மறுசீரமைக்கப்படும் அனைத்துலக தொடர்பகம்

Home » homepage » மறுசீரமைக்கப்படும் அனைத்துலக தொடர்பகம்
மறுசீரமைக்கப்படும் அனைத்துலக தொடர்பகம்


விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்காமல் தன்னிச்சையாக செயற்பட்டு வந்த சந்தோஸ் மற்றும் மகேஸ் அனைத்துலக தொடர்பக பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டதையும் மீறி செயல்படுவதாக தமிழீழவிடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளர் திரு. தாசன் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சந்தோஸ் மற்றும் மகேஸ் இருவரும் அமைப்பின் ஆவணங்களை புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க மறுத்து வருவதுடன் அமைப்பின் மீது அவதூறுகளையும் பரப்பிவருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அரசு மேற்கொண்ட போற்குற்றமீறல்கள் மீதான விசாரணைகளை வலுவிழக்கச் செய்யகூடியதாக காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளை வீரச்சாவடைந்த போராளிகளின் பட்டியலில் இணைக்கும் முயர்சியிலும் ஈடுபடுவதாகவும், மாவீரர்களின் பெயரில் அமைப்புகளை உருவாக்கி நிதிசேகரிப்பில் ஈடுபடுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஸ் மற்றும் மகேசினால் மேற்கொள்ளப்பட்ட அல்லது தற்போது மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளும் அமைப்பின் உத்தரவினைப் பெற்ற நடவடிக்கைகள் அல்ல என்பதனை அனைத்து மக்களுக்கும் அறிவிப்பதாகவும் கூறியுள்ள அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளர் திரு தாசன் அவர்கள்:

ஏற்கனவே புதிய பாடத்திட்டம் என்ற போர்வையில் தமிழர் வரலாறுகளை திரிபுபடுத்தி புலம் பெயர் தமிழ் பாடசாலைகளில் கற்பிக்க இவர்கள் முயன்றதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இயக்கத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக, அனைத்து நாடுகளின் கிளைகளும் மறுசீரமைக்கப்பட்ட அனைத்துலகத் தொடர்பகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி அனைத்துலக நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாகப் பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் “ என தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேகரிப்பதற்காகவும் அதன் உண்மைத்தன்மையையும் அவசியத்தையும் வெளிப்படுத்துவதற்காகவும் தமிழ்தேசிய தலைமையால் உருவாக்கப்ட்டிருந்தது தமிழீழவிடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகம்.

2009 ம் ஆண்டு ஆயத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் சில சுயநலவாதிகளினால் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இல்லாமலும் தமது பிழையான செயற்பாடுகளுக்கு ஒத்துழையாத தமிழ்தேசிய செயர்பாட்டாளர்களையும் மக்களையும் விடுதலைப்போராட்டத்தில் இருந்து அன்னியப்படுத்தும் விதமாகவும் அனைத்துலக தொடர்பகம் செயற்பட்டு வந்தது.

சந்தோஸ் விடுவிக்கப்பட்ட அறிக்கை

மகேஸ் விடுவிக்கப்பட்ட அறிக்கை

மகேஸ் சந்தோஸ் தொடர்பான விளக்க அறிக்கை

Comments Closed

%d bloggers like this: