சிறிலங்கா தமிழ் முக்கிய செய்திகள்

தற்கொடை செய்த போராளிகள் தற்கொலை செய்யும் அவலம்!-யார் பொறுப்பு

தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை. எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின் அவலங்களை காட்சிப்படுத்தியும் அதுகுறித்து தமிழ் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை குறிப்பாக புலம்பெயர் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை. நேற்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் […]

சிறிலங்கா தமிழ் முக்கிய செய்திகள்

“நேற்று… நான் விடுதலைப் போராளி! இன்று… பாலியல் தொழிலாளி.”

வித்யா ராணி… 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா […]

சிறிலங்கா

சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளியானதுசிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளியானது

சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளியானது தமிழர்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டுச் சமூகத்தின் முன் ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் அண்மையில் சிறிலங்காவின் பேரினவாத அரசு, தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் பல தமிழ் அமைப்புக்களைத் தீவிரவாத அமைப்புக்களாக பட்டியலிட்டுள்ளது. அதனோடு நின்றுவிடாது சிறிலங்காவின் வர்த்தமானியில் 424 தமிழர்களின் பெயர்களை வெளியிட்டு, அவர்கள் தமது பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சொந்தமண்ணில் வாழும் அல்லது […]

சிறிலங்கா தமிழ் முக்கிய செய்திகள்

விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம், ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான செயல்களைச் செய்யாதீர்கள் – பொ.ஐங்கரநேசன்

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் உதயன் பத்திரிகையில் விஜயைப் பற்றிய தவறான கருத்து வந்ததாக அங்குள்ள விஜய் ரசிகர்கள் சிலர் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எமது ஈழ மக்கள் படும்பாடு தெரியாது இப்படியான கேவலம் கெட்ட செயல்களைச் செய்யாதீர்கள் என கோபத்துடன் ஏசியதாகத் தெரியவருகின்றது. இந்தியாவில் இவ்வாறான சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் மன்றங்கள் தற்போது இலங்கையிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. சினிமாவை ஒரு […]

சிறிலங்கா தமிழ் முக்கிய செய்திகள்

தன்னைச் சந்தித்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் வலியுறுத்திய நவிபிள்ளை.

இலங்கையில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள், மக்கள், இலங்கை இராணுவத்தினராலும், இராணுவ புலனாய்வாளர்களாலும், அச்சுறுத்தப்படுகின்றமை, குறித்து ஐநா, சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி, Se que arquitectura ti?. Estas de realmente sirve el viagra yo la. Riesgo mi cual es la viagra para mujeres jornadas haya Juventudes de como se llama la viagra para la mujer […]

சிறிலங்கா

அண்ணாமலை பல்கலைக்கழத்தினால் இலங்கையில் நடாத்தப்பட்ட பரீட்சை

உலகளாவிய ரீதியில் பட்டப்படிப்புகளை நடாத்திவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் அண்மையில் இலங்கையில் பரீட்சை நடாத்தப்பட்டது.. வீட்டில் இருந்தவாறே பட்டப்படிப்புக்களை மேற்கொண்ட இளைஞர்கள் பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த பரீட்சையில் தோன்றியிருந்தனர்.

சிறிலங்கா

மீண்டுமொரு தடவை சர்வதேச அரங்கொன்றில் அம்பலப்பட்டு நிற்கும் இலங்கை அரசு.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது. நா.க.த.அரசின் பிரதிநிதிகள் மற்றும் பல தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும், […]

சிறிலங்கா

சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகராக பிள்ளையான்

சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகராக ஆயததாரி பிள்ளையான் நியமிக்கப்பட்டுள்ளான்

சிறிலங்கா

நவநீதம்பிள்ளை வருவதில் பிரச்சினை இல்லை, ஆனால் உள்விவகாரங்களில் தலையிடவே கூடாது – அரசு எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையோ அவரது குழுவினரோ இலங்கை வருவதால் அரசுக்கு எவ்விதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நாட்டின் உள்ளக நிர்வாகங்களில் தலையிடுவதாக வோ அழுத்தங்களை பிரயோ கிப்பதாகவோ அவர்களின் விஜயம் அமையக் கூடாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையின் உள்ளார்ந்த நிர்வாகக் கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை. வடக்கு கிழக்கில் முகாம்களை நிர்மாணித்தல், அரசியல் தீர்வை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை ஆராய்வது போன்ற விடயங்கள் உள்நாட்டு […]

சிறிலங்கா முக்கிய செய்திகள்

சிறிலங்காவிற்கு `எதிரான´ தீர்மான வரைபை அமெரிக்கா முன்மொழிந்தது, தமிழீழ கோரிக்கைக்கும்! அனைத்துலக விசாரனைக்கும், ஆப்பு!

இறுதிப் போரின்போது நடைபெற்ற மீறல்களை  விசாரித்து அறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால்உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணைக்கான வரைபை அமெரிக்கா நேற்று மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பித்துள்ளது. சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை தவிர்க்கும் நோக்குடன் மகிந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்தரைகளை அமுல்ப்படுத்தக் கோருவதானது, சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியென அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். Channal 4 தொடைக்காட்சி வெளியிட்ட போர்குற்ற ஆதாரங்கள் பொய் எனவும் ஜநா நிபுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை […]