இலங்கை தமிழ் புலம்பெயர்

புலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..? -எல்லாளன்

புலிக்கொடி இன்று புலம்பெயர் தேசத்தில் பறப்பதற்கு புலிகள் காரணமில்லையாம், மாறாக TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..?
-எல்லாளன்

புலிவேடம் தரித்திருக்கும் புலம்பெயர் அமைப்பானTCCயிற்கு (தமிழர் ஒருங்கிணைப்பு குழு)பணம்கொடுக்க விரும்புவோர் தாராளமாக கொடுக்கலாம், ஆனால் புலிகளுக்கு, தலைமைக்கு, ~இயக்கத்திற்கு,பாதிக்கப்பட்டவர்க்கு,தமிழ்த் தேசியத்திற்கு என்று நினைத்து மட்டும் தயவுசெய்து கொடுத்துவிடாதீர்கள் புலம்பெயர் மக்களே.

நீங்கள் தற்போதைய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு நிதியேதும் கொடுக்க விரும்பினால், அவ்வமைப்பிலுள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும், அவர்களுக்கு தேவையான மதுபானங்களுக்கும், கஞ்சா போன்ற போதைவஸ்துக்களுக்கும் இன்னும் அவர்களுக்கான விலைமாதுக்களின் தேவைகளுக்காகவும் மட்டுமே கொடுப்பதாக நினைத்து நீங்கள் கொடுப்பதே சாலப் பொருத்தமாகும்.

புலத்தில் இன்று புலிக்கொடி பறப்பதற்கு புலம்பெயர் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமென்று தம்பட்டமடிக்கும் இவ் நிதிமோசடிக் குழுவினர், அவ்வப்போது எமது தலைவரையும், மாவீரர்களையும் புலத்து மக்கள்மத்தியில் நினைவுபடுத்தி அவர்களுக்கு உசுப்பேற்றி பணம்சம்பாதிப்பதே அவர்களின் தலையாய பணியாக இன்று மாறிவிட்டது.

புலத்தில் பறந்த புலிக்கொடியானது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தியாகங்களால் பறக்கவில்லை’அது களத்தில் நின்று சமராடிய வேங்கைகளின் இராணுவ பலத்தினால் புலத்தில் பறந்பதென்பதை இந்த குடிகாரர்கள் அறிந்தும் தாம் மறந்துவிட்டார்கள் என்பதே உண்மை.

எனவே எம் புலம்பெயர் மக்களே……
தயவுசெய்து இந்த TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவெனும், பொய் களவு மது மாது புகை சூது இவை அனைத்துக்கும் இன்று அடிமையாகிய இந்த குழுவை நீங்கள் இயக்கமாக கருதி இனியும் ஆதரிப்பீர்களானால், அப்படி ஆதரிக்க முற்படுபவர்கள் எவருக்கும் உண்மையான எமது இயக்கப் போராளிகளை தெரியாதென்பதே எமது முடிவாகும்.

நன்றி

எல்லாளன்