தமிழ்மக்களுக்கு சனநாயகப்புலிகளின் வேண்டுகோள்.

Home » homepage » தமிழ்மக்களுக்கு சனநாயகப்புலிகளின் வேண்டுகோள்.
தமிழ்மக்களுக்கு சனநாயகப்புலிகளின் வேண்டுகோள்.

விடுதலைப்புலிகளின் அரசியல் அமைப்பாக செயல்படும் சனநாயப்போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கதிர் அவர்களினால் தமிழ்மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசியத்திற்காக போராடியவர்கள் தெருவில் நிற்கும் போது தேசியத்தின் பெயரில் நடக்கு அரசியல் துரோகங்கள் தொடற்பாகவும் தமது செயற்பாடுகள் தொடற்பாகவும் கூறப்பட்டிருக்கும் அறிக்கையில் புலம்பெயர்நாடுகளில் வாழும் முன்னால் போராளிகளையும் அமைப்புக்களையும் தம்முடன் இணைந்து பணியாற்ற அழைப்புவிடுத்துள்ளனர். அத்துடன் கட்டுக்கடங்காத அமைப்புகளை எந்தவொரு நாட்டிலும் விடுதலைப்புலிகளின் பெயரில் இயங்க அனுமதிக்கப்போதில்லை எனவும் கண்டிப்புடன் எச்சரித்துள்ளனர்.

விடுதலைப்போராட்டத்தில் வித்தான மாவீரர்களின் துயிலுமில்லங்களை புனரமைத்துவரும் சனநாயப்போராளிகளின் செயற்பாடுகள் தமிழ்மக்களால் வரவேற்கப்பட்டுவரும் நிலையில் அவர்களின் அரசியல் செயற்பாடுகளும் விரைவில் தமிழ்மக்களால் ஏற்க்கப்படும் அதற்கு இடமளித்து அரசியல் கட்சிகள் செயற்படவேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிற்பாற்பாகவும் அமையும். அதைவிடுத்து விடுதலைபோராட்டத்தில் சேற்க்கப்பட்ட தேசியசொத்துகளை களபரம்செய்துள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் சனநாயக போராளிகள் மீது அவதூறு பிரச்சாரம் செய்வதும், இறுதி யுத்தத்தில் ஏன் குப்பிகடிக்கவில்லை என வினாவுவதும் மக்களால் ஏற்க்கப்படபோவதில்லை.

சனநாயகபோராளிகளை மகிந்தவின் புலனாய்வினர் என புலம்பெயர்நாடுகளில் பிரச்சாரம் செய்துவரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் இப்பொழுது கஜேந்திரகுமார் குழுவினரின் அரசியல் செயல்பாடுகளுக்கென கூறி நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரும் தேர்தல்களில் சனநாயக போராளிகளை தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்வது விடுதலைப்புலிகள் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பது மீண்டும் அனைத்துலகதிற்கு எடுத்துக்கூறுவதாக அமைவதுடன் முன்னாள் போராளிகளின் மறுவாழ்விற்கும் வித்திடும்.

சனநாயகபோராளிகள் கட்சியின் முழுமையான அறிக்கை>>>>>>

தேசியம் பேசி துரோகங்கள் வளர்ச்சியடைகின்றன,தேசியத்திற்காய் போராடியவர்களும்,மக்களும் தெருவிலே நிற்கின்றனர்!!
தமிழ்த் தேசிய ஒற்றுமை என்பது துரோகிகளின் நல்வாழ்வுக்கானதல்ல!
எம் அன்பார்ந்த தமிழ்த் தேசிய உறவுகளே சிந்தியுங்கள்…..
எதற்காய் ஒருங்கிணைத்தோம்..?
எதற்காய் வாக்களித்தோம்..?
எதற்கானது எம் தமிழ்த் தேசிய ஒற்றுமை..?
தமிழ்த் தேசியம் என்ற சொல் வெறும் தமிழ்த் தேசிய பற்றினாலா எமக்குள் வந்தது? இந்த தமிழ்த் தேசியம் என்ற சொல்லுக்குள் தம் உயிர்களை அர்ப்பணித்து உறங்கிக்கொண்டிருப்பவர்கள் யார்? இந்த தமிழ்த்தேசிய ஒற்றுமைக்காக நிரந்தரமாக தங்கள் அங்கங்களை பறிகொடுத்து ஊனமுற்றவர்களாக எத்தனை ஆயிரம் தியாகிகள் எம் கண்முன்னே இருக்கிறார்கள்?
இந்த தியாகிகளின் கனவுகளும், தியாகங்களும் எதற்காக அவர்களால் வலிசுமந்து புரியப்பட்டது?
எம் தமிழ்த் தேசிய உறவுகளே…..
தமிழீழம் என்ற தனியரசை நோக்கியே எமது தலைவரும் எமது போராளிகளும் தமது இந்நுயிர்களை துச்சமாக எண்ணி இறுதிவரை போரிட்டுவந்தார்கள்.
எமது ஆயுதப் போராட்டத்தின் உண்மையான அரசியல் இலக்கானது தனியரசை நாம் எமது தாயகத்தில் நிறுவவேண்டும் என்பதற்கானதே.ஆயுதம் என்பது எமது இலக்கை நோக்கி நாம் நகரும்போது வரும் தடைகளை உடைப்பதற்கானதேயன்றி,நாம் ஆயுதத்தை ஏந்தியது இவ் உலகத்தை அச்சுறுத்தி எம்மிடம் அடிபணிய வைப்பதற்காக அல்ல.
உண்மையில் பயங்கரவாதம் என்பது எமக்கு தெரியவே தெரியாது,பயங்கரவாதத்தை எமக்கு காண்பித்தவர்களே உண்மையான பயங்கரவாதிகள்.நாம் இன்னொரு இனத்தை அழித்து ஓர் இனவழிப்புப் போரை நடத்தி உலகின் ஏனைய பயங்கரவாத அமைப்புக்கள்போன்று இலக்கற்று பயணித்திருந்தால் மட்டுமே எம்மை பயங்கரவாதிகள் என்று எவரும் சொல்லமுடியும்.
மேலும் இவ்வுலகத்தில் இன்று பல்வேறு பயங்கரவாத அமைப்புக்கள் இருக்கின்றன.அவற்றை உலகநாடுகளுடன் இணைந்து நாமும் அவர்களை பயங்கரவாதிகள் என்றே சொல்லிவருகின்றோம்.ஏனென்றால் உலகம் சொல்லும் பயங்கரவாதிகளை அவர்கள் செய்வது பயங்கரவாதம்தான் என்று எம்மாலும் அதை வரையறுக்கமுடிகின்றது.
இன்று உலகத்தில் உள்ள பயங்கரவாதிகளுடன் இந்த உலகம் எம்மை ஒப்பிடவில்லை என்பதைவைத்தே நாம் உண்மையில் பயங்கரவாதிகள் இல்லை என்பதை இந்த உலகம் எம்மை தன் உள்ளகத்தில் ஏற்றுக்கொண்டுள்னதென்பதே உண்மை.
உண்மையில் இவ்வுலகம் தான் வரயைறுத்த ஏதாவதொரு பயங்கரவாத அமைப்புக்கு எங்காவது தத்தமது நாடுகளில் அவர்களுக்கு அரசியல் தஞ்சம் கொடுத்து அவர்களை தனது நாட்டு மக்களுடன் இணைத்து ஒப்பிட்டு அரவணைத்ததுண்டா?
மேலும் இவ்வுலகம் தான் சொல்லும் பயங்கரவாத அமைப்புக்களான அல்குவைடா மற்றும் ISIS போன்ற பிரதான அமைப்புக்களில் இருந்து விலகியவர்களையோ அன்றி வெளியேறியவர்களையோ இல்லையேல் அவ்வமைப்புக்களின் ஆதரவாளர்களையோதன்னும் தத்தமது நாடுகளில் எங்காவது தான் அடைக்கலம் கொடுத்து அவர்களை தற்காத்ததுண்டா?
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டும் இந்த உலகம் வெறுமையாக பயங்கரவாதியென்று சொல்லிக்கொண்டு அவர்களை தமது நாட்டுக்குள் தமது மக்கள்மத்தியில் எந்தவித அச்சபயமும் இல்லாமல் அவர்களை தாம் அடைக்கலம் கொடுத்து சகஜயமாக வாழவிட்டுள்ளார்களென்றால் நாம் உண்டையில் பயங்கரவாதிகள் இல்லை என்பதை இந்த உலகம் மனசார ஏற்றுக்கொண்டுள்ளதென்பதே உண்மை.
மேலும் உலகத்தின் இந்த செயற்பாடுகள் ஊடாக நாம் ஒன்றைமட்டும் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடிய விடையம் என்னவெனில், எம்மை ஆயுதரீதியில் நாம் போராடுதையே இந்த உலகம் விரும்பவில்லை என்பதே உண்மை.இந்த உலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அரசியல் ரீதியாக எப்படியும் செயற்படலாம் என்றே தத்தமது நாடுகளுக்குள் அவர்களை தங்குதடையின்றி அனுமதித்து ஆதரவளித்துள்ளதென்பதையும் யாரும் மறுக்கமுடியாது.
ஆனால் இந்த உண்மை நிலையினை தமிழ்த் தேசியம் பேசும் நாமெல்லாம் உதறித் தள்ளிவிட்டு போலியான தமிழ்த் தேசியவாதிகளின் சுகபோக அரசியல் நல்வாழ்வுக்காக “எமது தலைவர் அவர்களை ஒருங்கிணைத்தார்” என்று மூடர்களாக சிந்தித்து எமக்கு நாமே மண்ணை வாரி இறைத்துவருவது மிகவும் வேதனைக்குரிய விடையமே.
மேலும் ஆயுதம் ஏந்திய நாமெல்லாம் அரசியலில் பங்கெடுக்க கூடாதென்று ஏதாவதொரு உலகநாடுதன்னும் எமது போராளிகளை தடைசெய்து அவர்களை அச்சுறுத்தியதுண்டா?
எனவே எம் அன்பார்ந்த தாயக புலம்பெயர் உறவுகளே…..
தமிழீழ விடுதலைப் புலிகளாக நாம் ஆயுதம் ஏந்தி எமது இனத்துக்காக இரத்தம் சிந்தி உருவாக்கிய இந்த தமிழ்த் தேசிய ஒன்றுதிரட்சியினை, போலியான தமிழ்த் தேசியவாதிகளிடம் நாம் இனாமாக ஒப்படைத்துவிட்டு நடைப் பிணங்களாக நாம் இந்த உலகில் எங்காவது ஒரு மூலையில் போய் ஒதுங்கிவாழுவோம் என்று நீங்கள் எவரும் எம்மை தப்பாகக் கருதவேண்டாம்.
தாயகத்திலும்,புலத்திலுமாக எமது போராளிகள் தொடர்ந்தும் எமது தலைவன் வளர்த்த புலிகளாகவே என்றும் மனவுறுதியுடன் இருப்பார்கள். நாம் ஆயுதம் ஏந்தி கேட்டதைத்தான் இந்த உலகம் தப்பென்று கூறிநின்றது.இன்று நாம் ஆயுதமற்ற புலிகளாக இருப்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
எமது தலைவர் அன்று சொன்னார் கடைசிப் புலி உள்ளவரை எமது போராட்டம் தொடருமென்று.போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியத்தை நாங்கள் ஒருபோதும் இழக்கமுடியாது.எனவே வடிவம் மாறிய எமது போராட்டத்தை யாரும் தடுக்கவும் முடியாது.
ஆகவே எமது ஆயுதப்போராட்டம் ஊடாக நாம் பல்லாயிரம் உயிர்களை எமது மண்ணுக்குள் விதைத்து பல்லாயிரம் போராளிகளினதும்,ஆதரவாளர்களினதும் சரீத உழைப்பினாலும், பலத்தினாலும் கட்டிவளர்த்த எமது இயக்கத்திற்கே உரித்தான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியினை நாமே பொறுப்பெடுத்து ஆளவேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும்.
இந்த குறிக்கோளின் முதற்படியாகவே நாம் இன்று ஜனநாயகப் புலிகளாக எம்மை உருமாற்றி அரசியலில் கால்பதித்து வேகமாக எமது அரசியல் இலக்கினை அடைவதற்காக நாம் தொடர்ந்து உறுதியுடன் பயணிக்க முடிவுசெய்துள்ளோம்.
மேலும் எமது அரசியல் செயற்பாடுகளானது உலகம்தழுவிய எமது ஒட்டுமொத்த போராளிகளினதும் நேர்த்தியான சிந்னைகளுக்கு அமைவாகவே அவர்களின் ஒன்றுபட்ட ஆதரவுகளுக்கு மதிப்பளித்து முன்னெடுக்கப்படும் என்பதனையும் இங்கே ஆணித்தரமதக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
அத்துடன் எமது ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் எமது அமைப்பினால் உருவாக்கப்பட்ட எமது புலம்பெயர் அமைப்புக்களையும் தொடர்ந்தும் எம்மோடு இணைந்து பிரயாணிக்க முன்வருமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் வடிவம் மாறிய எமது அரசியல் போராட்டத்துடன் இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு நீங்கள் முடிவெடுத்து எம்முடன் அரசியல் ரீதியாக இணைந்து செயற்பட முன்வராத சந்தர்ப்பத்தில், அவ்வமைப்புக்கள் எவை எவையென எம்மால் அவதானிக்கப்பட்டு எதிர்காலத்தில் அவ்வமைப்புக்களுடனான எமது தொடர்புகளை நாம் நிரந்தரமாகத் துண்டிப்பதுடன், ஜனநாயகப் போராளிகளின் கட்டுக்கடங்காத எந்தவொரு அமைப்புக்களையும் புலிகளின் பெயரால் எந்தவொரு நாட்டிலும் நாம் இயங்குவதை அனுமதிக்கப் போவதில்லை என்பதனையும் இங்கே கண்டிப்புடன் பதிவுசெய்ய விரும்புகின்றோம்.
ஆகவே நாம் ஆயுதம் ஏந்தி பயணித்தபோது எமது அமைப்புடன் தம்மை நம்பிக்கையுடன் இணைத்து பிரயாணித்த எமது அனைத்து முன்னாள் போராளிகளையும் எங்களுடன் தொடர்புகொண்டு தம்மை இந்த அரசியல் களத்தினில் இணைத்து பிரயாணிக்க முன்வருமாறு நாம் கேட்டுக்கொள்வதுடன் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் சார்பாக எமது ஜனநாயகப் போராளிகளில் நம்பிக்கையிழந்து எமது கட்சியை சிதைக்க தாயகத்தில் பிறிதொரு கட்சியை யாரும் உருவாக்கி எம்மை உடைக்க முயலாது,எம்முடன் தம்மையும் பூரணமாக இணைத்து உறுதியுடன் பிரயாணிக்க தாமும் முன்வரவேண்டும் என்பதனையும் இங்கே அன்பாக வேண்டிநிற்கின்றோம்.
அதைவிடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் புனிதமான பெயருக்கு யாரும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் எமது இயக்கத்தின் பெயரை வைத்து தற்பேததைய தேசவிரோதக் குழுக்கள்போன்று ஆளுக்கொரு கட்சியினை ஆரம்பிக்காது, நாம் எமது ஆயுதப் போராட்டத்தில் இருந்த “ஒரே அமைப்பெனும்” உறுதியான கொள்கையினை, எமது அரசியல் போராட்டத்திலும் ஜனநாயகப் போராளிகள் கட்சிதான் எமது “ஒரே அரசியல் சக்தி” எனவும் தொடர்ந்து ஒருகுடையின்கீழ் நாம் ஒருமித்து உறுதியுடன் பயணிப்போம்.
நன்றி
திரு.இ.கதிர்
பொதுச்செயலாளர்
தலைமைச் செயலகம்
“ஜனநாயகப் போராளிகள் கட்சி”

Comments Closed

%d bloggers like this: