இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

சரவணபவன் அணி மீது சிறீதரன் குண்டர்கள் தாக்குதல்!!

killi-sree_01தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களிடையேயான குடுமிப்பிடி சண்டைகள் உச்சம் பெறத்தொடங்கியுள்ள நிலையினில் அது தற்போது வன்முறை கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வகையினில் கிளிநொச்சியினில் பிரச்சார நடவடிக்கைகளிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் வேட்பாளரான சரவணபவனின் ஆதரவாளர்கள் மீது சிறீதரனின் ஆதவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு கட்டைப்பஞ்சாயத்து நடத்திவரும் சிறீதரனது குண்டர்களே தாக்குதல் நடத்தியதாக சரவணபவன் தெரிவித்தார். தன்னை தவிர வேறு எவரையும் கிளிநொச்சியினில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்துவரும் சிறீதரன் ஈபிடிபி போன்றவர்களை விட மோசமாக நடந்துகொள்வதாக சரவணபவன் மேலும் தெரிவித்தார். இதனிடையே தனக்கு அரசியல் வாழ்வு வழங்கிய சிறீதரனிற்கு நன்றி தெரிவித்து வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா சிறீதரனது ஆதரவாளர்கள் சகிதம் பிரச்சாரங்களை இன்று ஆரம்பித்துள்ளார்.