மட்டு,அம்பாறை மாவட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அரசியல் பணிகள் வேகமாக முன்னெடுப்பு!

Home » homepage » மட்டு,அம்பாறை மாவட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அரசியல் பணிகள் வேகமாக முன்னெடுப்பு!
மட்டு,அம்பாறை மாவட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அரசியல் பணிகள் வேகமாக முன்னெடுப்பு!

மட்டு,அம்பாறை மாவட்டங்களிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் ஜனநாயகப் போராளிகளின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் இணைப்பாளரான திரு.பிரபா தலைமையில் தொடர்ந்தும் துப்பரவுப் பணிகள் செய்யப்பட்டு வேக வேகமாக புனிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றைவிட எதிர்வரும் 12-08-2017 அன்று போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கான தலா 2000ம் பெறுமதியான உலருணவுப் பொதிகளும் ஜனநாயகப் போராளிகளால் வழங்கப்படவுள்ளது.

மேலும் தேசியத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்து வாழாதவர்கள் எவராலும் இலகுவாக எமது தமிழ்த் தேசிய மக்களின் உண்மையான வலிகளையும் அவர்களின் வாழ்வியல் சம்மந்தமான தேவைகளையும் ஒருபோதும் பூர்த்திசெய்து கொடுக்கமுடியாதென்பதை எமது மக்கள் உணர்ந்து, எமது ஜனநாயகப் போராளிகளை தாம் துரிதமாக பலப்படுத்தி அவர்கள் ஊடாக எமது தமிழ்த் தேசியத்திற்கான சகல உரிமைகளையும் தாம் வென்றெடுக்க முன்வரவேண்டியது காலத்தின் தேவையாகும்.

எனவே மாவீரம் விளைந்த எமது மண்ணின் பெருமைதனை உங்கள் நெஞ்சில் நிறுத்தி, எமது மாவீரர்கள் எமக்கு விட்டுச்சென்ற விடுதலைக்கான எம் உண்மையான அரசியல் பணிகளை எமது மக்கள்தாம் ஏற்று எம்பின்னே அணிதிரளவேண்டும் என்று மட்டு,அம்பாறை மாவட்டங்களின்
இணைப்பாளர் திரு.பிரபா அவர்கள் மக்களிடம் தாம் வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு:விடுதலைப் புலிகளின் அதிகாரிப் பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகளுக்கான படிப்பினை முடித்து எமது தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களில் திரு.பிரபா அவர்களும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Comments Closed

%d bloggers like this: