எமது மக்களின் தார்மீக அரசியல் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே நாம் ஆயுதம் ஏந்தினோம். தற்கால தமிழ் அரசியல்வாதிகள் எம்மை மீண்டுமொரு ஆயுதப்போருக்குள் தள்ள முற்படுகிறார்கள். என மூத்த போராளி திரு.சபா அவர்கள் தெரிவிப்பு இலங்கை அரசானது இன்னொரு ஆயுதப்போரை தமிழர்கள் மீது தான் திணிக்க முற்படாது, அரசியலில் சம அந்தஸ்த்தை எமது இனத்திற்கு எந்தவித கால இழுத்தடிப்புக்களுமின்றி விரைவாக வழங்க முன்வரவேண்டும். எமது ஆயுதப்போரானது எந்தவொரு பயங்கரவாத சிந்தனைகளையும் அடிப்படையாக்க்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதல்ல.மாறாக அது எமது மக்களின் அரசியல் உரிமைகளை […]
தமிழ்
தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது ஜெனீவாவில் தாக்குதல் – மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்.
சுவிஸின் யெனீவா மாநிலத்தில் தமிழர் இயக்கத்தின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது இன்று காலை (09.05.2018) தினேஸ் எனும் நபர் தாக்குதலை நடாத்தியுள்ளார். இந்நபர் இதற்கு முன்னரும் தமிழர் இயக்கச் செயற்பாட்டாளர்கள் மீது நேரடியாகவும், சமூக வலைத்தளங்களிலும் அநாகரீகமான முறையில் வார்த்தைப்பிரயோகங்களைப் பாவித்து அச்சுறுத்தியிருந்தார் எனவும் அறியமுடிகிறது. இது தொடர்பாக தமிழர் இயக்கம் கருத்துக் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபரிற்கு தமது வேலைத்திட்டங்கள் சார்ந்து நேர்மையான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர். இதே வேளை தமிழர் இயக்கமானது தமிழீழத்தில் இடம்பெற்றுக் […]
தமிழ்த் தேசியம் கிடைப்பதென்பது வீட்டை காட்டி ஏமாற்றும் துரோகிகளால் அல்ல!!
தமிழ்த் தேசியம் கிடைப்பதென்பது வீட்டை காட்டி ஏமாற்றும் துரோகிகளால் கைகூடப்போகும் ஒரு நிகழ்வு அல்ல!! – தொலைநோக்கு..! தவறான சிந்தனைகளை எமது மக்கள்மத்தியில் தந்திரமாக பரப்பிவிட்டு இன்று பழைய துரோகிகள் அனைவரும் அவரவர் தத்தமது கட்சிகளை பலப்படுத்துவதிலேயே தாம் குறியாக இருந்துவருகிறார்கள். புலிகள் அமைப்பின் ஆயுத பலவீனத்தை தமக்கு சாதகமாக்கி புலிகளின் அரசியல் சக்தியை மக்கள் மனங்களிலிருந்து அழித்து தமது பழமையான துரோக அரசியலை வேகமாக வளர்த்துவரும் இந்த துரோக கட்சிகளுக்கு, புலிகளின் மக்கள் செல்வாக்கே பெரும் […]
புலிகள் அமைப்பைவிட்டு ஓடியவர்களும், கலைக்கப்பட்டவர்களும் தம்மை முன்னாள் போராளிகளென கூறிவருவது கண்டிக்கத்தக்கது!!
புலிகள் அமைப்பைவிட்டு ஓடியவர்களும், கலைக்கப்பட்டவர்களும் தம்மை முன்னாள் போராளிகளென கூறிவருவது கண்டிக்கத்தக்கது!! தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தவர்களும்,ஆனந்தசங்கரியுடன் இணைந்தவர்களும் புலிகள் அமைப்பைவிட்டு பல வருடங்களுக்கு முன்னரே தப்பியோடியவர்கள்!! இறுதிப்போர்வரை என்பதைவிட, புலிகள் அமைப்பின் அனுமதியின்றி தப்பியோடியவர்களையும், புலிகளால் தமது அமைப்பைவிட்டு கலைக்கப்பட்டவர்களையும் போர் மெளனிப்பின் முன்னரே புலிகள் குற்றவாளிகளாகவே அடையாளப்படுத்திவந்தனர். இவற்றைவிட புலிகள் அமைப்பிலிருந்து தாமாக இடைவிலகி ஓடியவர்களும்,புலிகள் அமைப்பால் தண்டிக்கப்பட்டு கலைக்கப்பட்டவர்களும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் தாம் இருக்கும்போதே தம்மை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் போராளியென […]
தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே…..
எமது தலைவரின் நாமத்தை உச்சரிக்க உரித்துடையவர்கள் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே….. இருந்தும் உங்களில் சிலர் எமது தலைவரின் தனித்துவ பண்புகளை பின்பற்றாது ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து உங்களை தலைவரின் வளர்ப்புகளாக காட்டமுனைவது கேலிக்குரியதே. தனித்துவமாக செயற்பட்டு புலிகளுகடகான பலத்தை அரசியல்ரீதியாக பெறுவதை தவிர்த்து, ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து அவர்களை பலப்படுத்த நீங்கள் முனைவதானது உங்கள் சிலரின் தன்னம்பிக்கையிழந்த அனாகரீகமான செயலன்றி வேறொன்றுமல்ல.தமிழர்களுக்கான தற்கால அரசியல் என்பது எமது தலைவரின் சிந்தனைகளிலிருந்துதான் ஊட்டம்பெறுகின்றதென்ற உண்மை […]
புலிகளின் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன..? சிறப்பு கண்ணோட்டம்!
இலங்கை அரசின் அரசியல் அடக்குமுறையை எமது தலைவர் அவர்கள் நிராகரித்தாரேயன்றி, எமக்கான அரசியலை எமது தலைவர் அவர்கள் நிராகரிக்கவில்லை!! உலகத்தில் வாழ்ந்துவருகின்ற எந்தவொரு இனத்தவரும் தமக்கான அரசியல் எனும் மனித இயந்திரத்தை தமக்கு தமக்கு என்று தாம் கட்டியமைக்காது தமது தேசத்தையோ,அன்றி இனங்களையோ தாம் ஆட்சி செய்துவருவதாக சரித்திரம் இல்லை. இலங்கை எனும் தீவில் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அவர்களுக்கே பொருத்தமான அரசியல் கட்டமைப்புக்குள்,இனத்தால் வேறுபட்ட தமிழர்களாகிய நாம் அவர்களின் ஆட்சி முறைமையில் உள்ள “சிறுபான்மை” எனும் […]
தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வவுனியா வடக்கிற்கான வேட்புமனு நிராகரிப்பு!
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துவமாக களமிறங்கி போட்டியிடுவதென நாம் முயற்சி செய்தபோதும், எம்மால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவினை இன்று நிராகரித்திருப்பதாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வவுனியா வடக்கு பிரதேசத்தில் எமது போராளிகள் கட்சிமீது மக்களுக்கு இருந்துவந்த ஆதரவினை அடிப்படையாகவைத்தே நாம் மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானித்திருந்தோம். ஆனால் எமது வேட்பு மனு நிராகரிப்பு காரணமாக இந்த தேர்தலில் எம்மால் போட்டியிட முடியாமல்போனதையிட்டு நாம் ஏமாற்றம் […]
அரசியல் களத்திற்கு தமிழ் தேசிய போராளிகள் கட்சி தயார்!!
தமிழ் தேசிய போராளிகள் கட்சியினர் நேற்று முன்தினம் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்கள்! எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய போராளிகள் கட்சியினர்,வவவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவினை நேற்று முன்தினம் மாலை 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். இதன்போது வவுனியா வடக்கில் களமிறங்கும் தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் தலைவரான திரு.சு.கர்த்தகன் அவர்களுடன் […]
நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி
எமது அன்புக்குரிய தமிழக தொப்பிழ்கொடி உறவுகளே…. இரு நாடு ஓரு இனம் என்ற இரத்த பந்தத்தால் இணைக்கப்பட்ட நாம் நிலத்தால் பிளவுபட்டிருந்தாலும் மொழியால் நாம் ஒன்றுபட்டு எமது மொழியினதும், மக்களினதும் பூரண விடுதலைக்காக இணைந்து உழைக்கவேண்டிய அவசியத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றோம். நாம் தமிழர் கட்சியின் தலைவரான மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தமிழக மக்களாகிய நீங்கள் உங்கள் அரசியல் தலைவராக தெரிவுசெய்யவேண்டும் என்பதே தமிழ் தேசிய போராளிகள் கட்சியினதும், எமது மக்களினதும் ஆவலான எதிர்பார்ப்பாகும். இதுவரைக்கும் […]
தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை!
தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை! தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் அரசியல் பலம் நிரூபிக்கப்படுமானால் மிகவும் நேர்மையான அரசியல் பணிகளை எமது போராளிகள் மக்களுக்காக முன்னெடுப்பர்!! நாம் தற்போது நடைபெறப்போகும் உள்ளூராட்சி சபை தேர்தல் ஊடாக எமது போராளிகள் கட்சியை அரசியல் ரீதியாக பலப்படுத்தவேண்டும் என்ற அடிப்படையிலும்,எமக்கு ஆதரவான மக்களின் வினையமான வேண்டுகோளின் காரணமுமாகவே இந்த தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி போட்டியிட முடிவுசெய்தோம். எமது கட்சியின் அங்குரார்பணம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள்கூட […]