இலங்கை டென்மார்க் புலம்பெயர்

நிதி சேகரிப்பில் மீண்டும் ரிரிசி கும்பல்.

தமிழீழ விடுதலைக்காக சேகரிப்பட்ட நிதிகளையும், சொத்துக்களையும் கையடகப்படுத்தியிருக்கும் ரிரிசி குழுவினர் நிதி சேகரிப்பில் மீண்டும் புலம்பெயர் நாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமது அல்லகைகளுக்கான கூட்டங்களை மிகவும் இரகசியமாக நடாத்தி வருகின்றனர். இப்பொழுது ரிரிசி குழுவினர் டென்மார்கை தளமாக கொண்டு மகேஸ் தலமையில் இயங்குகின்றனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் மௌனத்தையும் தொடர்ந்து முன்னால் போராளிகள் தாயக்த்திலும் புலம்பெயர் நாடுகளிலும் போரின் வடுக்களுடன் வாழ்ந்து வருகையில் ரிரிசி குழுவினர் தமிழீழ தேசிய சொத்துக்களையும் தமதாக்கி கொண்டு மீண்டும் புலம்பெயர் தமிழ் மக்களிடையே நதிசேகரிப்பில் ஈடுபடவுள்ளமை தமிழ் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் முன்னாள் போராளி துளசி அவர்கள் விடுதலைக்கென சேகரிப்பட்ட சொத்துக்களை ரிரிசி குழுவினர்; எவ்வாறு கையடகப்படுத்தியுள்ளனர் என்பதை அண்மையில் வெளிப்படுத்தியிருந்ததுடன் தாயகத்தில் அல்லலுறும் முன்னாள் போராளிகளின் அவலங்களையும் எடுத்துகாட்டியிருந்தார். ( https://www.facebook.com/lovetamiltube/videos/1644548228892714/ )

மிகவும் இரகசியமாக நிதி சேகரிப்பதற்கான கூட்டங்கள் பல ஜரோப்பிய நாடுகளில் ரிரிசி குழுவினரால் நடாத்தப்பட்டுவருகின்றது. கூட்டங்களை குட்டி(விடுதலை, மயூரன்), ராயு, சசி(புலிகளின்குரல் வானொலிக்கு எதிரான சதியில் ஈடுபட்டவர்), நேசன் மற்றும் சுவிஸ் சந்தோஸ் ஆகியோருடன் பலர் நடாத்தி வருகின்றன். டென்மார்க்கில் குட்டி, நேசனுடன் கையடக்கப்படுத்திய சொத்துகளை நிர்வகி;க்கும் இவர்களின் பினாமி ஒருவரும் கலந்து கொண்டுள்ளார். டென்மார்க்கில் உள்ள பல ரிரிசி குழுவின் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து சொத்துக்களை கவனித்து வரும் பொழுதும் இந்த பினாமியின் உதவியுடன் இவர்கள் டென்மார்க்கிலேயே தங்கி வேலை செய்வது போன்று டென்மார்க் அரச திணைக்களங்களுக்கு தெரிவிக்கப்பட்டுவருகின்றது.

ஜரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு நகரங்களிலும் 15.000 ஈரோக்களையும், டென்மார்கில் 100.000 குரோண்களையும் தமது தலமைக்கு தரவேண்டும் என கூட்டங்களில் நியமிக்கப்பட்ட அலலகைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு சேகரித்த நிதி எங்கே என ஒருவரால் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது அந்த கணக்குகள் எல்லாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பொழுது புதிதாக சேகரிக்கப்போவதாகவும் குட்டியால் பதலளிக்கப்டடுள்ளது.

தாயகத்தில் சகல வேலைத்திட்டங்களையும் எனிமேல் தாங்கள் தான் செய்யப்போவதாகவும் தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் தலமைகளுடான தொடர்புகளும் தங்களுடாகவே தாயகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழர் பேரவையே செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகளின் அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பாக கேள்வியெளுப்பப்பட்ட பொழுது அவர்கள் மாட்டுபண்ணையில் இயங்கிவருகின்றனர் விரைவில் கலைந்துவிடுவார்கள் என பதிலளிக்கப்பட்டதுடன் முன்னாள் போராளிகள் தொடர்பாக பல்வேறு அவதூறுகளும் கூறப்பட்டது.

இப்பொழுது ரிரிசி குழுவின் அல்லகைகளாக செயற்படும் 2009ம் ஆண்டுக்கு முன்பு தமிழீழ விடுதலைக்கு எதிராக செயற்பட்ட பலரும் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

டென்மார்க்கில் நகரசபைகளின் நிதி உதவியுடன் இயங்கும் தமிழ் அமைப்புக்களின் மணடபங்களிலேயே ரிரிசி குழுவினர் நிதிசேகரிப்பதற்கான கூட்டங்களை நடாத்திவருகின்றனர். ரிரிசி போன்ற வன்முறைக்கும்பல்கள் நிதிசேகரிப்பதற்கான கூட்டங்களை நாடாத்துவதற்கு அனுமதித்ததால் தமிழ் அமைப்புக்கள் நகரசபையின் விதிமுறைகளை மீறியுள்ளதாக குறிப்பிட்ட அமைப்புகளின் அங்கத்தவர்கள் விமர்சித்துள்ளனர்.