன் படையின் முழுமையான அறிக்கை

தமிழீழம்
26.11.2013

ஓற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம்.
அன்பார்ந்த எம் தமிழீழ உறவுகளே!
“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது…” என்ற தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகள் யாவும் பலப்படுத்தப்படவேண்டும் எனவும் தமிழீழ எல்லாளன் படையாகிய நாம் வேண்டுகின்றோம்.

வடதமிழீழத்தில் சிறிலங்கா அரசால் திணிக்கப்பட்ட தேர்தலில் தமிழ்மக்கள் சிறிலங்கா அரசு மீது தமக்கிருக்கும் எதிர்ப்பை ஒன்றுபட்டு சனநாயக வழியில் வெளிப்படுத்தியிருந்தனர். அதே போன்று தமிழகத்திலும் சிறிலங்கா அரசிற்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக சட்டமன்றில் நிறைவேற்றியிருந்தனர். அத்துடன் புலம்பெயர் தேசங்களிலும் போராளிகளும் செயல்பாட்டாளர்களும் ஒற்றுமையாக சில நாடுகளில் செயல்பட ஆரம்பித்திருப்பாதாகவும் நாம் அறியக்கூடியதாகவுள்ளது.

தமிழீழவிடுதலை போராட்டத்தில் வித்தாகிப்போன எமது மாவீரச்செல்வங்களை போற்றிப்பூசிக்கும் புனித நாளை நெருங்குகின்றோம். தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை வெளிப்படையாக ஒழுங்கமைக்க முடியாத நிலமையுள்ள போதும் புலம்பெயர் தேசங்களில் வழமை போன்று மாவீரர்நாள் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுவருகின்றது.
பல நாடுகளில் வரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒற்றுமையாக ஒழுங்கமைப்பதற்கான முயற்சிகளில் போராளிகளும் செயல்பாட்டாளர்களும ஈடுபட்டுள்ளதை நாம் வரவேற்கின்றோம். விடுதலைப் போராட்டத்திற்கு ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். மாவீரர் நாள் ஒழுங்கமைப்பில் போராளிகளின் ஆலோசனைகளையும் ஒத்துழைபையும் பெற்று ஒற்றுமையாக செயல்பாட்டாளர்கள் செயற்படுவது இன்றிமையானது.

புலம்பெயர் நாடுகள் பலவற்றில் இந்த ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் சில நாடுகளில்; போராளிகளின் ஒன்றுமைக்கான கரங்களை தட்டிக்களித்து தொடர்ந்தும் தமிழீழவிடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் சில செயல்பாட்டாளர்கள் செயற்படுவது கண்டிக்கப்படவேண்டியது.
போராளிகளையும் போராளிகளுக்கு உறுதுணையாக செயல்படுபவர்களையும் அவமதிப்பது, மாவீரர்நாள் நிகழ்வில் தாயகவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களில் சிலரை புறக்கணித்தமை மற்றும் அண்மையில் மூத்த பெண் மாவீரர் ஒருவர் பெண்கள் எழுச்சி நாளில் புறக்கணிக்கப்பட்டது போன்ற பல விடயங்கள் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறான செயல்களில் ஈடுபடும் செயல்பாட்டாளர்கள் மற்றும் கலைக்கூட பொறுப்பாளர்கள் தமது தவறுகளை திருத்தி ஒற்றுமைக்கான கரங்களை பலப்படுத்துமாறும் அல்லது ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடுமாறும் கண்டிப்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

மாவீரர்களின் தியாகங்களில் நின்று விடுதலையை அழிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களை நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை ஏச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழீழ எல்லாளன் படையின் பெயரில் அனைத்துலக தொடர்பகத்தை சேர்ந்த சில நபர்கள் பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. எமது அமைப்பின் பெயரில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கின்றோம். தமிழீழ எல்லாளன் படையின் அறிக்கைகள் ellalanforceoftamileelam11@gmail.com என்ற மின்னஞ்சலில் இருந்தே ஊடகங்களுக்கு அனுப்பப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

!ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர ஆயுத போராட்டம் முடிக்கப்படவில்லை.!
மீண்டும் விரைவில் வருவோம்.!

தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம்

த.மணியரசன்
நடவடிக்கைப் பொறுப்பாளர்.
தமிழீழ எல்லாளன் படை
தமிழீழம்

ellalan

Comments Closed

%d bloggers like this: