இலங்கை தமிழ்

புலிகளின் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன..? சிறப்பு கண்ணோட்டம்!

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

இலங்கை அரசின் அரசியல் அடக்குமுறையை எமது தலைவர் அவர்கள் நிராகரித்தாரேயன்றி, எமக்கான அரசியலை எமது தலைவர் அவர்கள் நிராகரிக்கவில்லை!!
உலகத்தில் வாழ்ந்துவருகின்ற எந்தவொரு இனத்தவரும் தமக்கான அரசியல் எனும் மனித இயந்திரத்தை தமக்கு தமக்கு என்று தாம் கட்டியமைக்காது தமது தேசத்தையோ,அன்றி இனங்களையோ தாம் ஆட்சி செய்துவருவதாக சரித்திரம் இல்லை.

இலங்கை எனும் தீவில் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அவர்களுக்கே பொருத்தமான அரசியல் கட்டமைப்புக்குள்,இனத்தால் வேறுபட்ட தமிழர்களாகிய நாம் அவர்களின் ஆட்சி முறைமையில் உள்ள “சிறுபான்மை” எனும் பிரிவினைவாத போக்கின் காரணமாகவே அவர்களின் அரசியல் ஆட்சியை எதிர்த்ததுடன்,அவர்களிடமிருந்து பிரிந்து எம்மை நாமே ஆளும் அரசியல் கட்டமைப்பை உருவாக்கி உலகத்திலுள்ள ஏனைய இனங்களைப்போன்று நாமும் சுதந்திரமாக வாழவேண்டும் என்றே எமது தேசியத் தலைவரின் தலைமையில் ஆயுதமேந்தி போராடிவந்தோம்.

எமது தலைவரினதும்,போராளிகளினதும் உண்மையான இலக்கென்பது,எம்மை நாமே ஆளும் அரசியல் ஆட்சிமுறையை எமது இனம்சார்ந்து தனித்துவமாக நிறுவி அந்த அரசாட்சிக்குள் ஏனைய இனங்கள்போன்று நாமும் சமத்துவமாகவும்,கெளரவமாகவும் வாழவேண்டும் என்ற அடிப்படையையே கொண்டிருந்தது.

இலங்கை எனும் தேசத்தில் இரண்டு இனங்கள் வாழ்ந்துவருகின்றபோதும், அதை பொறுப்பேற்று வழிநடத்திய சிங்கள இனத்தவர்கள் இரண்டு இனத்துக்குமான சமநிலையினை சரிவர தாம் பேணத்தவறியதன் விளைவே தமிழர்களாகிய நாம் சிங்கள இனத்தவர்களின் அரசாட்சியை ஓரங்கட்டி பிரிந்துவாழ முடிவுசெய்தோம்.
எமது இந்த முடிவின் காரணமாக இலங்கைக்கான பொருளாதார பலவீனம் ஏற்படப்போவதை புரிந்துகொண்ட சிங்கள சமூகமானது உலகத்திடம் எமது பிரிந்துசெல்லும் போக்கினை பிரிவினை வாதமாகவும்,பயங்கரவாதமாகவும் எடுத்துரைத்து எமக்கான தனித்துவமான உரிமைகளை நாம் பெறமுடியாதபடிக்கு எமக்கான சர்வதேச தடைகளை உருவாக்கிக்கொண்டது.

உண்மையில் எமது தலைவர் அவர்கள் ஆயுதரீதியாக தான் மீட்கமுனைந்தது சிங்கள சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட தனது இனத்தை மட்டும்தான் என்பதையும், சிங்களவர்களுக்கு உரித்தான அவர்களின் தாயகத்தை அல்ல’என்பதையும் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவேண்டும்.

எனவே சிங்கள சமூகத்தின் விருப்பத்திற்கு மாறாக ஆயுதரீதியாக எமது தலைவர் அவர்கள் எதிர்பார்த்த தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டுமென்ற தனியரசுக்கான போராட்டம் என்பது தவிர்கமுடியாதது.ஏனென்றால் சிங்கள சமூகத்தின் அரசாட்சிக்குள் நாம் வாழ்ந்துகொண்டு அவர்களின் எதிர்புகளின்றி பிரிந்துவாழ்வதென்பது நகைப்பிற்கிடமானது.எனவேதான் நாம் பிரிந்துபோவதற்கான முடிவுகளை அரசியல்ரீதியாக எமது மக்களைத்திரட்டி அறிவித்தபோது அவர்கள் ஆக்குரோஷம்கொண்டு எங்களுடன் மோதிவந்தார்கள்.

அடிப்படையில் நாம் சிங்கள சமூகத்திடம் பிரிந்துவாழப்போவதாக எமது வாய்களால் கேட்டபோது அவர்கள் தமது கைகளை நீட்டி எம்மை அடக்கி ஒடுக்கி ஆளமுற்பட்டபோதுதான், வேறு வழியின்றி ஆயுதங்களை நாம் எடுத்துக்கொண்டோம்.
அன்றைய காலகட்டத்தில் உலக நாடுகளின் அரசியல் பொருளாதார முன்னேற்றங்கள் நலிவடைந்திருந்ததனால் இலங்கை விடையத்தில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் உடனடியாக தலையிட்டு எதிர்கவுமில்லை,பெரிதாக ஆதரிக்கவும் இல்லை.
இலங்கையின் விடையத்தில் இந்தியாவின் தலையீடுகூட அன்றைய காலகட்டத்தில் மிகவும் நலிவானதாகவே காணப்பட்டதெனலாம்.

மேலும் பூகோள அரசியல் பரப்பில் இலங்கையை சுற்றியிருந்த ஏனைய நாடுகளால்கூட இலங்கை விடையத்தில் அதிகமாக தம்மை ஈடுபடுத்தமுடியவில்லை என்பதையும் யாரும் மறுக்கமுடியாது.

எனவேதான் எமது ஆயுதப்போராட்டத்தை உலகநாடுகள் எவையும் உடனடியாகவே தாம் நேரடியாக தலையிட்டு அழிப்பதற்கும் முடியாமல் போனதெனலாம்.
இந்த சாதகமான போக்கே எமது ஆயுதப்போராட்டத்தை அதியுச்ச பலத்தை நோக்கி நகரவைத்தது.இதன்காரணமாக சிங்கள தேசத்திற்கு பாரிய தலையிடி ஏற்பட்டது. உண்மையில் தமிழர் தாயகமான வடகிழக்கை எமது ஆயுதப்போரட்டத்தின் ஊடாக நாம் கைப்பற்றுவது சுலபமாகிவிட்டதை உணர்ந்துகொண்ட சிங்கள சமூகம், நாம் வடகிழக்கை மட்டுமல்ல எதிர்காலத்தில் தமது நிலப்பரப்புகளையும் கைப்பற்றுவோம் எனும் பீதியின் காரணமாகவே பேச்சுவார்த்தை எனும் போலியான திட்டத்தை முன்வைத்து உலகத்தின் சூழ்சிகரமான திட்டத்திற்குள் எம்மை நகர்த்தி,எம்மை நம்பவைத்து எமது இராணுவ பலத்தினை அழித்துள்ளார்கள்.

ஆகவே எமது தலைவர் அவர்கள் தனது ஆயுதப்போராட்டம் ஊடாக எமது மக்களுக்கு தான் ஏற்படுத்தமுனைந்த தமிழரை தமிழரே ஆளக்கூடிய அரசியல் கட்டமைப்பை அவரின் வழிதிரண்டு போராடிய எமது போராளிகள் கைவிட்டு ஒதுங்கமுற்படுவதானது, இல்லையேல் இலங்கை அரசியலில் தம்மை ஈடுபடுத்தமுடியாது என்று குறுட்டுத்தனமாக முடிவெடுப்பதானது, எமது ஆயுதப்போராட்டத்தின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் விரோதமான செயல் என்பதுடன், பாரிய பின்விளைவுகளையும் எதிர்காலத்தில் எமது இனத்திற்கு ஏற்படுத்தும் என்பதனையும் தாம் புரிந்துகொண்டு, விரும்பியோ அன்றி விரும்பாமலோதன்னும் இலங்கை அரசின் அரசியல் நீரோட்டத்திற்குள் தம்மை புகுத்தி எமது இனம்சார்ந்த கொள்கைகளில் தாம் விடாப்பிடியாக பங்கெடுத்து உலகத்தின் கண்களுக்கு எமது உண்மையான எதிர்பார்ப்புக்களை காண்பித்து அவர்களின் ஆதரவுடன் எமக்கான தனித்தேசத்தை நாம் நிறுவவேண்டுமென்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து எமக்கான தனித்துவ அடையாளத்துடன் ஓரணியில் நின்று பயணிக்கவேண்டும் என்பதே எமது ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு போராளியினதும் உண்மையான கடமையாகும்.