இலங்கை முக்கிய செய்திகள்

சுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம் பாரீர்.- வலம்புரி

இலங்கைத் திருநாட்டின் 64ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை மீட்சி பெற்றதனை ‘சுதந்திரம்’ என்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். சுதந்திரம் என்ற சொற்பதம் பற்றி ஆள்பவர்களும் அடக்கப்படுபவர்களும் கொண்டுள்ள பொருள் வித்தியாசமானது. ஆள்பவர்கள் அடக்கப்படுபவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்காமல் தடுப்பதை தங்கள் சுதந்திரமாக கருதுகின்றனர். அடக்கப்படுபவர்களோ ஆட்சியாளர்களிடம் இருந்து உரிமை பெறுவதை தமது சுதந்திரமாக நினைக்கின்றனர். இங்குதான் ‘சுதந்திரம்’ என்பது வேறுபட்டு நிற்பதைக் காண முடிகின்றது. இந்த வகையில் இலங்கையின் […]

தமிழீழம் முக்கிய செய்திகள்

ரவுடிகளை, நாகரீகம் தெரியா மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் – டக்ளசை கேட்ட பட்டதாரி

“தண்ணியடித்துவிட்டு வீதிகளில் கிடக்கும் ரவுடிகளை, நாகரீகம் தெரியாத மனிதர்களை தேர்தலில் போட்டியிட வைத்தால் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்.” என்று பட்டதாரியொருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் கேட்டுள்ளார். வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றையதினம் பெருமாள் கோவிலுக்கருகில் கூடிய பட்டதாரிகள் தமது நியமனம் தொடர்பில் அமைச்சரிடமும், ஆளுநரிடமும் மகஜர் ஒன்றை கையளிப்பதென தீர்மானித்திருந்தனர். இந்நிலையில் அங்கிருந்து ஊர்வலமாக மேற்படி அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று தமது மகஜரை கையளித்துள்ளனர். இதன்போது அமைச்சர் நீங்கள் […]

தமிழீழம்

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் இருவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களால் தாக்குதல்.

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை யாழ்நகரின் சின்னக்கடை மீன்சந்தை பகுதியில் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய் எனும் தலைப்பிலான தமது கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கான சுவரொட்டிகளை ஒட்டிய இ.சுதர்சன் மற்றும் மு.முருகானந்தன் ஆகிய இருவரே சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கப்பட்டவர்கள் […]

மக்கள் அவலம்

நலன்புரி நிலையதிற்கு படைமுகாம் இடமாறவுள்ளதால் மீள்குடியமராத மக்கள் அவலம்.

வரணிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமை கொடிகாமம், அல்லரை வடக்கு நலன்புரி நிலையம் இருக்கும் இடத்தில் அமைக்கப் போவதாக படையினர் கூறிய தகவலை அறிந்து அந்தப் பிரதேசத்தில் இதுவரை மீளக்குடியமர்வு செய்யப்படாத 45 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியில் உள்ளனர். இராமாவில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தர காணி உறுதிகளையும் வைத்துக் கொண்டு மீளக்குடிய மர்வு செய்ய முடியாமல் ஏனைய பிரதேசங்களில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து […]

தமிழீழம்

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க இந்தியா உதவவேண்டும்!-கிருஷ்ணாவிடம் கூட்டமைப்பினர் கோரிக்கை.

இலங்கை இனப்பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியா உரிய அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவை இன்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் வரை பேச்சு நடத்தியது. இதன்போது, இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்ற நிலையில் அங்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. எனவே குறித்த மாநிலங்களில் உள்ள மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர் இதனைப்போன்றே, இலங்கையிலும் தமிழர் பகுதிகளில் […]

தமிழீழம்

மக்கள் போராட்ட இயக்கத்தின் வாகனம் யாழில் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகளின் வாகனம் இனம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித்குமார தெரிவித்துள்ளார் தாங்கள் யாழ். பஸ் நிலையத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டு தமது போராட்டம் தொடர்பாக உள்ளூர் ஊடகங்களுக்கு விளக்கி கூறச்சென்று வேளையிலேயே யாழ். கஸ்தூரியார் வீதியில் வைத்து தமது வாகனம் தாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இத் தாக்குதலின் காரணமாக வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது எவருக்கும் […]

தமிழீழம்

யாழ் பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்.

யாழ் பல்கலையின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று (15-12-2011) காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததுடன், அங்காங்கே வீசப்பட்டும் காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் பெயர்கள், அவர்களின் சொந்த இடங்களான மாவட்டங்கள் குறிப்பிட்டு இதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், சில விரிவுரையாளர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டு அவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சமாதானத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கும் இந்தத் துண்டுப் பிரசுரம், அதனைக் குழப்ப முனையும் […]

தமிழீழம்

நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற யாழ். மாநகரசபை மற்றும் சிறிலங்கா காவல்துறையினர் அடாவடி; வியாபாரிகள் கொதிப்பு

யாழ். மாநகரசபை மற்றும் சிறிலங்கா காவல்துறையினர் இணைந்து இன்று காலை யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் அமைந்திருந்த நடைபாதை வியாபார நிலையங்களுள் சிலவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எதுவித முன்னறிவிப்பும் வழங்காமல் இவ்வாறு கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகர சபையினர் மற்றும் சிறிலங்கா காவல்துறையினரின் செயலால் நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் மாநகர சபைக்கு சொந்தமற்ற தனியாருக்கு சொந்தமான உறுதிக்காணியில் அமைந்திருந்த நடைபாதைக் கடைகளே இவ்வாறு அகற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அடாவடித் […]

தமிழீழம்

வட மாகாண சபைத் தேர்தலில் த.தே.கூ. நேரடியாக பங்குபற்றக் கூடாது: தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை

வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்ற தலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப், மதகுருமார், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகள், மருத்துவர்கள் , மாணவர்கள் உட்பட பலர் […]

தமிழீழம்

மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்குரிய நிரந்தர தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்: யாழ்.ஆயர்

யாழ்.மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்குரிய நிரந்தரத் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரம் ஆண்டகை தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இலங்கைக்கான கனேடிய தூதர் மற்றும் தூதரக அதிகாரி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, அவர்களிடம் கருத்து தெரிவித்த ஆயர், ‘வடபகுதியில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் வாழ்வியலில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்தும் மக்களின் மகிழ்ச்சிக்கான உரிய அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமானால் மக்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்’ என […]