இலங்கை தமிழ்

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் உதவி.

புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள போரினால் பாதிக்கப்பட்ட மாணவச் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களை நேற்யைய தினம் ஜனநாயகப் போராளிகள் வழங்கி வைத்துள்ளார்கள்.

ஜனநாயகப் போராளிகளின் முதன்மையான பணிகளில் ஒன்றே இந்த போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வுத் திட்டமாகும்.

மேலும் கடந்த மூன்று தசாப்த ஆயுதப் போராட்ட காலத்திலும் எமது போராளிகள் தாம் செய்துவந்த உணர்வுபூர்வமான அரசியல் பணிகளையே அவர்கள் தம் சிலகால சிறைவாழ்வின் பின்னர் இன்று மீண்டும் அதை பல சிரமத்தின் மத்தியிலும் தாம் செம்மையாக செய்துவருகிறார்கள்.

எனவே எமது போராளிகளின் உண்மையானதும்,நேர்மையானதும் மற்றும் உறுதியானதுமான அவர்களின் அரசியல் பணிகளை, தேசியத்திற்காக அவர்பின் அன்று மட்டுமல்ல இன்றும்,என்றும் நாம் அணிதிரண்டால் மட்டுமே எமக்கான உண்மையான தேசியத்தை நாம் வென்றெடுக்க முடியும் என்பதை எமது தேசியத் தலைவன் வழிவந்த மக்கள் தாம் விளங்கிச் செயற்படுவது காலத்தின் தேவையாகும் என அரசியல் அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ளனர்.