Category: சிறிலங்கா

Post

ராஜபக்சவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு நிராகரிப்பு

சிறிலங்காவில் மூன்று வருடங்களுக்கு முன்னதாக முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் சிறிலங்கா இராணுவத்தால் பலர் தொடர்ச்சியாக கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது. வெளிநாடு ஒன்றின் தலைவர் என்ற வகையில் ராஜபக்ச அவர்களுக்கு சட்ட விலக்கு இருப்பதாக அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்திருக்கிறார். எப்படியிருந்த போதிலும், இறுதிக்கட்ட போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை இந்த வழக்கு...

Post

செல்லக்கிளி அம்மானின் சகோதரர் ஜநா வில் சாட்சி!

ஜெனீவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, சிறிலங்கா தூதுக்குழுவின் மற்றுமொரு பிரதிநிதிகள் குழு இன்று ஜெனீவா பயணமாகியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சிறிலங்காக்கெதிராக கொண்டுவரப்படவுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களடங்கிய தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் இக்குழுவும் பங்களிப்பை வழங்கும் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் சிறிலங்கா சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முல்லைத்தீவு மாவட்ட சிறிலங்கா ஜனாதிபதியின் இணைப்பாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்...

Post

ஐ.நா. அமைதி காக்கும் படை கூட்டத்தில் பங்குபற்றுவதிலிருந்து சவேந்திர சில்வா தடுக்கப்பட்டார்.

நேற்று புதன்கிழமை நடந்த ஐ.நா. அமைதி காக்கும் உயர்மட்டக் குழுக்கூட்டத்தின் செயற்பாடுகளில் பங்குபற்றாதவாறு சிறிலங்கா மேஜர் ஜெனரல், சவேந்திர சில்வா தடுக்கப்பட்டுள்ளார். ஐ.நா. தலைமையதிகாரியான பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட விசேட ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடந்தபோது சிறிலங்கா மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அங்கு போயிருந்தார். அவருடன் யாரும் பேசவில்லை. அவருக்கு ஆவணங்கள் எதுவும் கொடுக்கப்படவும் இல்லை என இராஜதந்திரிகள் கூறியுள்ளனர். ஐ.நா.வின் அமைதி காக்கும் படைக்கு ஆசிய பசுபிக்...

Post

புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் : விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்த போவதாக  விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளான். எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன். தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் வெளிப்படுத்துவேன். புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சர்வதேசம் அடைக்கலம் வழங்கி வருகின்றது. சம்பந்தன் தரப்பு ஜெனீவா செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மாளிகையிலிருந்து அவர்கள் கல் எறியக் கூடாது. பிரபாகரன் மேற்கொண்ட போர்க்...

Post

சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.

ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன. SPEAK Human Rights, Environmental Initiative, UNROW Human Rights Impact Litigation Clinic at American University Washington College of Law, the Centre for Justice and Accountability and the...

Post

ஜெனீவாவில் சிறிலங்கா அரசைக் காக்க 15 பேர் கொண்ட குழு விரைவு; அமைச்சர்கள் தலைமையில் நடவடிக்கைகள் தீவிரம்.

ஜெனீவாவில் பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காக்கு எதிரான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் தடுப்பதில் சிறிலங்கா அரசு தீவிரமாக உள்ளது. இந்தப் பணிகளுக்காக சிறிலங்கா அமைச்சர்கள் பலரை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழு பல்வேறு நாடுகளுக்கும் விரையவுள்ளது. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தக் குழு கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது. சிறிலங்காயின் இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காகச் சர்வதேச விசாரணை...

Post

தன்னைப் பாதுகாப்பு ராஜபக்ச குடும்பத்தின் பொறுப்பு என்கிறார் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா!

தான் இதுவரை ராஜபக்ச குடும்பத்திற்கே உழைத்ததாகவும், எனவே தன்னை பாதுகாத்துக் கொள்வது ராஜபக்ச குடும்பத்தின் பொறுப்பு எனவும் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்நாட்களில் விரதமிருந்து கதிர்காமத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு அவருக்கு நெருக்கமான சிலரிடமே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தற்போது தன்னைப் பாதுகாப்பதற்காக சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச நேரடி தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், களனி பிரதேச சபைத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா சனாதிபதி மிக விரைவில் சிறந்த...

Post

13ம் திருத்தச் சட்டத்தால் நாட்டிற்கு பேராபத்து; சம்பிக்க எச்சரிக்கை.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டிற்கு பேராபத்து விளையும் அத்துடன் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதை ஜாதிக ஹெல உறுமய ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதென அக் கட்சி தெரிவித்துள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் கூறுகின்றது என்பதற்காக 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க இயலாது. இவ் விடயத்தில் அரசாங்கமோ கூட்டமைப்போ தன்னிச்சையாகச் செயற்பட முடியாது என ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கின்றார். மாகாண சபைகளுக்கு...

Post

18 முடியுமென்றால் 13+ ஏன் முடியாது?, அரசே தனித்து நின்று நிறைவேற்றட்டும் என்கிறது ஐ.தே.க.

இனப்பிரச்சினைக்கான தீர்வாக சிறிலங்கா அரசு தற்போது கூறிவரும் 13 + திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சிறிலங்கா அரசுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. “எதிர்க் கட்சிகளின் ஆலோசனையைக் கேட்காமலேயே அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தை ஜனாதிபதி மஹிந்த தனது சுயநலத்துக்காக, பெரும்பான்மை பலத்தை வைத்து நிறைவேற்றிக் கொண்டது போன்றே இந்த 13 பிளஸையும் அரசே தனித்து நிறைவேற்றிக் கொள்ளட்டும்” என்று கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 18 முடியுமென்றால் 13+...

Post

சவீந்திர சில்வாவை பான் கீ மூன் நியமிக்கவில்லை என்கிறார் அவரது பேச்சாளர்.

ஐ.நா அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நியமனத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வழங்கவில்லை என்று அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார். நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி, “மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவின் அமைதி நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு நியமித்தது ஐ.நா பொதுச்செயலர் அல்ல. அவரை ஆசிய பசுபிக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகள்...