பலகோடி பேரம்பேசல்களுடன் தொடுக்கப்பட்ட வழக்கின் நோக்கமானது முடக்கப்பட்ட புலிகளின்நி திகளை பகிர்ந்தெடுப்பதையே இலக்காகக் கொண்டது!

Home » homepage » பலகோடி பேரம்பேசல்களுடன் தொடுக்கப்பட்ட வழக்கின் நோக்கமானது முடக்கப்பட்ட புலிகளின்நி திகளை பகிர்ந்தெடுப்பதையே இலக்காகக் கொண்டது!
பலகோடி பேரம்பேசல்களுடன் தொடுக்கப்பட்ட வழக்கின் நோக்கமானது முடக்கப்பட்ட புலிகளின்நி திகளை பகிர்ந்தெடுப்பதையே இலக்காகக் கொண்டது!

விடுதலைப்புலிகளின் சொத்துமுடக்கத்தை நீக்குவதற்காகவே விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பயங்கரவாத தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத் தனியரசிற்கான நிழல் அரசாங்கத்தை நிறுவி
அதனை நிர்வகிப்பதற்கான நிதி வளங்களை பாரிய முதலீடுகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானங்களின் மூலமே கட்டியெழுப்பி வந்தது.

இந்தப் பாரியமுதலீடுகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழ்ந்துவந்த தமிழர்களின் பெயர்களிலே பதிவுசெய்யப்பட்டிருந்தது.
அந்த முதலீடுகள் வீடுகளாக,வர்த்தக நிலையங்களாக,பலசரக்குக் கடைகளாக,கோயில்களாக,காணிப்பரப்புகளாக,
எரிபொருள் நிரப்பு நிலையங்களாக,உண்டியல் பணப்பரிமாற்ற நிலையங்களாக,
நிதி வைப்புக்களாக,படகுகட்டும் தொழிற்சாலைகளாக (yard),பயணிகள் மற்றும் பொருட்கள் ஏற்றும் கப்பல்களாக (passenger ship)(cargo ship)எரிபொருட்கள் மற்றும் எரிவாயுக்களை ஏற்றிச்செல்லும் கப்பல்களாக(tanker)
(gas curriers),வாகன ஏற்றுமதிக் கொள்வனவு நிறுவனங்களாக,பார ஊர்திகளாக
(container trucks),
தங்கநகை மாடங்களாக,
புடவை மாளிகைகளாக
பெருமண்டபங்களாக,அனைத்தும் விடுதலைப்புலிகளால் நிர்வகிக்கப்பட்டுவந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டபோதும் இந்த முதலீடுகளால் கிடைக்கப்பெற்ற பெருமளவான நிதிகள் விடுதலைப்புலிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்துவந்தது.

2009 மே மாதம் 17 ம் நாள் முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் தலைமையின் இருப்புக்கள் கேள்விக்குறியாகிப்போய்விட,
வல்லாதிக்க நாடுகளின் சூழ்ச்சிகளால் சிங்களத்திடம் சரணடைய வைக்கப்பட்ட போராளிகள் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டபோது
இதனை சாதமாக பயன்படுத்திக்கொண்டு விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான அனைத்து முதலீடுகளையும் தனிநபர்கள் தமது உரிமைகளாக்கிக் கொண்டனர்.இருந்தபோதும்
போர்முடிந்ததும் வெளிநாடுகளில் இயங்கிவந்த எமது கிளைக் கட்டமைப்புகளின் அனைத்துப்பொறுப்பாளர்களும்
அந்தந்த நாடுகளின் சிறப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர்.
இதில் அனைத்துலக தொடர்பகத்திற்கு பொறுப்பாகவிருந்த நெடியவன் உட்பட
லண்டன் கிளைப் பொறுப்பாளர் சாந்தன்.
சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம்.
நோர்வே கிளைப்பொறுப்பாளர் சுரேஸ்
ஜேர்மன் கிளைப்பொறுப்பாளர் வாகீசன்.
பிரான்ஸ் கிளைப்பொறுப்பாளர் பருதி
ஆகியோர்களும்
நிதிச்சேகரிப்பில் ஈடுபட்டதாக பலகோடி நிதிகளுடன் பிடிக்கப்பட்ட வேறுசிலரும் அடங்கினர்.

இவர்களிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் ஊடாக இன்னும் பலர் குறிவைக்கப்பட்டபோதும் அவர்கள் நிதிகளுடன் நாடுவிட்டு வேறுநாடுகளிற்குச் சென்றும் சிலர் நாளைடைவில் பிடுபட்டும் சிலர் பிடிபட்டதும் நிதிகளை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொண்டும் ,சிலர் ஓடி ஒளிந்தும் கொண்டனர்.

இவர்களில் குறிப்பாக அடையாளங்காணப்பட்டவர்களாக
இத்தாலி கிளைச்செயலகத்தில் பணிபுரிந்த அம்புறுஸ்,அன்ரிபுறோ,மேத்தா,மற்றும்
சுவிஸ் கிளைச்செயலகத்தில் பணியாற்றிய
அப்துல்லா,ரஞ்சன்,ரகுபதி போன்றோரும்
லண்டன் கிளைச் செயலகத்தில் பணியாற்றிய
தனம்,கமல்,மணி,சங்கர்,கண்ணன்,போன்றோரும்
டென்மார்க் கிளைச்செயலகத்தில் பணியாற்றிய பிரியன்,குட்டி,மகேஸ் போன்றோரும்
ஜேர்மன் கிளைச்செயலகத்தில் பணியாற்றிய சிவனேசன்,சங்கர்,சிறிரவி,மயூரன் போன்றோரும்
நோர்வே கிளைச்செயலகத்தில் பணியாற்றிய
பெஞ்சமின் ,முரளி ,கணேஸ்,குமார் போன்றோரும்
அடங்குவர்.
இவர்களில் பலர் சிறப்பு காவல்துறையினராலும்,புலனாய்வு அதிகாரிகளாலும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட வேளையில்
அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்
விடுதலைப்புலிகளால் முதலீடுகள் செய்யப்பட்ட சொத்துவிபரங்கள் பல தெரியப்படுத்தப்பட்டது.
அந்த அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் சிலவற்றின் விபரங்கள் வெளியானது.

அதில்
ஜேர்மன் நாட்டில் சிறிரவி அவர்களின் வீடு மற்றும் பேர்ளின் சங்கர் அவர்களின் பெயரில் இரண்டு(restaurant)
உணவகங்களும்,ஒபகௌசன் சங்கரிடமுள்ள வீடும்,
பிரான்சில் உள்ள மக்கள் கடையும்,பிரான்சிலுள்ள லண்டன் கனாவின்TTN கட்டடமும்
சுவிசில் அப்துல்லாவின் உணவகமும் (restaurant ) உல்லாச விடுதியும்
(pop club )
லண்டனில் கமலின் வீடும் சங்கரின் வர்த்தக நிலையங்களும்(cash and curry)
லண்டன் லூக்காஸின் வீடும்,லண்டன் சேகரின் வீடும்.லண்டன் சீவரத்தினத்திடம் கொடுக்கப்பட்ட நிதியும்,(சிங்கப்பூர்)சீலனின் கடையும்.
லண்டன் ரகுவிடம் உள்ள வீடும் ,
நோர்வேயில் முரளி,பெஞ்சமின் ஆகியோர்களின் வீடும்,(கடற்புலி கருணாவின் கடையும்,நோர்வே உமா என்பவரிடம் கொடுக்கப்பட்ட நிதிகளும்.நோர்வே பேர்கன் குமாரிடம் கொடுக்கப்பட்ட நிதிகளும்,
நோர்வே கமலின் (restaurant)உணவகமும்.
டென்மார்க்கில் குட்டி,பிரியன் ஆகியோர்களது வீடும்
டென்மார்க் மகேசிடம் கொடுக்கப்பட்ட நிதிகளும்,
நியூசிலாந்தில் உள்ள பாண்டியனின் மேற்பார்வையில் பல நாடுகளில் நிர்வகிக்கப்பட்டுவரும் சொத்துகளும்,
கே பியின் மேற்பார்வையில் இன்றும் மடகஸ்காரில் கடற்புலி குமரனிடமுள்ள இரண்டு கப்பல்களும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சொத்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டது.
(இவைகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அடங்குகின்றது)
ஆனாலும் இதில் பல சொத்துக்கள் விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இன்றி அவர்களிடமே மீண்டும்
ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் சிலவற்றிற்கு சொத்துமுடக்கம் செய்யப்பட்டிருந்தது.
லண்டனில் இயங்கிய ஈழம் ஹவுஸ் எனும் கேணல் கிட்டு அவர்கள் பொறுப்பாக இருந்த காலத்தில் வாங்கப்பட்ட இயக்கத்திற்கு சொந்தமான வீடு
2013 ம் ஆண்டு அரசாங்கத்தால் ஏலம்விடப்பட்டு விற்கப்பட்டது இதனை லண்டனில் வாழும் தமிழர்கள் அறிந்திருப்பார்கள்.

எனவே விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான
அனைத்து சொத்துக்களையும் தமக்குச்
சொந்தமாக்குவதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சுவிஸ் கிளைக் கட்டமைப்பைச் சேர்ந்த லதன் தலைமையிலான அணி தாம் நடத்துவதாக கூறி பொறுப்பெடுத்துக்கொண்டது.
இதற்காக அனைத்து நாடுகளிலும் பெருமளவான நிதிகள் சேகரிக்கப்பட்டது.

இதற்கென ஒவ்வொரு நாடுகளிலும் பல புத்திஜீவிகளும்,பொருளாதார வளமுள்ள வர்த்தகர்களும் குறிவைக்கப்பட்டனர்.இவர்களிடம் ஆலோசனை பெறுவதாக கூட்டங்கள் நடத்தப்பட்டு
அவர்களைக்கொண்டே ஒரு குழு அமைக்கப்பட்டு
அக்குழுவினரின் அங்கிகாரத்தோடு சிலவருடங்கள் பெருந்தொகைப்பணங்கள் பெற்றுக்கொண்டபின் அவர்கள் அந்த குழுவிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

இதைவிட
அவர்களுக்கான செயற்பாட்டு நிதிகளும் வழக்கிற்கான பணச்செலவுகளும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கிவரும் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்பள்ளிகள் ஊடாகவும்,மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதிகள் ஊடாகவும் கொடுக்கப்பட்டது.அதேவேளை காடுகளுக்குள் புலிகள் பதுங்கியுள்ளார்கள் எனவும் தலைவரின் தொடர்பும்,பொட்டம்மானின் தொடர்பும் இருப்பதாக்கவும் மீண்டும் ஆயுதப்போருக்கு தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் மக்களை ஏமாற்றி பெருந்தொகைப்பணங்கள் பெறப்பட்டு இதற்குகென பாவிக்கப்பட்டது.

வழக்குகள் எனும் போர்வையில் கோடிக்கணக்கான மக்களின் பணங்கள் இவர்களால் சூறையாடப்பட்டது.
புலம்பெயர் தேசங்களில்
எந்தவித வேலைகளுக்கும் செல்லாமல் சொகுசு வாகனங்களில் வெள்ளை உடையணிந்து தாமே தேசியத்தின் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாகவும் மற்றைய மக்கள் தேசிய உணர்வற்றவர்களெனவும் வேடமிட்டு தாமே புலிகளின் பொறுப்பாளர்களென இவர்கள் வலம்வந்தார்கள்.

எப்படியாவது வழக்கில் வென்று விடுதலைப்புலிகளின் பெயரில் முடக்கப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு இந்த நபர்கள் தொடர்ந்து முயற்சிசெய்தார்கள்.அதில் அவர்கள் வெற்றியும் அடைந்துவிட்டார்கள்.ஆனால் விடுதலைப்புலிகளுக்கான தடை தொடர்ந்து பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதுபற்றி அவர்களுக்கு கவலைகிடையாது அவர்களுக்குத் தேவையானது விடுதலைப்புலிகளின் பெயரில் முடக்கப்பட்ட சொத்துக்களுக்கான தடை அகற்றல் நீக்கப்படுதல் மட்டுமே அது இப்போது நீக்கப்பட்டுவிட்டது.

ஆகவே விடுதலைப்புலிகளின் பெயர்களில் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களையும் தனிநபர்கள் இலகுவாக கைப்பற்றி தமது சொந்த சுகபோக வாழ்க்கைக்காகவே பயன்படுத்தப்போகிறார்கள்.கோடைகாலச் சுற்றுலாக்களிலும் கேளிக்கை நிகழ்வுகளிலும்,களியாட்ட விழாக்களிலும்,மேடை அரங்கேற்றங்களிலும் இந்தச்சொத்துக்கள் பணங்களாக மாற்றப்பட்டு செலவழிக்கப்படப்போகிறது.

மாவீரர்களினது விலைமதிக்கமுடியாத உயிர்த்தியாகங்கள் ஊடாகவும் போராளிகளினது அர்ப்பணிப்புகளாலும் கிடைக்கப்பெற்ற இந்தச் சொத்துக்களும்,நிதிகளும் இனிவரும் காலங்களில் உலங்குவானூர்திகளில் வீட்டுச்சடங்குகளை ஆடம்பரமாக செலவிடுவதற்கே பயன்படுத்தப்படும்
நாட்டுக்காக இரத்தம் சிந்திய போராளிகள் நடுத்தெருவில் உணவுக்காக கையேந்தும் மோசமான நிலைமைகளை கண்டுணர்ந்த பிற்பாடும் இவர்கள் அந்த நிதிகளில் ஒரு சிறு பகுதியையேனும் அவர்களுக்காக கொடுத்துதவ முன்வரப்போவதில்லை.அதற்கு அவர்கள் கூறும் காரணம் தலைவர் வந்து கணக்கு கேட்கும்போது அவருக்கு அதனை சரியாக காட்டவேண்டும் என்பதே.

இவர்களுக்கு ஒன்றைமட்டும் உறுதியாக சொல்லிக்கொள்ளுகின்றோம்.
இந்தச் சொத்துக்கள் அனைத்துமே தமிழீழத்தின் தேசியச் சொத்துக்கள். இவைகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்,போர்களில் பங்குபற்றி இன்று தங்கள் அவயங்களை இழந்தும், வேலைவாய்ப்புகள் இன்றியும்,குறிப்பாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாதவர்களாய் வாழ்ந்துவரும் அனைத்துப் போராளிகளுக்கும்.போரில் கணவரை இழந்த பெண்களுக்கும,உறவுகளைத்தொலைத்த பிள்ளைகளுக்கும் போய்ச் சேரவேண்டியது.

அதேவேளை தாயகத்தில் சிங்களப்பேரினவாதத்தால்
இடித்தழிக்கப்பபட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அண்மைக்காலமாக எமது போராளிகளால் மக்களின் ஆதரவுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது அதற்கான எந்தவொரு நிதியுதவிகளையும் புலம்பெயர் நாடுகளில் தேசியச் சொத்துக்களை கையகப்படுத்தி வைத்திருக்கும் எவரும் செய்துதர முன்வரவில்லை.இனிவரும் காலங்களில் அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் புனரமைக்கப்பட்டு அடையாளச் சின்னங்கள் வைக்கப்படுமிடத்து அவற்றுக்கான செலவுகளை இவர்களே பொறுப்பெடுத்துக்கொள்ளவேண்டும்.

அதைவிடுத்து அவரவர் தேவைக்கு இந்தச்சொத்துக்கள் இனியும் பாவிக்கப்படுமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க பின்னிற்கப்போவதில்லை.என்றோ ஒருநாள் இவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீருவார்கள்.

விடுதலைப்பற்றுறுதியுடன்…..
விசாலகன்
ஜனநாயகப் போராளிகள்.

Comments Closed

%d bloggers like this: