30 வருடங்களின் முன் இதே நாள் சுதுமலையில் தமிழினமே திரண்டிருந்தது

Home » homepage » 30 வருடங்களின் முன் இதே நாள் சுதுமலையில் தமிழினமே திரண்டிருந்தது
30 வருடங்களின் முன் இதே நாள் சுதுமலையில் தமிழினமே திரண்டிருந்தது

திரண்டிருந்த அத்தனை மக்களின் கண்களிலும் வரலாற்று நாயகனை பார்க்க போகிறோம் என்கிற ஆர்வம்
அத்தனை மக்களினதும் ஆர்வமும் ஆசையும் வீண் போகலை . தங்களுக்காக போராடுகிற போராளிகளின் தலைவன் தங்கள் முன் சாதாரண மனிதன் போல நிப்பதை கண்டார்கள்
சேகுவராக்களை புத்தகங்களில் படித்தவர்களுக்கு நேரில் அவரை பார்ப்பது எப்படிஇருக்குமோ அப்படி இருந்தது . அதுவரை செய்திகளிலும் பேப்பர்களிலுமே பார்த்து உள்ளூர பூசித்து வந்த தங்கள் தேசிய தலைவரை நேரில் கண்டார்கள் மக்கள்

அன்று அவரை கண்டவர்கள் அத்தனை பேரும் குடுத்து வைத்தவர்கள் .

“எமது மக்களின் பாதுகாப்புக்காக நாம் எத்தனையோ தியாகங்களை செய்திருக்கிறோம் . அந்தவகையில் நாங்கள் ஆயுதம்களை ஒப்படைக்கிறோம் . ஆயுதங்களைஒப்படைப்பது எனபது ஆயுதங்களை கை விடுவதாக ஆகாது . எங்களது இலக்கு தமிழீழம் என்பதில் மாற்று கருத்து இல்லை . அதுவரை எனது போராட்டம் தொடரும் . இடைக்கால தீர்வை பெறவோ அல்லது தேர்தலில் நிக்கவோ நாம் நிர்பந்திக்கப்படலாம் . அதை நாம் சிலவேளைகளில் ஏற்று கொள்ளலாம் . ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நான் தேர்தலில் நிக்கவோ அல்லது முதலமைச்சராக வரவோ மாட்டேன்”

போன்ற கருத்துக்களை உள்ளடக்கி முழங்கியது அவனது குரல்
அத்தனை பேரும் நிசப்தமாக அவனது பேச்சை கேட்டு கொண்டிருந்தார்கள். அந்த வரலாற்று சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன.

Comments Closed

%d bloggers like this: