மாவீரர்களின் கல்லறைகளை தூய்மைசெய்த உறவுகளுக்கு ஜனநாயகப் போராளிகள நன்றி.

Home » homepage » மாவீரர்களின் கல்லறைகளை தூய்மைசெய்த உறவுகளுக்கு ஜனநாயகப் போராளிகள நன்றி.
மாவீரர்களின் கல்லறைகளை தூய்மைசெய்த  உறவுகளுக்கு ஜனநாயகப் போராளிகள நன்றி.

மாவீரர்கள் உறங்குகின்ற கல்லறைகளை தூய்மைசெய்து அழகுபடுத்திய அத்தனை உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள மட்டு,அம்பாறை மாவட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இணைப்பாளர் பிரபா அவர்கள் “நாம் போரிலும்சரி எமது அரசியலிலும்சரி முதலில் எமது மாவீரர்களின் பாதம் தொட்டுத்தான் பயணிப்போம்!” எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் நேற்றையதினம் ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் பெரும் திரளான மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடன் துப்பரவாக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டுள்ளது.

எமது தேசத்தின் விடுதலைக்காக தங்கள் உன்னதமான உயிர்களை எம் மண்ணுக்காக உரமிட்ட உத்தம வீரர்களை,தாம் உரிமையோடு சென்று உணர்வோடு கலந்து அவர் உறங்குகின்ற கல்லறைகளை தூய்மைசெய்து அழகுபடுத்திய அத்தனை உறவுகளுக்கும் மட்டு,அம்பாறை மாவட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். ஏன மட்டு,அம்பாறை இணைப்பாளர் திரு.பிரபா தெரிவித்துள்ளார்.

Comments Closed

%d bloggers like this: