ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அம்பாறை செயற்பாட்டாளர் வடிவேல் சசிதரன் அக்கட்சியிலிருந்து தப்பியோட்டம்! -எல்லாளன்

Home » homepage » ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அம்பாறை செயற்பாட்டாளர் வடிவேல் சசிதரன் அக்கட்சியிலிருந்து தப்பியோட்டம்! -எல்லாளன்
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அம்பாறை செயற்பாட்டாளர் வடிவேல் சசிதரன் அக்கட்சியிலிருந்து தப்பியோட்டம்! -எல்லாளன்

ஜ.போ.கட்சியின் மட்டு,அம்பாறை மாவட்டங்களின் இணைப்பாளர் திரு.பிரபா அவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் வ.சசிதரன்!
சில வாரங்களுக்கு முன்னர் வ.சசிதரன் என்பவரை ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் தமது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தி அவரை தற்காலிக பணிநீக்கம் செய்திருந்தனர்.

இதன் காரணமாக அவர் மனவிரக்தியடைந்து கருணா குழுவின் புலனாய்வு பணிக்காக கருணாவினால் தந்திரமாக அமர்த்தப்பட்டு பிரயாணித்துவரும் க.இன்பராசாவின் தலைமையிலான விசர்க்குழுவில், மன்னிக்கவும் புலனாய்வுக்குழுவில் குறித்த வ.சசியும் தன்னை இணைத்துக்கொண்டார்.

மேற்குறிப்பிட்ட சசி என்பவரை கருணா கிழக்கில் தான் பிரிந்துநின்றவேளை தனது குழுவிற்காக வலுக்கட்டாயமாக இவரை பிடித்து இணைத்தே வரலாறு.
பின்னர் கிழக்கிலிருந்து கருணாவை புலிகள் விரட்டியடித்தவேளை மேற்படி கருணாவால் இணைக்கப்பட்ட சிறார்களாக இனங்காணப்பட்ட சசிதரனையும் புலிகள் பிடித்து அவரை அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்ததையும் ஜனநாயகப் போராளிகள் தெரிந்திருந்தனர்.

ஆனாலும் அவர் இரகசியமாக கருணாவுடன் தொடர்பில் இருப்பதான தகவலறிந்த ஜ.போகட்சியினர் அண்மையில் இவரை தமது பணிகளிலிருந்து வேறுசில காரணங்களின் அடிப்படையில் தற்காலிகமாக நீக்குவதாக இவரிடம் தெரிவித்துள்ளார்கள்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய வ.சசிதரன் என்பவர், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் என்ற கருணாவின் நெருங்கிய சகாவான க.இன்பராசாவுடன் தன்னையும் இணைத்துக்கொண்டு தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியினை அவர் விமர்சித்துவருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆகவே முன்னாள் போராளிகள் எனவும்,புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் எனவும் கருணாவோடு சேர்ந்து இரகசியமாக இயங்கிவரும் க.இன்பராசா மற்றும் வ.சசிதரன் போன்ற ஒருசிலரிடம் எமது மக்கள் தாம் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமானது.
நன்றி

Comments Closed

%d bloggers like this: