இலங்கை தமிழ்

புலிகள் அமைப்பைவிட்டு ஓடியவர்களும், கலைக்கப்பட்டவர்களும் தம்மை முன்னாள் போராளிகளென கூறிவருவது கண்டிக்கத்தக்கது!!

புலிகள் அமைப்பைவிட்டு ஓடியவர்களும், கலைக்கப்பட்டவர்களும் தம்மை முன்னாள் போராளிகளென கூறிவருவது கண்டிக்கத்தக்கது!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தவர்களும்,ஆனந்தசங்கரியுடன் இணைந்தவர்களும் புலிகள் அமைப்பைவிட்டு பல வருடங்களுக்கு முன்னரே தப்பியோடியவர்கள்!!

இறுதிப்போர்வரை என்பதைவிட, புலிகள் அமைப்பின் அனுமதியின்றி தப்பியோடியவர்களையும், புலிகளால் தமது அமைப்பைவிட்டு கலைக்கப்பட்டவர்களையும் போர் மெளனிப்பின் முன்னரே புலிகள் குற்றவாளிகளாகவே அடையாளப்படுத்திவந்தனர்.
இவற்றைவிட புலிகள் அமைப்பிலிருந்து தாமாக இடைவிலகி ஓடியவர்களும்,புலிகள் அமைப்பால் தண்டிக்கப்பட்டு கலைக்கப்பட்டவர்களும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தாம் இருக்கும்போதே தம்மை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் போராளியென மக்கள்முன் தெரிவித்தால் குறைந்தது ஆறுமாதங்கள்வரை வட்டுவாகல் பங்கரில் அடைக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டே மீண்டும் வெளியில் விடப்படுவார்கள்.

இதன் அடிப்படையில் பார்த்தால் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்த சில நபர்களும்,ஆனந்தசங்கரியுடன் இணைந்த சில நபர்களும் 100%எமது போராளிகள் அல்ல என்பதை யாரும் மறுக்கமுடியாது.

ஏனென்றால் இவர்கள் எவரும் புலிகளின் அனுமதியுடன் புலிகளைவிட்டு வெளியேறவில்லை என்பது அப்பட்டமான உண்மை.

ஆகவே இந்த நபர்களை எமது போராளிகளாக கருதாது இவர்களை சாதாரண மக்களாகவே கருதி இவர்களால் போராளிகள்போன்று வெளியடப்படும் கருத்துக்களை எமது மக்கள் நிராகரிக்கவேண்டும் என்பதே புலிகள் அமைப்பின் உண்மையான நிலைப்பாடாகும்.