கற்பனைகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… வைகோவுக்கு ஸ்டாலின் பதில்

Home » homepage » கற்பனைகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… வைகோவுக்கு ஸ்டாலின் பதில்
கற்பனைகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… வைகோவுக்கு ஸ்டாலின் பதில்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அபரிமிதமான கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்‌.

தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதால் சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 17 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்றார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருந்த திமுக தொண்டர்கள் வைகோவை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தி அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அவர் கார் மீது கல், செருப்புகளையும் வீசினர். இதனால் வைகோ அப்படியே திரும்பி சென்றுவிட்டார். திமுகவினரின் இந்த செயலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனமும் தெரிவித்தார்.

இது குறித்து வைகோ கூறுகையில், சிலரின் தூண்டுதலின் பேரில் கருணாநிதியை பார்க்கவிடாமல் தி.மு.க.வினர் தடுத்ததாக, ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஸ்டாலின் வைகோவின் அபரிமிதமான கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

Comments Closed

%d bloggers like this: