அனைத்துலகம்

கட்டுப்பாட்டை மீறி வீதியில் நின்றவர்கள் மீது மோதிய விமானம்.

ஒரு கொலம்பிய போயிங் 727 ரக சரக்குவிமானம் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து கட்டுப்பாட்டை மீறி விமான நிலையத்திற்கு வெளியில் பார்வையாளர்களாக நிற்வர்களை மோதியுள்ளது.

இந்த விபத்தில் வீதியில் நின்ற பார்வையாளர்கள் எவரும் பலியாகவில்லை ஆனால் விமானத்தில் இருந்த அறுவரில் ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீன்களை ஏற்றிச்சென்ற விபத்துக்குள்ளான விமானத்தின் விமானியும் இறந்துள்ளதாக தெரிவித்த கொலம்பிய ஊடகம் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை கொலம்பிய தலைநகர் போகாரா நோக்கி புறப்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.