Category: பகுத்தறிவு

Home » பகுத்தறிவு
Post

பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.09.2012 அன்று மாலை பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி சென்னை மெரினா கடற்கரை சாலை பாரதிதாசன் சிலையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டது. இந்தப் பேரணி ராயப்பேட்டை வி.எம்.தெருவில் முடிவடைந்தது. இந்த பேரணி குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது, இளைய தலைமுறையினர் மத்தியில் பெரியாரின் சிந்தனைகள், சமூக சீர்திருத்த கருத்துகள், கொள்கைகளை பரப்பும் நோக்கத்தில் இந்த பேரணியை நடத்தி உள்ளோம்...

Post

பொங்கலே புத்தாண்டு.

வருகின்ற தை ஒன்று, தமிழர் திருநாள் மட்டுமன்று, தமிழர்களின் புத்தாண்டுப் புதுநாளும் அதுதான். ஜனவரி ஒன்றும், சித்திரை ஒன்றும் இதுவரை நமக்குப் புத்தாண்டுகளாக இருந்தன. ஏசுநாதருக்குப் பெயர் சூட்டப்பட்ட நாள் ஜனவரி 1. நாயக்கர்கள் காலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புத்தாண்டு, சித்திரை 1. இரண்டுமே தமிழர்களின் புத்தாண்டு அல்ல. திருவள்ளுவர் ஆண்டுதான் தமிழர்களின் ஆண்டு என்றாலும், நடைமுறையில் ஆங்கில ஆண்டே வழக்கத்தில் இருந்து வருகிறது. வரலாற்று ஏடுகளிலும்,அனைத்து ஆவணங்களிலும் ஆங்கில ஆண்டுதான் இன்றும் காணப்படுகிறது. எனவே நடைமுறையில்...

Post

ஒரு சிங்களத் தீபாவளியும், ஒரு இந்து மத குருவும்! – நிஜமும், நிழலும்

ஆலயக் குருக்கள் பாஸ்கரனுக்கு அந்தக் குளிரிலும் வியர்த்து வழிந்தது. ‘அந்த முடிவை என்னால் எப்படி எடுக்க முடிந்தது?’ என்று திரும்பவும் ஒரு தடவை தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். இரந்துண்டு வாழும் தன் நிலையை எண்ணி வெட்கப்பட்டார். அவரால் என்னதான் செய்ய முடியும்? குலத்தில் வந்த குணமாக, அந்த இழிவும் அவருடன் ஒட்டியே நின்றது. கண்ணாடியில், ஒரு தடவை தன் முகத்தைப் பார்த்தார்… அவருக்கே அது அசிங்கமாகத் தெரிந்தது. ‘நான் என்ன செய்வது… என் குலத்தின் பழக்கங்களிலிருந்து என்னால் மட்டும்...

Post

மனிதர் எவ்வாறு கடவுளை உருவாக்கினர் : துரை.திருநாவுக்கரசு

மரபுவழிக் கல்வியறிவின் தாக்கத்தின் கீழிருக்கும் பலருக்கு இயற்கையாகவே மனிதர் சமயப் பற்று உள்ளவர் என்று தோன்றுகிறது. நமது பள்ளி களின் கற்பித்தலில் தவிர்க்கவியலாத ஒன்றாய் இருக்கும் விவிலியம் மனிதகுலம் தொடக்கக் காலத்திலிருந்தே கடவுளை வழிபட்டு வருகின்றது என்று சித்திரிக்கின்றது. வன்மையாகக் கடவுள் மறுக்கப்படுதலும், அதே வேளையில் கடவுள் போற்றப்படுதலும் எல்லாம் வல்ல கருணைமிக்க படைப்பாளர் ஒருவர் இருக்கின்றார் என்று மெய்ப்பிக்கப்படுகிறது என்பது சமயக் கவியின் அடித்தளம். பின்னோக்கிப் பார்த்தோமானால் நாம் இயற்கை யாகவே சமயப்பற்றுக் கொண்டவர்கள் இல்லை...

Post

பொங்கல் விழா கொண்டாடவேண்டும் ஏன்? -தந்தைபெரியார்

‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும். நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும்,...

Post

முத்தம் கொடுத்தால் புற்றுநோய்: வரும் இங்கிலாந்தில் பரவும் மூடநம்பிக்கை

புற்றுநோய் எப்படி உருவாகிறது என்பது குறித்து இங்கிலாந்தை சேர்ந்த இளைஞர்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. 13 வயதில் இருந்து 24 வயதுடையவர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடந்தது. அதில் பெரும்பாலானோர் புற்றுநோய் தொடர்பாக சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அவர்களிடம் மூடநம்பிக்கை நிலவுவதும் தெரிந்தது. 6 சதவீதம் பேர் ஆண்- பெண்கள் முத்தம் கொடுப்பதால்தான் புற்று நோய் வருகிறது என்றனர். கலர் ஜெல்லி உணவுகளை சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதாக 8 சதவீதம் பேர் கூறினார்கள். குண்டாக...

Post

தீபாவளி தத்துவமும் இரகசியமும்! – சித்திரன் புத்திரன்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! வளவன் – சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே. ராம் – சரி கேள். வளவன் – வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம்...

Post

சாதி அடையாளமற்ற அமைப்பு பெரியார் திராவிடர் கழகம்

கிருட்டிணகிரியில் கழகக் கூட்டமும், ‘குடிஅரசு’ நூல் அறிமுகமும் சிறப்புடன் நடந்தன. சாதி அடையாளமற்ற அமைப்பாக பெரியார் திராவிடர் கழகம் திகழ்கிறது என்று ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பழ.நீலவேந்தன் திருச்செந்தூர் கூட்டத்தில் புகழாரம் சூட்டினார்.  திருச்செந்தூரில் 2.9.2010 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, திருச்செந்தூர் வ.உ.சி. திடலில், ‘குடிஅரசு’ நூல் அறிமுக விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்...

Post

தீண்டாமை ஒழிப்புப் பிரிவை இழுத்துப் பூட்டுவோம்! – பெரியார் திராவிடர் கழகம்

சட்டப்படி தீண்டாமை குற்றம்; ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது? தமிழ்நாட்டின் பல கிராமங்களில் தேனீர்க் கடைகளில், சுடுகாடுகளில் முடிதிருத்தும் நிலையங்களில், ரேஷன் கடைகளில், பல இடங்களில் பல வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்கின்றன. பெரியார் திராவிடர் கழகம், தீண்டாமையைப் பின்பற்றும் கடைகள், அமைப்புகளை முகவரிகளோடு பட்டி யல்களாக தயாரித்துள்ளது. தீண்டாமை நிலவும் கிராமங்கள் இருப்பதாக அரசாங்கமும் ஒப்புக் கொள்கிறது. மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் இந்தக் கொடுமையை எதிர்த்துத்தான் பெரியார் இயக்கம் தொடங்கினார். ஆனால், பெரியார் தொடங்கிய போராட்டம்...

Post

சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று

1879 செப்டம்பர் 17 ஈரோட்டில் பெரியார் பிறந்தார். பெற்றோர்: வெங்கட்ட (நாயக்கர்) – சின்னத்தாயம்மாள், உடன்பிறந்-தோர்: ஈ.வெ.கிருஷ்ணசாமி, கண்ணம்மாள், பொன்னுத்தாய். 1885 – 1889: வயது 6 முதல் 10 வயதுவரை 5 ஆண்டு பள்ளிப்படிப்பு 1895: திராவிடத்தைச் சதியால் அடக்கி ஆண்ட ஆரி-யத்தை கூர்மதியால் (தமது இல்லத்தில் நடக்கும் மதப்-பிரசங்கங்களில்) குறுக்குக் கேள்விகேட்டு பொய்யையும், புரட்டையும் கற்பனையையும் தோலுரித்து பகுத்தறிவுப் புரட்சியைத் தொடங்கிவிட்டார் இயல்பாய் இளம்வயதிலேயே. 1898: பெருவணிகர் ராமசாமி, 13 அகவை ஏழை நாகம்மையாரை...