பெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு.

Home » homepage » பெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு.
பெண்ணை தாக்கிய ஏஎஸ்பிக்கு பதவி உயர்வு.

திருப்பூரில் மதுபானக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை தாக்கிய ஏ.எஸ்.பி. பாண்டியராஜனுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்கியுள்ளது தமிழக அரசு.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்தினர். திருப்பூர் கூடுதல் எஸ்.பி. பாண்டியராஜன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணும், சிவகணேஷ் என்ற வாலிபரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாண்டியராஜன் உத்தரவின்படி அங்கிருந்தவர்கள் மீது காவல்துறையினர் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஏ.எஸ்.பி.பாண்டியராஜனுக்கு எஸ்பியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Comments Closed

%d bloggers like this: