பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.

Home » homepage » பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.

பதுளை29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம்.
தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள்.

மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது.

கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் – 82 (பெண்குழந்தைகள்)
100 –ஆண்குழந்தைகள் 12வயதிற்கு உட்பட்டோர்.
150 குடும்பங்கள்.
மொத்தம் 572 பேர் தங்கியுள்ளனர்.

உனகல தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-

41 பெண் குழந்தைகள்
33 ஆண் குழந்தைகள்.

மொத்தம் 297 பேர் தங்கியுள்ளனர்.

எங்கள் சகோதர உறவுகளான இம்மக்களின் துயர் துடைக்க நேசக்கரம் தருமாறு வேண்டுகிறோம். ஓவ்வொருவரும் தங்களால் இயன்றள உதவியை நல்குங்கள். சிறுதுளி பெருவெள்ளமாகும்.

குழந்தைகளுக்கு தேவையான போர்வைகள். ஒருபோர்வையின் விலை – 600ரூபா.
256 குழந்தைகளுக்கு – 153600.00ரூபா. (அண்ணளவாக யூரோ 930€)
பால்மா – ஒன்றின் விலை – 375.00ரூபா
256 குழந்தைகளுக்கு – 96000.00ரூபா. (அண்ணளவாக யூரோ 581€)
பிஸ்கெட் – ஒரு பெட்டி விலை – 500.00ரூபா.
256 குழந்தைகளுக்கு – 128000.00ரூபா(அண்ணளவாக யூரோ 775€)
நூடுல்ஸ் – 256பெட்டி – 64000.00ரூபா (அண்ணளவாக யூரோ 387€)
கடலை 256 கிலோ – 46080.00ரூபா ((அண்ணளவாக யூரோ 280€)

மொத்தம் தேவையான உதவி :- 2944€.

உதவிகளை வழங்க விரும்புவோர் கீழ்வரும் வங்கியிலக்கம் அல்லது பேபால் ஊடாக உதவ முடியும்.

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

நேசக்கரம்

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Comments Closed

%d bloggers like this: