நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி

Home » homepage » நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி
நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி

எமது அன்புக்குரிய தமிழக தொப்பிழ்கொடி உறவுகளே….

இரு நாடு ஓரு இனம் என்ற இரத்த பந்தத்தால் இணைக்கப்பட்ட நாம் நிலத்தால் பிளவுபட்டிருந்தாலும் மொழியால் நாம் ஒன்றுபட்டு எமது மொழியினதும், மக்களினதும் பூரண விடுதலைக்காக இணைந்து உழைக்கவேண்டிய அவசியத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றோம்.
நாம் தமிழர் கட்சியின் தலைவரான மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தமிழக மக்களாகிய நீங்கள் உங்கள் அரசியல் தலைவராக தெரிவுசெய்யவேண்டும் என்பதே தமிழ் தேசிய போராளிகள் கட்சியினதும், எமது மக்களினதும் ஆவலான எதிர்பார்ப்பாகும்.
இதுவரைக்கும் வீற்றிருந்த தமிழகத்தின் தலைமைகளின் இனவுணர்வற்ற போக்கின் காரணமாகவே ஈழத்தமிழர்களாகிய எமது அரசியல் போராட்டங்கள் யாவும் தீர்வெனும் முற்றுப்பெறாமல் வேகமாக நீர்த்துப்போவதற்கு அடிப்படையாய் அமைந்திருந்தன.
எனவே எமது அன்பார்ந்த தமிழக உறவுகளே…
தமிழகத்தில் வாழ்ந்துவருகின்ற எமது தொப்பிழ்கொடி உறவுகளாகிய நீங்கள் உங்களுக்கான ஓர் உறுதியான தலைவனாக எமது தலைவர் அவர்கள் தான் நேசித்த எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தெரிவுசெய்யவேண்டும் என்பதுடன், தற்போது RKநகரில் நடைபெறப்கோகும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து உங்கள் வாக்குகளை உங்கள் எதிர்காலத்தின் நன்மைகளுக்காக அக்கட்சிக்கு வழங்குவதுடன்,அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் பலம் தமிழகத்தில் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே ஈழத்தமிழர்கள் மத்தியிலும் ஓர் அரசியல் முன்னேற்றத்தை நாம் அடையமுடியும்.
ஆகவே இந்த பொன்னான தருணத்தை நீங்கள் கைநழுவவிடாது நீதியின் பக்கம் ஓங்கி குரல் கொடுத்துவரும் அண்ணன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியை உங்கள் கட்சி என்ற உரிமையுடன் தெரிவுசெய்து வெற்றிபெற உழைக்குமாறு தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் சார்பாகவும்,எமது மக்களின் சார்பாகவும் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.
இவ்வண்ணம்….
தலைவர்-சு.கர்த்தகன்
தமிழ் தேசிய போராளிகள் கட்சி
நடுவப்பணியகம் கிளிநொச்சி.

Comments Closed

%d bloggers like this: