Category: தமிழீழம்

Home » தமிழீழம்
“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்!!
Post

“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்!!

“தமிழ் மக்களின் விடுதலைக்காக, நமக்கிடையில் இருக்கும் கருத்து முரண்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, ஒன்றிணைந்து செயற்படுவோம்” என வெவ்வேறு தளங்களில் செயற்பட்டுக்கொண்டிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள், மாவீரர்கள் வீரவணக்க நிகழ்வில் வைத்து, உறுதியெடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிகழ்வைக் கண்ணுற்ற தமிழ் மக்கள் கண்ணீர் மல்க கரகோசம் செய்து, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். 19/09/2021 அன்று மாலை,  சுவிட்சர்லாந்து நாட்டின் Zürcherstasse, Neuenhof எனும் இடத்தில், சிறப்பாக ஒழுங்கு படுத்தப் பட்டிருந்த, இறுதி யுத்த மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுக்காக, பெருமளவு...

Post

ஓற்றுமைக்கான முயற்சிகளை வரவேற்று தமிழீழ எல்லாளன் படை அறிக்கை.

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகளை பலப்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டி தமிழீழ எல்லாளன் படையினர் இன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தமிழீழ எல்லாளன் படையின் முழுமையான அறிக்கை தமிழீழம் 26.11.2013 ஓற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம். அன்பார்ந்த எம் தமிழீழ உறவுகளே! “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே,...

Post

"ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்"-தமிழீழ எல்லாளன் படையின் இறுதி எச்சரிக்கை

“ஒற்றுமையாகுங்கள் அல்லது ஒதுங்கி வழிவிடுங்கள்! இறுதி எச்சரிக்கை!!” என்ற தலைப்பில் எல்லாளன் படையின் நடவடிக்கைப் பொறுப்பாளர் த.மணியரசனின் பெயரில் அறிக்கைவெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், “விடுதலைப் புலிகளின் வெவ்வேறு பிரிவுகளை கடந்த டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒரு ஒற்றுமைக்குள் வருமாறு நாம் கேட்டிருந்தோம். இதற்கான பதிலை ஒரு சில பிரிவுகள் எமக்கு ஆக்க பூர்வமாக தெரிவித்திருந்தனர். ஆனால், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியின் ‘அனைத்துலக கட்டமைப்பு’, தாமே விடுதலைப் புலிகள் என அறிவித்துள்ளதாகவும், தனித்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும்...

Post

நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் கடும்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளான கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை புலம்பெயர் உறவகளிடமிருந்து கோருகிறோம். வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான சமைத்த உணவு , ஆடைகள் , அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. புலம் பெயர்ந்த அனைத்து தமிழர்களும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர். உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :- Bank information...

Post

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரும் அடக்குமுறை 10 பேரை விசாரணைக்கு அழைப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்களை விசாரணைக்கு வருமாறு கோப்பாய் பொலிஸார் இன்று அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து 10 மாணவர்களின் பெயர் விபரங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்த மாணவர்களில், மருத்துவ பீடத்தினைச் சேர்ந்த 5 பேரும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ள 10 மாணவர்களை தங்களது பெற்றோருடன் விசாரணைக்கு செல்லுமாறும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்...

Post

ஈழத்து இளைஞர்களை காக்க களத்திலும் புலத்திலும் தாமதமின்றி ஒருங்கிணையும் வரலாற்று நிமிடமிது!

வடகிழக்கு மண்ணை பல வகைகளில் ஒடுக்கிய இலங்கை அரசு நடப்பு நாட்களில் கல்விக் கூடங்களை சிதைத்து எம்மினத்தின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பகைவனிடம் இருந்து எம் எதிர்கால சமூகத் தலைவர்களை காக்கும்.. ..தார்மீக கடப்பாடு களத்திலும் புலத்திலும் உள்ள சகல உடன்பிறப்புக்களையும் சாரும் என வட-கிழக்கு எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றியம் விடுத்துள்ள அவசர அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாவது. கடந்த 27.11.2012 அன்று உலகத் தமிழர்கள் மனங்களில் மிகவும் புனிதத்துடன் நினைவு கூரப்பட்ட மாவீரர்...

Post

யாழ் பல்கலைகழக மாணர்வர்கள் மீதான தாக்குலை கண்டிக்கின்றோம் – தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க்

நேற்றும் இன்றும் சிறிலங்கா படைகளினால் யாழ் பல்கலைக்கழக மணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கண்டன அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:>>>> தமிழீழ தேசிய மாவீரர் நாளான நேற்று யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளிற்குள் கதவுகளை உடைத்து பலாத்காரமாக உள்நுழைந்த சிறிலங்கா ஆக்கிரமிப்பு படையினர் மாணவர்களின் தலைகளில் துப்பாக்கிகளை வைத்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் விடுதியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சிறிலங்கா படைகளின் தாக்குதல்களை கண்டித்து அமைதியான...

Post

தமிழீழம் எங்கும் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் சுவரொட்டிகள்.

தமிழீழ விடுதலைப்புலிகளினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருந்த மாவீரர்நாள் 2012 க்கு உரிய சுவரொட்டிகள் தமிழீழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழப்பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது, தமிழீழத்; தேசியகொடிகள் பறக்க விடப்பட்டதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்புப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா தீவிரவாத தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர்,:  “யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் புலிக்கொடிகள் பறக்க...

Post

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தேசிய மாவீரர் நாள் அறிக்கை.

பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய அதிகாரபூர்வ மாவீரர் நாள் செய்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ மாவீரர் நாள் – 2012 தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/07/12 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2012. அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள். எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களைக் கொன்றொழிக்கப் படையெடுத்த...

Post

"தமிழ் இன விடுதலை வீரர்களை நினைவுகூருங்கள்" – தமிழீழ எல்லாளன் படை

மாவீரர் நாள் 2012 தொடர்பாக தமிழீழ எல்லாளன் படை விடுத்துள்ள வேண்டுகோளில் தமிழ் இனத்தின் விடிவுக்காக தம் உயிர்களை தியாகம் செய்த புனிதமான மாவீரர்களை மனதில் நிறுத்தி அஞ்சலி செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கnhள்வதாகவும் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர ஆயுத போராட்டம் முடிக்கப்படவில்லை மீண்டும் வருவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைகாலத்தில் எல்லாளன் படையால் மக்களுக்கு தொடர்ச்சியாக வேண்டு கோள்கள் விடுக்கப்பட்டுவருவது எதிரிகளுக்கு மட்டுமல்ல புல்லுருவிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்திவருவதைக் காணக்கூடியதாக உள்ளது. தமிழ் தேசியத்தின் சொத்துக்களை முடக்குவதற்காக துரோகப்பட்டம் கொடுப்பதை...