Category: இலங்கை

Home » இலங்கை » Page 15
துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்: மஹிந்த தெரிவிப்பு
Post

துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்: மஹிந்த தெரிவிப்பு

பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வரமுடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப்பட்டம் கட்டிவிடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். புலம் பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து ஈழம் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நிற்கின்றனர். இவ்வாறான நிலையில் எப்படி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை ஒன்றுபடுத்தி ஒற்றுமைப்படுத்தியுள்ளேன். இந்த...

இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி!
Post

இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக முன்னாள் முதலமைச்சர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் கீழ்தான் எட்டு பிரதேச சபைகளும் இயங்கியது. மாநகர சபை அரசாங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இயங்கியது. கடந்த மார்ச் 17ம் திகதியுடன் இச்சபைகள் கலைக்கப்பட்டு அதன் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2012.03.17இல் கலைக்க வேண்டிய சபைகளை ஒரு வருடத்துக்கு அரசாங்கம் நீடித்தது. அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில்...

ராஜதந்திரிகளுக்கு வாய்ப்பூட்டு! அமெரிக்காவிற்கான தூதரது நடவடிக்கைகளின் எதிரொலி!
Post

ராஜதந்திரிகளுக்கு வாய்ப்பூட்டு! அமெரிக்காவிற்கான தூதரது நடவடிக்கைகளின் எதிரொலி!

மகிந்த அரசுடன் கலந்தாலோசிக்காமல், எவ்வித இராஜதந்திர தீர்மானங்களையும் எடுக்கக்கூடாதென வெளிநாடுகளில் சேவையாற்றும் தனது அனைத்து இராஜதந்திரிகளுக்கும் இலங்கை அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சினூடாக இராஜதந்திரிகளுக்கு அரசு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என தெரியவருகின்றது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கடந்த வாரம், கொழும்பு நிர்வாகத்துடன் கலந்துரையாடாமல் இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்கள் சம்பந்தமாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் போது, சீனாவுக்கு எதிராகவும் அவர் கருத்து...

முன்னாள் விடுதலைப் புலிகள் குறி பார்த்து சுடுவதற்கு சென்னையில் அனுமதி மறுப்பு!
Post

முன்னாள் விடுதலைப் புலிகள் குறி பார்த்து சுடுவதற்கு சென்னையில் அனுமதி மறுப்பு!

விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர், இலங்கை தேசிய விளையாட்டு அணியில், குறி பார்த்து சுடும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விரைவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் கலந்து கொள்ள இவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இலங்கையின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, இந்த தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலை புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில 12,000 பேர் இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர்....

யாழ் வலிகாமத்தில் 6 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரிப்பு
Post

யாழ் வலிகாமத்தில் 6 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரிப்பு

இலங்கையின் வடக்கே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 6 ஆயிரத்து 381 ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1990-ம் ஆண்டில், இந்தப் பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தன. இந்தப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், 27 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு மீள்குடியேற்றம்...

Post

"கேட்டதையெல்லாம் கொடுப்போமென ௭திர்பார்க்கக் கூடாது"

அரசாங்கத்தின் கதவுகள் ௭ப்போதும் திறந்தே உள்ளன. இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால் கேட்பதையெல்லாம் கொடுப்போம் ௭ன்று யாரும் ௭திர்பார்க்கக் கூடாது ௭ன அமைச்சரவை பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சர்வ கட்சி ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரமல்ல, ஏனைய கட்சிகளுக்குமான பொதுவான அழைப்பையே அரசு விடுத்துள்ளது. ௭னவே அரசின் கொள்கைகள் மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவை தொடர்பில் இணக்கப்பாடுடனான ஒன்றிணைந்த சர்வ கட்சி ஆட்சியினையே கிழக்கில்...

Post

தேசியத்தலைவரின் மகன் பாலச்சந்திரனை கொலை செய்ய சொன்ன கருணா.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக Lanka News Web இணையம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌சவின் நேரடி ஆலோசனைக்கமைய 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அன்று கடமையாற்றிய பிரிகேடியர் கமல் குணரத்னவின் பட்டாலியனே இந்தச் சிறுவனை சுட்டுக்கொன்றுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அதிகாலை...

Post

வரலாற்றை மாற்ற முயலும் துட்டன் எல்லாவெல தேரோ.

சிங்கள இனத்தின் பாதுகாப்புச் செயலாளருக்கு வாழ்த்துக் கூறும் துட்டன் எல்லாவெல மேதானந்த தேரோ துட்டர்களின் வாரிசு என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். துட்டத்தனங்களால் நாடு கடத்தப்பட்ட பரம்பரை வந்தேறிகளாக ஈழத்தில் இறங்கி உயிர் பிளைத்ததை மறைத்து இன்று தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்று துட்ட தேரோ முழங்குவதில் தமிழர்கள் வியப்புக் கொள்ள வேண்டியதில்லை. இந்தத் தேரோவின் கூற்றினை மறுத்துரைக்க வரலாற்று அறிஞர்கள் தேவையில்லை. சாமானிய தமிழர்களே போதுமானது. முதலில் தேரோ தங்களது வரலாற்று நூலான மகாவம்சத்தைப் படிக்க வேண்டும். தமிழ்...

Post

ஆரம்பமாகியது உரிமைகோரல் போட்டி!! "அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரக் காரணம் நானே"-சுமந்திரன்

ஜெனிவா சென்று அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு மதிய விருந்தளிப்பதாலோ, வெறும் மூன்று நிமிட உரைக்காக பிறிதொரு மனிதஉரிமை அமைப்பை நாடி நிற்பதாலோ எமக்கு விடிவு கிடைத்து விடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லாதது குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு விடையளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல்...

Post

சுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம் பாரீர்.- வலம்புரி

இலங்கைத் திருநாட்டின் 64ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை மீட்சி பெற்றதனை ‘சுதந்திரம்’ என்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். சுதந்திரம் என்ற சொற்பதம் பற்றி ஆள்பவர்களும் அடக்கப்படுபவர்களும் கொண்டுள்ள பொருள் வித்தியாசமானது. ஆள்பவர்கள் அடக்கப்படுபவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்காமல் தடுப்பதை தங்கள் சுதந்திரமாக கருதுகின்றனர். அடக்கப்படுபவர்களோ ஆட்சியாளர்களிடம் இருந்து உரிமை பெறுவதை தமது சுதந்திரமாக நினைக்கின்றனர். இங்குதான் ‘சுதந்திரம்’ என்பது வேறுபட்டு நிற்பதைக் காண முடிகின்றது. இந்த வகையில் இலங்கையின்...