இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

“எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக எமது தலைமையில் விரைவில் இலங்கை அரசுடன் பேசவுள்ளோம்.”- மூத்த போராளி திரு.சபா

எமது மக்களின் தார்மீக அரசியல் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே நாம் ஆயுதம் ஏந்தினோம். தற்கால தமிழ் அரசியல்வாதிகள் எம்மை மீண்டுமொரு ஆயுதப்போருக்குள் தள்ள முற்படுகிறார்கள். என மூத்த போராளி திரு.சபா அவர்கள் தெரிவிப்பு இலங்கை அரசானது இன்னொரு ஆயுதப்போரை தமிழர்கள் மீது தான் திணிக்க முற்படாது, அரசியலில் சம அந்தஸ்த்தை எமது இனத்திற்கு எந்தவித கால இழுத்தடிப்புக்களுமின்றி விரைவாக வழங்க முன்வரவேண்டும். எமது ஆயுதப்போரானது எந்தவொரு பயங்கரவாத சிந்தனைகளையும் அடிப்படையாக்க்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதல்ல.மாறாக அது எமது மக்களின் அரசியல் உரிமைகளை […]

இலங்கை தமிழ்

வள்ளிபுனம் செஞ்சோலை வளாகம் எதற்காக இலங்கை படைகளால் இலக்குவைக்கப்பட்டது..? -எல்லாளன்

சிறப்பு கண்ணோட்டம்! 14-08-2006 அன்று முல்லை மாவட்டம் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறார்களுக்கான பிரத்தியேக வதிவிடம்மீது இலங்கை விமானப்படைகள் நடாத்திய அகோர குண்டுவீச்சுத் தாக்குதலில் சுமார் 54லு மாணவிகள் அந்த இடத்திலேயே உடல்சிதறி பலியாகினார்கள். இவர்கள் அனைவரும் 16-17 வயது நிரம்பிய பாடசாலை மாணவிகள் என்பது யாவரும் அறிந்தவிடையமே. உண்மையில் எதற்காக இலங்கை விமானப்படைகள் இந்த பாடசாலை சிறுமிகள்மீது தாக்குதல் நடத்தின என்ற விடையத்திற்கு வருவோம். அதாவது இந்த தாக்குதல் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் […]

இலங்கை தமிழ் புலம்பெயர்

புலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..? -எல்லாளன்

புலிக்கொடி இன்று புலம்பெயர் தேசத்தில் பறப்பதற்கு புலிகள் காரணமில்லையாம், மாறாக TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..? -எல்லாளன் புலிவேடம் தரித்திருக்கும் புலம்பெயர் அமைப்பானTCCயிற்கு (தமிழர் ஒருங்கிணைப்பு குழு)பணம்கொடுக்க விரும்புவோர் தாராளமாக கொடுக்கலாம், ஆனால் புலிகளுக்கு, தலைமைக்கு, ~இயக்கத்திற்கு,பாதிக்கப்பட்டவர்க்கு,தமிழ்த் தேசியத்திற்கு என்று நினைத்து மட்டும் தயவுசெய்து கொடுத்துவிடாதீர்கள் புலம்பெயர் மக்களே. நீங்கள் தற்போதைய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு நிதியேதும் கொடுக்க விரும்பினால், அவ்வமைப்பிலுள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும், அவர்களுக்கு தேவையான மதுபானங்களுக்கும், கஞ்சா போன்ற […]

இலங்கை தமிழ்

தமிழினத்தின் அனைத்து  துரோகிகளும்  ஒருங்கிணையப்போகும்  களமாக  அடுத்த தேர்தல்  அமையப்போவது  உறுதி -எல்லாளன்

கொலைபாதகன் மகிந்தவை நம்பி கொப்புத் தாவப்போகும் எதிர்கட்சி குரங்குகளை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது! 21ம் நூற்றாண்டின் தமிழரின் மாபெரும் எதிரியுடன் கைகோர்க்க காத்திருக்கும் தமிழனத்தால் வெறுக்கப்பட்ட அத்தனை துரோகிகளும்! காலாவதியாகப்போகும் மைத்திறியின் போலியான நல்லாட்சி ஊடாக, போர்க்குற்றத்திலிருந்து காப்பாற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச எனும் கொடுங்கோலனின் அடுத்த வருகை இலங்கையில் இடம்பெறுவதற்கான ஏதுநிலையே இன்று அதிகமாக காணப்படுகின்றன. மனிதாபிமானப் போர் என்றுகூறி சுமார் ஒரு இலட்சம்வரையான அம்பாவி தமிழர்களை மிகக் குறுகிய காலத்தில் கொன்றுகுவித்த ஒரு மாபெரும் […]

இலங்கை தமிழ்

மேலும் 30 முன்னாள் போராளிகள் ஜனநாயகப் போராளிகளுடன் இணைத்துகொண்டனர்

நேற்றைய தினம் ஜனநாயகப் போராளிகளுடன் 30வரையான முன்னாள் போராளிகள் தம்மை இணைத்துக்கொண்டனர்! ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புரை செயலாளர் திரு.சு.கர்த்தகன் தலைமையில் நேற்றையதினம் வன்னியின் கனகராயன் குளம் கிராமத்தில் முன்னாள் போராளிகளுக்கான அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழர் தாயகத்தில் மீண்டும் போராளிகள் தலைமையிலான அரசியல் சக்தியை உருவாக்கவேண்டும் என்பதை போராளிகளிடம் வலியுறுத்திய திரு.சு.கர்த்தகன் அவர்கள், எமது மாவீரர்களின் கனவுகளை நனவாக்கவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் போராளிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் உள்ளதென்பதை தெரிவித்ததுடன், முடியுமானவரை அனைத்து […]

இலங்கை தமிழ் புலம்பெயர்

வடிவம்மாறிய எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துவராத எந்தவொரு புலம்பெயர் அமைப்புக்களும் புலிகளின்பெயரால் இயங்கமுடியாது-எல்லாளன்

ஜனநாயகப் போராளிகளுடன் இதுவரை தொடர்பினை பேணாத புலம்பெயர் அமைப்புக்கள் யாவும் எதற்காக இனியும் புலத்தினில் இயங்கவேண்டும்..? யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரான கடந்த எட்டுவருட காலங்களிலும் புலம்பெயர் தேசங்களில் புலிகளின் பெயரால் இயங்கிவருகின்ற எந்தவொரு அமைப்புக்களும் இதுவரை தாயகத்திலுள்ள போராளிகளின் அரசியல் கட்சியுடன் தாம் தொடர்பினை பேணவில்லை என்பதே நூற்றுக்கு நூறுவீதமான உண்மை. ஜனநாயகப் போராளிகளின் தற்போதைய உயர்மட்ட தலைவர்கள் அனைவருடனும் நாம் தொடர்புகொண்டதன் அடிப்படையில் இந்த உண்மை நிலவரம் எமக்கு தெரியவந்துள்ளது. அப்படியென்றால் கடந்த எட்டு வருடங்களாகவும் […]

இலங்கை தமிழ்

ஜனநாயகப் போராளிகள் எவரும் ஒழுக்க பழக்கவழக்கங்களை மீறமுடியாது!- எல்லாளன்

எமது போராட்டத்தின் வடிவங்கள் மாறினாலும் அதன் இலக்கும், பழக்கவழக்கமும் எமது உறுதியான போராளிகளிடம் என்றுமே மாறாது! ஒரு மனிதன் எனப்படுபவன் தான் ஒரு முழு மனிதானக இருப்பதற்கு அவன் தன்னை சுற்றியிருக்கும் அபாயகரமான போதைப் பொருட்களை தான் உபயோகப்படுத்தாமல் தவிர்த்தால் மட்டுமே அவனால் இயல்பான மனிதனாக எப்போதும் இருக்கமுடியும். அந்தவகையில் இந்த போதை உலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளாக தொடர்ந்தும் தம்மை நிலைநிறுத்தி வாழ்பவர்கள் எவரும் கடந்த 2009ம் ஆண்டின் பின்னரும் தமக்கு தாமே கட்டுப்பாடுகளை விதித்து […]

இலங்கை தமிழ் புலம்பெயர்

இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்?

போர்க்குற்ற விசாரணைகளின்றி விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டும் உள்நாட்டு நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதையிட்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தாது மௌனம் சாதிப்பது ஏன்? சர்வதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு போராளி கண்ணதாசனுக்கான பொதுமன்னிப்பை மீறிய தீர்ப்பினை முன்னுதாரணப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நாவை நோக்கிய தமது போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். மேலும் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றங்களை வலிந்து சுமத்தும் நோக்கத்தை மையமாகக் […]

இலங்கை தமிழ்

எமது முன்னாள் போராளிகளை மீண்டும் கைதுசெய்ய முற்படும் இலங்கை அரசை கண்டிக்க ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் மக்களே தயாராகுங்கள்!

எமது இனத்தின் விடுதலைக்காக போராடிய எம்மை தமது இனத்துக்கெதிராக போராடிய குற்றத்திற்காக அவர்கள் எம்மை நீதியின்முன் நிறுத்தி தண்டிக்க முடியுடென்றால்,எமது இனத்துக்கெதிராக போராடிய குற்றத்திற்காக அவர்களின் இராணுவத்தினரையும்,ஒட்டுப்படைகளையும் நீதியின்முன் நிறுத்தி இலங்கை நீதிமன்றம் தமது சிறைகளில் தள்ளுமாயின் நாமும் சிறைசெல்ல எவ்வேளையும் தயார். இலங்கை அரசானது தனது நீதித்துறையை காலா காலமாக எமது இனத்திற்கெதிராக பயன்படுத்திவருவதை தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் இதை அனுமதிக்க முடியாது. இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர்களும், தமிழர்களும் ஒரே நாடு ஒரே தேசம் என்றுதான் […]

இலங்கை தமிழ் புலம்பெயர்

சிங்களச் சட்டத்தை தமிழருக்கெதிராக சிங்களவர் கையிலெடுத்தால்,தமிழீழச் சட்டத்தை மீண்டும் தமிழர்கள் தம் கையில் எடுக்க நேரிடும்! -எல்லாளன்-

முன்னாள் போராளி திரு.கண்ணதாசன் அவர்களுக்கான இலங்கை நீதிமன்றின் அபத்தமான தீர்ப்பானது நம் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் சிங்களச் சட்டத்தால் விடப்பட்ட ஓர் இனரீதியான அடக்கியாளும் எச்சரிக்கையே! அடிப்படையில் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களின் தம்மினம் சார்ந்த தமது பாரபட்சமான தமிழர் விரோத அரசியல் செயற்பாடுகள் காரணமாகவே தமிழர்கள் தம்மை தாமே ஆளவேண்டும் என்ற வைராக்கியத்தை தமக்குள் வளர்த்து கடந்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை சிங்கள அரசுக்கெதிராக தாம் நிகழ்த்தியிருந்தார்கள். உண்மையில் தமிழர்களுக்கான இந்த உளவியல் வைராக்கியத்தை சிங்கள ஆட்சியாளர்களே […]