இலங்கை செய்திகள் தமிழ் முக்கிய செய்திகள்

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக குழிபறிக்க முனையும் கோத்தபாய: சிங்கள இணையத்தளம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதிக்கு எதிராக குழிபறிக்கும் நோக்கில் இரகசிய காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் எனும் பிரபல சிங்கள இணையத்தளமே இந்த பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால், அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதும் கோத்தபாயவின் இலக்காக […]

இலங்கை செய்திகள் தமிழ்

பௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம் சஞ்சிகை: பௌத்த தேரரின் படம் முகப்பில்.

உலகளவில் கூடுதலான வாசகர்களைக் கொண்டுள்ள டைம் சஞ்சிகை தனது அட்டைப்படத்தில பௌத்த தேரரின் படத்தைப் பிரசுரித்து, பௌத்த பயங்கரவாதம் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளது. ஆசிய வலய நாடுகளில் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை என்று பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய சிறுபான்மை இன மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. பௌத்த தேரர்களே அவ்வாறான வன்முறைகளின் பின்னணியில் தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பது பகிரங்கமான விடயம். இந்நிலையில் வரும் ஜுலை மாத டைம் சஞ்சிகை இதழ் தனது அட்டைப்படத்தில் […]

இலங்கை செய்திகள் தமிழ்

முன்னாள் மூத்த புபோராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு அண்மித்த நிலைகளிலிருந்த லம்போ மோதல் ஒன்றில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார். திருமணமாகாத நிலையில் தனது […]

செய்திகள் தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்

லண்டனில் புலிக்கொடியப் பார்த்து மிரண்டு நின்ற சிங்களவன்.

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் […]

செய்திகள்

தமிழின அழிப்பு நினைவு நாள் மே 18!- வலி தணியாத தொடர் அவலங்களின் மீள்பார்வை

தம்மைத்தாமே ஆளுகை செய்யும் தகைமையும் ஆளுகை செய்யத் தேவையான அனைத்து புவியியல்சார் தகைமைகளையும் தன்னகத்தே கொண்டு இலங்கைத் தீவில் வாழ்வீட்டிய எம் முன்னைத் தமிழினம் முதன் முதலில் ஐரோப்பியரிடம் தனது ஆட்சி இறைமை முழுவதையும் இழந்து நின்றதுடன், இறுதியில் பிரித்தானிய வெளியேற்றத்தின்போது ஒட்டுமொத்தத் தமிழினமும் சிங்கள ஏகாதிபத்தியத்திடம் அடகு வைக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்றுவரை அந்த அடிமைநிலையிலிருந்து விடுபடவும் இழந்துபோன தம் இறைமையை வென்று தம்மைத்தாமே ஆளும் ஒரு பொற்காலத்தைத் தேடியும் தமிழினம் தம்மாலான அனைத்துப் பொறிமுறைகளின் […]

செய்திகள் டென்மார்க்

இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துல நீதிமன்றில் வழக்கு!

தமிழீழமக்கள் மீது சிறிலங்கா அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் ஏனைய கொடுமைகளை விசாரனை செய்யுமாறு வேண்டப்படும் கடிதம் டென்மார்க் வழக்கறிஞர் அவர்களினால் கடந்த வியாளக்கிழமை நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிர்கு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கறிஞரால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பபப்பட்ட கடிதத்தின் படி இணைக்கப்பட்டுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பபப்பட்ட கடிதம்

செய்திகள் தமிழீழம்

தந்தை செல்வா நினைவுத் தூபி சிங்கள “சுற்றுலாப் பயணி”களினால் சேதமாக்கப்பட்டுள்ளது

யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது அங்கு அலங்கரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் யாவும் வெட்டி எறியப்பட்டுள்ளன. முற்றுமுழுதான உச்ச பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பல தரப்பிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே யாழ் பொதுசன நூலகத்திற்கு சென்றிருந்த சிங்கள சுற்றுலாப்பயணிகள் பொதுசன நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிந்தண்து. சம்பவத்தின் போது நூலகத்தின் புத்தகங்கள் பலவும் எடுத்து வீசப்பட்டிருந்தன. […]

இந்தியா செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே – சென்னை நீதிமன்றம்

முன்பு சென்னையில் தங்கியிருந்தபோது கொலை, கொள்ளை மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கையின் இப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே என சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986-ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை 4 வது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. […]

செய்திகள் டென்மார்க்

சர்வாதிகாரி மகிந்தா மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு.

டென்மார்க்கில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களான மனோகரன் மற்றும் பார்த்தீபன் தன்னிச்சையாக மேற்கொண்ட முயற்சிகளால் வரும் வாரம் டென்மார்க்கின் பிரபல்ய சட்டவியலாளரால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையை மேற்கொண்ட , மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் சனாதிபதி மகிந்த ராசபக்சா உட்பட அனைத்து பாதுகாப்பு படையதிகாரிகளுக்கும் எதிராக வழக்கு பதியப்படவிருக்கின்றது. இந்த இரு டென்மார்க் வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் நடவடிக்கையில் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகார குழு முழுமையாக இணைந்து செயல்படுகின்றது. கடந்த பல மாதங்களாக இவர்கள் […]

செய்திகள் டென்மார்க்

டென்மார்க் மனிதநேய நடைப்பயணம் நிறைவடைந்தது.

திரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறைவடைந்தது. முற்பகல் பதினொரு மணியளவில் நகரசபை முன்றலை வந்தடைந்த இவர்களை டென்மார்க்கின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் அன்புடனும் எழுச்சியுடனும் மகிழ்வுடனும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது. தமிழர் பேரவை டென்மார்க்கினர் அனைத்து […]