“அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்

Home » homepage » “அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்
“அனைத்துலகத் தொடர்பகம் தற்போது இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே”-முன்னாள் போராளிகள்

புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் எனும் கட்டமைப்பு 2009ம் ஆண்டுடன் செயலிழந்துவிட்டது தற்போது இருப்பதாக சொல்லப்படும் கட்டமைப்பு இலங்கை புலனாய்வாளர்களின் கட்டமைப்பே!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை தமக்கு சாதகமாக்கி புலத்தில் புலிகளாக வேடம்தரித்து நிதிமோசடிக்கு தயாராகும் இலங்கை புலனாய்வாளர்கள்!!

எமது இயக்கத்தின் மீதான உலக நாடுகளின் தடைகளை எமது இயக்கம் இராணுவ பலத்தோடு இருந்தபோது அதை அகற்ற முன்வராத அனைத்துலக தொடர்பகம் எனும் தற்போதைய புலிகளற்ற கட்டமைப்பு,இன்று அத் தடைகளை தாம்தான் உடைத்தெறிந்ததாக ஊடகங்கள் ஊடாக தற்போது பலவிதமான பொய்களை வெளியிட்டு தமது நிதிமோசடிகளை தாம் தொடர்ந்தும் புலம்பெயர்

தேசங்களில் மேற்கொள்வதற்காக மீண்டும் முண்டியடித்துவருவதை நாம் அவதானித்தவண்ணமே இருக்கின்றோம்.
இங்கே அனைத்துலக தொடர்பகம் எனும் வெறுமையான கட்டமைப்பொன்றை சிலர் அதை இன்னும் தாம் தலைமையோடு தொடர்பிலிருந்து இயக்கிவருவதாக பச்சப் பொய்களை புலம்பெயர் மக்களிடம் உரைத்த்து, தங்களின் தனிநபர் வருமானங்களை பெருக்குவதற்காக தாம் தொடர்ந்து செய்துவரும் பொய்யான,போலியான பரப்புரைகளையும் நாம் தொடர்ந்து அவதானித்தவண்ணமே இருக்கின்றோம்.

இந்த நிதிமோசடிகளில் சம்மந்தப்பட்ட தனிநபர்களின் பெயர்களை எதிர்காலத்தில் நாம் வெளியிட்டு அவர்கள் தொடர்பாக புலம்பெயர் மக்கள்தாம் விழிப்புடன் இருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளவுள்ளோம்.

ஆகவே தற்கால நிதிமோசடியாளர்களுக்கும்,எமது இயக்கத்தின் எந்தவொரு போராளிகளுக்கும் புலத்தில் தற்போதுவரை தனிநபர்களால் மேற்கொள்னப்பட்டுவரும் அனைத்துலக தொடர்பகம் எனும் நிதிமோசடிக்கான கட்டமைப்போடு எமது இயக்கம் சார்ந்த எந்தவித தொடர்புகளேதும் இல்லை என்பதனையும் எமது புலம்பெயர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Comments Closed

%d bloggers like this: