ஜெயலலிதாவின் மரணச் செய்தியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக அதிகரிப்பு

Home » homepage » ஜெயலலிதாவின் மரணச் செய்தியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக அதிகரிப்பு
ஜெயலலிதாவின் மரணச் செய்தியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக அதிகரிப்பு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமான செய்தியை கேள்வியுற்ற அதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 597 ஆக அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க தெரிவித்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டு வருவதாக அ.தி.மு.க குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாக கடந்த 5ஆம் திகதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

அவர் இறந்த செய்தியை கேள்வியுற்ற அதிர்ச்சியில் அன்று முதல் அவரது ஆதரவாளர்கள் மாரடைப்பு மற்றும் ஏனைய காரணங்களால் மரணமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவ்வாறு மரணித்தவர்களின் எண்ணிக்கை இன்று 597 ஆக அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Comments Closed

%d bloggers like this: