Category: சிறிலங்கா

Post

சுபநேரத்திற்காக காத்திருந்த மகிந்தா!

சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராசபக்ச தனது இரண்டாவது பதவிக் காலத்தை உச்சநீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சோதிடர்கள் குறித்து கொடுத்த சுப நேரத்தில் இன்று பதவியேற்றார். கடந்த வருடம் பல லட்சம் தமிழர்களை புதைகுழியில் புதைத்தமைக்காக அனைத்துலக நீதிமன்றில் இரண்டாவது பதவிக்காலத்திலேயே மகிந்தா நிறுத்தப்பட அனைத்துலக புலம்பெயர் தமிழர்கள் செயலாற்றிவருகின்றனர்.

Post

மகிந்த ராசபக்ச துறைமுகம்

அம்பாந்தோட்டை மாகம் புரவில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்துக்கு “மகிந்த ராசபக்ச துறைமுகம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சனாதிபதியின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சனாதிபதி மகிந்த ராசபக்சவினால் தான் பிறந்த ஊரில் நேற்றுக் காலை இந்தத் துறைமுகம் வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. சனாதிபதியின் நீண்டநாள் கனவாக இந்தத் துறைமுகம் காணப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். முதல்தடவையாக அனைத்துலகத்தில் ஒரு அரச அதிபர் தான் பதவியில் இருக்கும் பொழுதே தனது பெயரில் ஒரு துறைமுகத்தை திறந்து...

Post

மென்போக்கு அரசியல் சிறீலங்கா அரசை வழிக்கு கொண்டுவராது: திஸ்ஸநாயகம்

அனைத்துலக சமூகம் கடைப்பிடித்துவரும் மென்போக்கு அரசியல் சிறீலங்கா அரசின் போக்குகளில் மாற்றத்தை கொண்டுவரப்போவதில்லை என சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் இருந்து அண்மையில் விடுதலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் நேற்று (17) தெரிவித்துள்ளார். எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அவரின் நேர்காணலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எனது விடுதலை கூட அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கூட நிறுத்தியிருந்தது. சிறீலங்காவில் நிலமை மோசமடைந்துள்ளது. அங்கு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்புக்கள் இல்லை. எனவே தான் அவர்கள்...

Post

சமுர்த்தி அதிகாரியை மேர்வின் மரத்தில் கட்டவில்லையாம்

நேற்றுமுன்தினம் சமுர்த்தி உத்தியோகஸ்தரை தான் மரத்தில் கட்டவில்லை எனவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்பதால் அந்த அதிகாரி தன்னைத்தானே கட்டிக்கொண்டார் எனவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா இன்று மாலை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறினார். சமுர்த்தி உத்தியோகஸ்தரின் கடிதமொன்றையும் பிரதியமைச்சர் சபையில் வாசித்தார். இதேவேளை பிரதியமைச்சரின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

Post

“காதைச் செவிடாக்கும் மௌனம் மற்ற நாடுகளையும் இலங்கை வழியில் செல்ல வைக்கும்”-மூத்தோர்கள் சபை

மூத்தோர்கள் சபை என்ற முன்னாள் தலைவர்களின் அமைப்பான, தெ எல்டர்ஸ், என்ற அமைப்பு, இலங்கை அரசு மனித உரிமைகள் விஷயத்தில் ஒரு அவமதிக்கும் மனோபாவத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறது. இது நெல்சன் மண்டேலாவால் ஆரம்பத்தில் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட அமைப்பு. இலங்கை அரசு மனித உரிமைகளை புறந்தள்ளும் மனோபாவத்தையும், உள்நாட்டில் இருக்கும் விமர்சகர்களையும், மாற்றுக் கருத்து கொண்டோர்களையும் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதைப் பற்றி சர்வதேச சமுதாயம் மேலும் கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று...

Post

பிரதேசசபை அங்கத்தவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டி வைத்தார்

களனியில் கடந்த வாரம் நடைபெற்ற டெங்கு ஒழிப்புத் தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ளாத பிரதேசசபை அங்கத்தவர் ஒருவரை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மாமரத்தில் சற்று முன்னர் கட்டி வைத்துள்ளார். இருப்பினும் குறித்த அங்கத்தவர் பின்னர் அவிழ்த்து விடப்பட்டார். அதேவேளை மேற்படி நிகழ்வில் பங்குபற்றாத இரு பெண்களையும் மேர்வின் சில்வா கண்டித்துள்ளார். பிரதேசசபை அங்கத்தவரை மரத்தில் கட்டி வைத்தமைக்கு ஆட்சேபனை தெரிவித்த பெண்மணியொருவரை அமைதியாக இருக்குமாறும், அல்லாவிடில் இதேநிலைமை உனக்கும் தொடரும் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்தார்....

Post

பொலிஸார் மூவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக முன்னாள் இராணுவ வீராங்கனை புகார்

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவர் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக இராணுவத்தை விட்டு தப்பியோடிய பெண்ணொருவர் புகார் தெரிவித்துள்ளார். இப்புகார் குறித்து விசாரிப்பதற்கு உயர்மட்ட பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தனது காதலருக்கு எதிராக முறைப்பாடொன்றைச் செய்யச் சென்றபோது புத்தல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவர் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்...

Post

வன்னி செய்தி சேகரித்த நோர்வே ஊடகவியலாளரை காணவில்லை

வன்னிக்குச் சென்று திரும்பிய பெரீன் ரக்கோ என்ற பெண் ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறித்த ஊடகவியலாளர்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண் ஊடகவியலாளருக்கும் நோர்வே புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கொழும்பில் வெளியாகும் சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. நோர்வேயின் என்.ஆர்.கே வானொலிச் சேவைக்காக கடமையாற்றிய பெண் ஊடகவியலாளரே காணாமல் போயுள்ளார். சுற்றுலாப் பயணி ஒருவரைப் போன்று குடிவரவு...

Post

பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் இரண்டு அரசசார்பற்ற செயற்பாட்டாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவின் உத்தரவின் பேரிலேயே அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களான அகிம்சைவாத சமாதான படையணியின் பணிப்பாளர் டிபானி ரிச்னம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயற்பாட்டாளர் அலிபால் ஆகியோரை குடிவரவு குடியகல்வு திணைக்களம் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா, அரசாங்க புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையின்படி இவர்களின் வீசா அனுமதிகளை இரத்துச் செய்தாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவிற்கு சாட்சியமளிக்க...