தமிழீழ விடுதலைப்பற்றாளன் குமரனுக்கு புகழ்வணக்கம்


டென்மார்க் கிரின்சட் நகரில் வசித்து வந்த குமாரதாஸ் சண்முகராசா (குமரன்) 13 -03 -2024 அன்று திடீர் உடல் நலக்குறைவால் சாவடைந்துள்ளார். குமரனுக்கு எமது புகழ்வணக்கங்கள்.
டென்மார்க்க்கு இளவயதில் புலம்பெயர்ந்து வந்த குமாரதாஸ் சண்முகராசா (குமரன்) தமிழீழ விடுதலை மீது கொண்டிருந்த பற்றினால் ஒரு இளவயது செயற்பாட்டாளனாகவே தமிழ் மக்களிடம் அறிமுகமானார். தமிழீழ விடுதலைக்கான பங்களிப்பாளர்களின் கிரின்சட் நகர தொடர்பாளராக தனது தமிழ் தேசிய பணியை ஆற்றிக்கொண்டிருந்த போது அடுத்த தலைமுறையினருக்கு எமது மொழித்திறனையும் விடுதலைப்பற்றையும் கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட மாலதி தமிழ் கலைக்கூடத்தை கிரின்சட் நகரில் ஆரம்பித்தமையில் குமரனின் பங்கு அழப்பெரியது.
தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனையில் ஆரம்பிக்கப்பட்ட கலைக்கூடம் என்ற ஆவணத்தை ஆதாரமாக கொண்டு மாலதி தமிழ் கலைக்கூடத்தை நகரசபையின் ஊடாக முடக்கப்பட்ட போது அதனை முறியடித்து மீண்டும் கலைக்கூடத்தின் செயல்பாடுகளை தொடர வளிசமைத்தமையிலும் குமரன் முன்னின்று செயல்பட்டார். மாலதி தமிழ் கலைக்கூட ஆவணம் கலைகூடத்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பயிற்றுனராலேயே நகரசபைக்கு கொடுக்கப்பட்டு தடை ஏற்பட்டது என்பது மட்டுமல்லாது கொடுத்தவரின் விபரங்களை அறிந்தவர்களிலும் குமரன் ஒருவர்.
ஆரம்பத்தில் இருந்து மாலதி தமிழ் கலைக்கூட நிர்வாக உறுப்பினராகவும் நீணடகாலம் பணியாற்றிய குமரன் தனது பிள்ளைகளையும் கலைகூடத்தில் இணைத்திருந்தார்.
கிரின்சட் நகரத்தில் மட்டுமல்லாமல் டென்மார்க் ரீதியாக இயங்கிய அனைத்து தமிழ் அமைப்புகளிலும் இணைந்து செயலாற்றிய குமரன் ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரன். டென்மார்க்கில் நடைபெற்ற பல உதைப்பந்தாட்ட போட்டிகளை முன்னின்று நடாத்திய பெருமையும் குமரனை சாரும்.
2009 இறுதியில் டென்மார்க்கில் அமைக்கப்பட்ட டென்மார்க் தமிழர் பேரவையின் ஆரம்ப செயல்பாட்டிலும் பங்களித்த குமரன் இனப்படுகொலையில் இருந்து மீண்டு வந்த போராளிகளை அரவணத்து அவர்களுடனும் சேர்ந்து செயலாற்றியிருந்தார்.
குமரனின் இழப்பினால் துயருறும் அவரது மனைவி, பிள்ளைகள் , சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அமரர் குமாரதாஸ் சண்முகராசா இற்கு மீண்டும் எமது புகழ்வணக்கங்கள்.

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

Please reload

Please Wait