தமிழரின் தேசிய ஒற்றுமையைச் சிதைக்க முற்பட்ட கஜேந்திரகுமார் படுதோல்வி

Home » homepage » தமிழரின் தேசிய ஒற்றுமையைச் சிதைக்க முற்பட்ட கஜேந்திரகுமார் படுதோல்வி

11911787_10152879828081792_1399889614_nஸ்ரீலங்காவின் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் மீண்டும் ஒருமுறை வெற்றிவாகை சூடியுள்ளது.

தங்களுடைய தேசிய உணர்வினை ஒற்றுமையுடன் வெளிக்காடியுள்ள தாயக மக்கள், சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் இயங்கிவருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் முகத்தில் கரி பூசியுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தமிழ்த் தேசியத்தினைச் சிதைக்கும் நோக்குடன் களமிறக்கப்பட் கறுவாக்காட்டுப் பொன்னம்பலத்தில் பேரனான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இத்தேர்தலில் தமிழ்த் தேசிய உணர்வுடன் வாழுகின்ற தாயக மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்கள் தாயகத்தில் போரின் வலி சுமந்து வாடுகின்றபொழுது இந்த மக்களின் அவலங்களைக் காண்பித்து புலத்தில் திரட்டப்பட்ட பணத்தில் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி படுதேல்வியடைந்துள்ளது.

குறிப்பாக வடக்கில் சிங்கள அரசியல் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளைக் கூட சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இதேவேளை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் தேசிய உணர்வுடன் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்னர்.

Comments Closed

%d bloggers like this: