இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

பாலச்சந்திரனை படுகொலை செய்தது இலங்கை ராணுவம்தான்: ஐநா அறிக்கை

balachandranவிடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவம் படுகொலை செய்ததாக ஐநா மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. அதில், இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் ஜித் அல் உசேன்‌ இன்று தாக்கல் செய்தார். அதில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளிட்டோரை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது. சர்வதேச அளவில் இலங்கையில்தான் அதிகமாக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை ராணுவம், கடற்படை, சிஐடி பாலியல் வன்முறையில் ஈடுபட்டன. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாகினர் என்று கூறப்பட்டுள்ளது. –