இலங்கை தமிழ்

அரசியல் களத்திற்கு தமிழ் தேசிய போராளிகள் கட்சி தயார்!!

தமிழ் தேசிய போராளிகள் கட்சியினர் நேற்று முன்தினம் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்கள்!
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய போராளிகள் கட்சியினர்,வவவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவினை நேற்று முன்தினம் மாலை 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். இதன்போது வவுனியா வடக்கில் களமிறங்கும் தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் தலைவரான திரு.சு.கர்த்தகன் அவர்களுடன் உடனிருந்தார்கள்.

வேட்பு மனுவினை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அங்கு நடபைற்ற ஊடக சந்திப்பின்போது தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தலைவர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்,இந்த தேர்தலில் தாம் புலிகளுக்கே உரித்தான தனித்துவத்தை பேணியே சுயேட்சையாக களமிறங்குவதாகவும்,புலிகளின் அகராதியில் இன்னொருவரை நம்பி தமது தனித்துவத்தை இழந்த வரலாறு இல்லை எனவும்,அதற்கு அமைவாகவே தாம் இந்த தேர்தல் மட்டுமல்லாமல் எந்த தேர்தலிலும் தமது தனித்துவத்தை விட்டுக்கொடுத்து வேறு கட்சிகளின் தயவுடன் போட்டியிடப்போவதில்லை எனவும் தமது இறுக்கமான நிலைப்பாட்டினை உறுதியாக தெரிவித்திருந்தார்.அத்துடன் ஊடகவியலாளர் ஒருவர் தனது கேள்வியை எழுப்புகையில்,அதாவது ஏன் போராளிகளாகிய நீங்கள் மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கிறீர்கள், நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இந்த தேர்தலை எதிர்கொள்ளலாம்தானே என்றதற்கு பதிலளித்த திரு.சு.கர்த்தகன் அவர்கள், தம்மைப்போல் புலிகளாக, தனித்துவமாக நிற்கமுடியாத இரண்டு கட்சிகளையும் தாம் புலிகளாக கருதவில்லை என்று பதிலளித்தார்.ஆகவே எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துவமாக களமிறங்கும் எமது தமிழ் தேசிய போராளிகள் கட்சியினை எமது மக்கள் தெரிவுசெய்வதுடன்,போலியான தமிழ்த் தேசியம்பேசி எமது மக்களாகிய உங்களை ஏமாற்றிவரும் அரசியல் மோசடியாளர்களை நீங்கள் ஓரங்கட்டி உங்களுக்காக அயராது உழைக்க முன்வந்திருக்கும் எமது தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வேட்பாளர்களை நீங்கள் உங்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்து உங்கள் எதிர்காலத்தை வளப்படுத்த முன்வரவேண்டுமென்று பணிவுடன் வேண்டிநிற்கின்றோம்.
ஊடகப்பிரிவு
தமிழ் தேசிய போராளிகள் கட்சி
நடுவப்பணியகம்
கிளிநொச்சி.