Category: செய்திகள்

Post

டென்மார்க் மனிதநேய நடைப்பயணம் நிறைவடைந்தது.

திரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறைவடைந்தது. முற்பகல் பதினொரு மணியளவில் நகரசபை முன்றலை வந்தடைந்த இவர்களை டென்மார்க்கின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் அன்புடனும் எழுச்சியுடனும் மகிழ்வுடனும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது. தமிழர் பேரவை டென்மார்க்கினர் அனைத்து...

Post

மனிதநேய நடைப்பயணம் டென்மார்க்கில் ஆரம்பமாகியுள்ளது.

புலம்பெயர் தமிழீழமக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதநேய பயணங்களின் தொடச்சியாக இன்று டென்மார்க்கில் 3 ஈழத்தமிழர்களால் மனிதநேய நடைப்பயணம் டென்மார்க்கின் தலைநகரை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து சிவந்தன் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் செனிவாவில் முடிவுற அங்கிருந்து ஜெகன், தேவிகா, மற்றும் வினோதன் அவர்களால் ஐரோப்பிய பாரளமன்றத்தின் முன்றலில் முடிவடைந்தது. ஐரோப்பிய பாரளுமன்றத்தின் முன்றலில் நடைபெற்ற இருப்பாய் தமிழா எழுச்சி நிகழ்வை தொடர்ந்து சேர்மன் வாழ் தமிழ் இளையோரால் பேர்லின் நகரை நோக்கி கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள...

Post

மனித நேய நடைப்பயணம்-டென்மார்க் இன்று ஆரம்பமாகின்றது

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை தடுக்காமல் பாராமுகமாக இருந்த டென்மார்க் அரசிடம் நீதி கேட்டு மகேஸ்வரன் பொன்னம்பலம் , மனோகரன் மனோரஞ்சிதன் மற்றும் பார்த்தீபன் தம்பிராசா ஆகியோர் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதியான கேர்னிங் நகரத்தில் இருந்து டென்மார்க் தலைநகரம் நோக்கி மேற்க்கொள்ளும் மனித நேய நடைப்பயணம் இன்று ஆரம்பமாகின்றது. கேர்னிங் நகரசபை முன்றலில் பிற்பகல் 5 மணிக்கு நடைபெறும் ஒன்றுகூடலுடன் நடைபயணம் ஆரம்பிக்கவிருப்பதாக நடைப்பயணத்திற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரகுழுவினர் தெரிவித்துள்ளடன் ஆரம்ப...

Post

ராஜபக்சே உருவத்தை விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடும் தமிழ் உணர்வாளர்கள்

ஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்த சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது தமிழர் விரோத இந்திய மத்திய அரசு. கற்பழித்துக் கொல்லப்பட்ட தமிழ்ச் சகோதரிகள்- விண்ணிலிருந்து வீசப்பட்ட கொத்துக்குண்டுகளால் செத்துமடிந்த குழந்தைச் செல்வங்கள்- ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள்- என்று ராஜபக்சே கும்பலுக்கு போர்க்குற்றத்தின் கீழ் கடும் தண்டனை கிடைக்க ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன. [mp3player width=300 height=100 config=tamilnadumodrajapaksa.xml playlist=tamilnadumodrajapaksa.xml] காமன்வெல்த் போட்டிக்கு...

Post

நீதி கேட்டு மூன்றாவது நாளாகத் தொடரும் மிதிவண்டிப்பயணம்.

பேர்லின் நகரம் நோக்கி, பெல்ஜியம் – புறூசலில் இருந்து 11.10.2010 அன்று திரு.தேவன் குகதாசன், திரு.சின்னத்துரை அருணதாசன், செல்வன்.சஞ்சீவன் சிவசுப்பிரமணியம் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மிதிவண்டிப்பயணம் இன்று மூன்றாவது நாளாக 102 கிலோமீற்றர்களைக் கடந்துLEVERKUSEN என்னும் இடத்தை வந்தடைந்துள்ளனர்.இவர்கள் சென்றடையவுள்ள 1000 கிலோமீற்றர் பயணத்தில் 302 கிலோமீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் காலநிலையின் சமச்சீரற்ற தன்மையையும் கவனத்தில் எடுக்காது உறுதியுடன் கடந்துள்ளார்கள். மிதிவண்டிப்பயணம் செல்கின்ற வழிகளிளெல்லாம் தமிழினப்படுகொலைகள் மற்றும் சிறிலங்காவிலுள்ள தமிழரின் உண்மை நிலை பற்றிய விபரங்கள்...

Post

மாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்.

சிறீலங்கா அரசினால் இனப் பேரழிவுக்கு உட்படுத்தப்பட்ட தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், அனைத்துலக நாடுகளிடம் முறை கேட்டும் பிரித்தானியாவிலிருந்து திரு.சிவந்தன் அவர்கள் தொடங்கிய நடைபயணம் ஜெனீவாவில் நிறைவடைய, அங்கிருந்து திரு.ஜெகன், திருமதி.தேவகி குமார், திரு.வினோத் ஆகியோர் தொடர்ச்சியாக பெல்ஜியத்திலுள்ள ஐரோப்பியஒன்றியம் வரை நடைபயணம் மேற்கொண்டு, கடந்த 27.06.2010 அன்று புறூசல் நகரில் ‘எழுவாய் தமிழா நெருப்பாய்’ என்னும் நடைபயண நிகழ்வு நிறைவடைய, அதன் தொடர்ச்சியாக பெல்ஜியம் – புறூசலிலிருந்து சேர்மனியின் பேர்லின் நகரம் நோக்கி, இன்று நண்பகல்...

Post

யேர்மனியில் நடைபெற்ற ஈழத்தமிழர் மக்கள் அவைக்கான பொதுக்கூட்டம்

10.10.2010 அன்று யேர்மனியில் Essen நகரத்தில் ஈழத்தமிழர் மக்கள் அவையை அமைப்பதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மதிப்புக்குரிய அருட்தந்தை Emmanuel அவர்கள் கலந்துக்கொண்டார். அத்தோடு, இக் கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்து சிறப்பித்தனர். அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இக் கூட்டத்தில் முதலாவதாக ஈழத்தமிழர் மக்கள் அவையின் உருவாக்கம் பற்றியும் முக்கிய நோக்கங்களும் மற்றும் செயற்பாடுகள் பற்றியும் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்...

Post

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தொடர் நிகழ்வுகள்

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான இரண்டு தொடர் நிகழ்வுகள் நடை பெறவுள்ளது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வரும் புதன்கிழமை, ஒக்டோபர் 06 மாலை 2.00 மணியளவில் முதல் நிகழ்வு Room QG 13, Ground floor, Business School Building, Dublin City University. Dublin இல் நடை பெறவுள்ளது. இதில் பிரதான பேச்சாளராக Denis Halliday பங்கேற்கின்றார். இரண்டாவது நிகழ்வு வியாழக்கிழமை, ஒக்டோபர் 07 மாலை 7.00 மணியளவில் J.M....

Post

பன்னிரு வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள்

1987ம் ஆண்டு இலங்கை, இந்திய சமாதான உடன்படிக்கை காலத்தில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கடற்கண்காணிப்பு பணியில் விடுதலைப்புலிகளின் “கடற்புறா” ரோந்துப்படகு ஈடுபட்டிருந்த போது இந்திய கடற்படையினால் வலுகட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட வேளையில் இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடித்து பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன்,அப்துல்லா, ரகு, நளன், ஆனந்தகுமார், மிரேஸ், அன்பழகன், ரெஜினோல்ட, பழனி, கரன், தவக்குமார் ஆகிய வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Post

அடித்துக்கொல்லப்பட்ட வி.புலிகள் உறுப்பினர் திடுக்கிடும் வீடியோ வெளியாகியுள்ளது

இலங்கை அரச படைகளால் சமீபத்தில் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலி நபர் ஒருவரின் படம் வெளியாகியிருந்ததை யாவரும் அறிந்ததே. தென்னை மரம் ஒன்றோடு சேர்த்து கட்டிவைத்து அடித்துக் கொலைசெய்யப்பட்ட இப் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதன் காணொளி வெளியாகியுள்ளது. இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற அமைப்பே தற்போது இக் காணொளிகளை வெளியிட்டுள்ளது.