எதிர்ப்புக்களை முறியடித்து ஜனநாயகப் போராளிகளுக்கான இளைஞர் அணி செயலகம் திறந்துவைப்பு!

Home » homepage » எதிர்ப்புக்களை முறியடித்து ஜனநாயகப் போராளிகளுக்கான இளைஞர் அணி செயலகம் திறந்துவைப்பு!
எதிர்ப்புக்களை முறியடித்து ஜனநாயகப் போராளிகளுக்கான இளைஞர் அணி செயலகம் திறந்துவைப்பு!

ஜனநாயகப் போராளிகளுக்கான இளைஞர் அணி செயலகம் மன்னார் மக்களின் பூரண ஆதரவுடன் திறந்துவைப்பு! தடுக்கவந்த ஒட்டுக்குழுக்களின் கடுமையான எதிர்ப்புக்களை ஜனநாயகப் போராளிகள் மக்களுடன் இணைந்து முறியடிப்பு!

இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கிவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒட்டுக்குழு உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாள்ஸ் என்பவரும் இணைந்து ஜனநாயகப் போராளிகளுக்கு பொலிசார் ஊடாக முட்டுக்கட்டை போட்டபோதும், அங்குள்ள மக்களின் பூரண ஆதரவுடன் ஜ.போ.கட்சியின் இளைஞர் அணி அலுவலகம் வெற்றிகரமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

2ம் லெப்டினட் மாலதி அவர்களின் நினைவு நாளான 18-08-2017 அன்று மன்னார் ஆண்டாங்குளம் பகுதியில் ஜ.போ.கட்சியின் இளைஞர் அணிக்கான செயலகத்தினை திறந்துவைப்பற்காக ஜ.போ.கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று குறிப்பிட்ட இடத்திற்கு சென்றிருந்தது.

இதை உளவறிந்த த.தே.கூட்டமைப்பின் ஒட்டுக்குழு உறுப்பினர்களான செல்வம் அடைக்கலனாதன் மற்றும் சாள்ஸ் என்பவரும் இணைந்து ஜ.போ.கட்சியின் இளைஞர் அணி செயலகத்தை திறக்கமுடியாதபடிக்கு அங்குள்ள பிரதேச சபையின் ஊடாகவும்,பொலிசார் ஊடாகவும் தடைகளை போட்டு இளைஞர் அணி செயலகத்தை குறித்த பகுதியில் திறக்கமுடியாமல் சட்டரீதியாக தடைகளை போட்டனர்.

இதை கேள்வியுற்ற மன்னார் மக்கள் த.வி.புலிகளின் அரசியல் செயற்பாடுகளுக்கு தமது பூரண ஆதரவினை தெரிவித்து தாம் வாழ்ந்துவந்த தமது சொந்த வீட்டினை ஜ.போ.கட்சியின் இளைஞர் அணிக்காக தமது பூரண சம்மதத்துடன் உடனடியாக கொடுத்து அவ் அலுவலகத்தை தாமே முன்நின்று திறந்தும்வைத்துள்ளார்கள்.

இதனால் வெட்கி தலைகுனிந்த ஒட்டுக்குழுவினர், எமது ஜனநாயகப் போராளிகளும் மக்களும் இணைந்து மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை பொலிசாரை அனுப்பி அதை தடுக்க தாம் முற்பட்டபோதும், ஏற்கனவே முழுமையான துப்பரவுப்பணிகள் யாவும் முடிவுற்று மாவீரர்களுக்கான அஞ்சலியையும் செலுத்திவிட்டு அப்பகுதியைவிட்டு எமது போராளிகளும் மக்களும் தாம் வெளியேறி வந்தபோது, அவர்களை இடைமறித்த பொலிசார் தமது அனுமதியில்லாமல் அப்பகுதியை நீங்கள் துப்பரவு செய்தது தவறென்று கூறி எச்சரித்தனர்.

இருந்தபோதும் அதை பெரிதாக பொருட்படுத்தாக மக்களும் போராளிகளும் பொலிசாருடன் சிறிய அளவிலான வாக்குவாதத்தில் தாம் ஈடுபட்டதுடன் தமது திட்டமிட்ட பணிகள்யாவும் பூர்த்தியடைந்த மகிழ்ச்சியுடன் அவிவிடத்தைவிட்டு வெளியேறினர்.

மேலும் இந்த த.தே.கூட்டமைப்பெனும் ஒட்டுக்குழுவின் நயவஞ்சக செயற்பாடுகள் ஊடாக எமது மன்னார் மாவட்ட மக்கள் தாம் மிகவும் கொதிப்படைந்திருப்பதையும் நாம் நேரடியாக அவதானிக்க முடிந்தது.

எமது மக்களின் தற்போதைய அரசியல்ரீதியான எதிர்பார்புக்களின் உச்சகட்டமே ஜனநாயகப் போராளிகள்மீதான எமது மக்களின் தற்கால தீவிர ஆதரவிற்கு முதன்மை காரணம் எனலாம்.

Comments Closed

%d bloggers like this: